Monday, April 23, 2012

குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல்

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.

முன்னதாக விழா ஒன்றில் 18 வயதுக்குட்பட்ட 42 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் பிரித்வீபுரா கிராமத்துக்கு விரைந்து சென்று திருமணம் செய்ய உள்ளவர்களின் வயது குறித்த சான்றிதழை கேட்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்தனர் என கடோலி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 400 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74537

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator