
வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதனை தடுத்து நிறுத்த படையினரின் பிரசன்னம் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட அயர்லாந்தில் கிளர்ச்சிக்குழுக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் நீண்ட காலத்திற்கு பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் கிரமமான முறையில் இராணுத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் நடத்தப்பட்ட சனத்n;தாகை மதிப்பீடு தெளிவான விளக்கங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Source: http://www.saritham.com/?p=56626