Wednesday, April 25, 2012

இந்திய நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாக்., சோதனை


இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்துதாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையைபாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

 இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.ஷாகின் 1ன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையான ஷாகின் 1 ஏ-வை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது.

 இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என தகவல்கள் கூறுகின்றன. இந்த ஏவுகணை சோதனை செய்வதை தொடர்ந்துஇந்தியாவுக்கு முன்னரே தகவல் தெரிவித்தது, மேலும் ஏவுகணை பகுதியில் விமான சேவைகளைகுறித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யுசூப் ரசா கிலானி விஞ்ஞானிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Source:  http://tamil.yahoo.c...-085300912.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator