Sunday, April 22, 2012

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வவுனியாவில் ஜீப் தீக்கிரை.

வவுனியா உக்கிளாம் குளம் பகுதியில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரியொருவரின் ஜீப் வாகனம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும்  எவ்.எஸ்.டி. எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரியான பி.ரொஷான் கிருஷ்டி என்பவரின் வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டிற்கு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் வருமாறு கூறியதாகவும் தான் வீட்டிலிருந்து வெளியே செல்லாத நிலையில், ஜீப் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தீக்கிரையாக்கியதாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://thaaitamil.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator