Thursday, April 19, 2012

யாழ். முஸ்லீம்களுக்கும் இந்திய வீடுகள் தேவை: அஸ்வர் எம்.பி. வலியுறுத்தல்

இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர்  இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது.


அதில் அஸ்வர் மேலும் தெரிவித்ததாவது.
48 மணித்தியாலங்களில் யாழ். குடாநாட்டிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய வீட்டுத் திட்டதற்கு முஸ்லீம்களக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து மனு ஒன்றைக் கைச்சாத்திட்டு கெழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் .கே. காந்தாவிடம் கையளித்தேன்.

இந்தியவீட்டுத் திட்டங்கள் முஸ்லீம்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்த தற்போது இலங்கை வந்திருக்கும், இந்திய நாடாளுமன்ற குழுவினர் அந்தச் சந்தர்பத்தை  பயன்படுத்த வேண்டும்.
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=56804992820473448

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator