
இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்போது திடீரென இது குறித்து பேசியிருப்பது பிரச்னையை திசை திருப்புவதற்கான முயற்சி தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரtடியாக பாதிக்கப்படும் என்றும், எனவே சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: http://news.vikatan.com/?nid=7467#cmt241