![]() |
Photo: http://communicationskillstips.com/ |
எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.
அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்!
நீங்கள் வேண்டியதை அடைய வேண்டுமென்றால் கீழே உள்ள பாடி லாங்குவேஜ் பற்றிய எளிய குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். பெரியவருடனோ, சிறியவருடனோ, கணவருடனோ அல்லது நண்பருடனோ, உங்கள் முதலாளியுடனோ அல்லது உங்களோடு வேலை பார்ப்பவருடனோ, இக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்கள் சொல்வதை அவர்களை கேட்கச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கே!
- மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.
- மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
- மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
- நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
- நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
- பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
- நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
- நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
- குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
- உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
http://tamil.webdunia.com/miscellaneous/woman/articles/1204/12/1120412032_1.htm
Nalla ennankalai miha ilahuvaaha, moli theriyaathaarukku kooda body language moolam sirappaaha velippadutthalaam.
ReplyDeleteFor Examle: Neenkal bus onril payanitthukkondu irukkireerhal. innoru payani amara idam theduhiraar. Appothu satru naharnthu avarukku idam koduppathaaha udal asaivai kaatunkal. Avar nanri arithaludan vendamena kaiyasatthu selvaar. Ithu poanravai nallennatthai vithaippana. athan pinnar avar kaanum idankalil unkaludan punmuruval pooppaar. Pirahu natpaahavum maarividum.
Ithuve olukkam viluppam tharalaal athu uyirinum oampapadum enpathu.