இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்
கூட்டுறவுச் சம்மேளனத்தினால் இந்தியக் குழுவினருக்கு மகஜர் ஒன்று
கையளிக்கப்பட்டது.
இன்று காலை யாழ்.ஞானம்ஸ் ஹோட்டலில் வைத்து இதனை சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம் இந்திய குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜிடம் இதனைக் கையளித்தார்.
இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எழுதப்பட்ட இக்கோரிக்கை கடித்தின் பிரதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வட கடலோரங்களில் பல மீன்பிடி வளங்கள் காணப்படுகின்றன. அங்கு பல்வேறு வகையிலான மீன்கள் இறால்கள் கணவாய் இனங்கள் நண்டு சிங்கறால் மற்றும் கடலட்டை போன்றன பெருமளவில் காணப்பட்டன.
இவ்வியற்கை வளங்களும் அங்கு காணப்படும் முருங்கற்கற்களும் தாவர வகைகளும் அங்கு வாழும் மீனினங்களின் இனப்பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வளங்கள் எமது மீனவர்கள் பாரம்பரிய கடற்றொழில் முறைகளான மாதல்வலை மற்றும் கரை வலை மூலமும் ஆகக்கூடுதலாக 18 அடி நீளமான படகுகளைப்ப பாவிப்பதன் மூலமும் எமது இயற்கை வளங்களையும் கடல்வள இனப்பெருக்கத்தையும் பாதிக்காத வகையில் ஒழுங்கான முறையில் மீன்பிடித்து வந்தனர். இதனால் பெருந்தொகையான மீன்கள் பிடிக்கக் கூடியதாக இருந்தது.
1983 ஜீலையின் பின் தொடர்ச்சியாக நடந்த வன்முறைகள் காரணமாக 1985 இன் ஆரம்ப காலங்களில் இருந்து வடக்கின் கடலோரப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயரத் தொடங்கினர். அவர்களினல் பெரும்பாலானோர் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அனேகமானோர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்றனர்.
இவ் இடைக்காலத்தில் இந்திய மீனவர்கள் எமது கடல் வலயத்தினுள் எல்லை மீறி வந்து இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாயினர்.
1987ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து குறிப்பாக, 1992-93 காலப்பகுதியில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பத் தொடங்கினர்.
அரசாங்கத்தினது மட்டுப்படுத்தப்பட்ட உதவியுடனும் கடனுதவிகள் மூலமும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் அவர்கள் மீண்டும் தமது வாழ்வாதார தொழிலனை செய்யத் தொடங்கினர்.
அப்போது தான் தெரியவந்தது இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைக் கொண்டு எமது கடல் வலயத்தினுள் மீன்பிடித்தமையினால் எமது கடல் வளங்கள் எவ்வாறு இந்திய கடலோரக் கடல் வளங்கள் இல்லாதொழிக்கப்பட்டனவோ அதே போன்று அழிக்கப்படுகின்றன.
அவர்கள் இழுவைப்படகைப் பாவித்தது மட்டுமல்லாது தங்கூசி வலைகளையும் பாவித்து மீன்பிடிக்கின்றனர். இவ் இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் வளங்களையும் கடல் தாவரங்களையும் மற்றும் முருகைக் கற்களையும் அழிப்பதோடு மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களின் இயல்பான இடம்பெயர்வு முறையினையும் சிதறடித்து வருகின்றன.
இவை மட்டுமல்லாமல் அவர்கள் எமக்கு வாழ்வாதாரமாக விளங்கும் எமது வலைகளையும் அறுத்து எம்மால் ஈடு செய்ய முடியாத சேதத்தினை விளைவித்து வருகின்றனர்.
வடக்கே மீன்பிடித்தொழிலை நம்பி சுமார் 18 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இத் தொழில்துறை சார்ந்த மேலும் 10 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடிக்கும் செயலானது எமது மீன்பிடிக்கும் உரிமையை அத்துமீறும் ஒரு செயல் மட்டுமல்லாமல், எமது இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் சார்ந்த சட்டதிட்டங்களை மீறிய மீன்பிடி முறைமையை பாதிக்கும் செயலாகவும் அமைகின்றது.
இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் தென்னிந்திய மீனவர்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் 2004ம் ஆண்டு 2010ம் ஆண்டு நவம்பர் மாத்திலும் தென்னிந்தியாவிலும் மீண்டும் கொழும்பில் மீன்பிடி அமைச்சரின் அனுசரனையுடன் 2011ம் ஆண்டு நடுப்பகுதியிலும், கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கச்சதீவிலும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோம்.
ஆகையினால் எல்லை கடந்த இந்திய மீனவர்கள் இழுவைப் படகினைப் பாவித்து மீன்பிடிப்பது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வண்ணம் தங்களைக் வேண்டிக் கொள்கின்றோம்.
அத்துடன் இவ்வாறு எல்லை கடந்த மீன்பிடியினைத் தடுப்பதற்கு இந்திய கடலோர படையினரதும் சிறீலங்கா படையினரதும் கூட்டு ரோந்து ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் நாம் வேண்டுகிறோம் என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://184.107.230.170/

No comments:
Post a Comment