Wednesday, April 18, 2012

குஞ்சை ஈன்ற கோழி – சிறிலங்காவில் அதிசயம்

 கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.

இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.

இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.

கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
Source: http://www.puthinappalakai.com/view.php?20120419106024

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator