சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி
போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம்
கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் தும்கூரில், சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று பேசினார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து, தங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியபடி, சோனியாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் தந்திரம்: உடன், கறுப்புக் கொடி காட்டிய பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. இதனால், மிகவும் பலவீனமடைந்த அக்கட்சியை பலப்படுத்தும் வகையிலும், அடுத்த ஆண்டு அங்கு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், மாநிலத்தில் அதிக அளவில் உள்ள லிங்காயத் சமுதாய மக்களின் ஓட்டுகளை கணிசமான அளவிற்கு பெறும் வகையிலும், சிவகுமார சுவாமிகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில், 105வது பிறந்த நாள் விழா கொண்டாடிய சிவகுமார சுவாமி, லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இந்த சமுதாயத்தினர் 17 சதவீதம் பேர் உள்ளனர்.
இரட்டை வேடம்: இதன் பின், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் மத்தியில் பேசிய சோனியா கூறியதாவது: சமீபத்தில் உடுப்பி - சிக்மகளூர் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது, கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை காட்டுகிறது. மற்ற அரசியல் கட்சிகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான கட்சி என்று தங்களை கூறி வந்தவர்கள், பா.ஜ.,வினர் ஊழல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதை எல்லாரும் அறிவர்.
ஒன்றுபடுங்கள்: சொந்த பலவீனம் உட்பட பல காரணங்களால், இங்கு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. மக்களின் நல்லெண்ணத்தை, தேர்தல் வெற்றியாக மாற்றும் யுத்தியும் எடுபடவில்லை. சுயலாபம் ஒன்றையே முக்கியமாகக் கருதும், தனிப்பட்டவர்களின் செயல்பாடுகள் தான் இதற்கு முக்கிய காரணம். கட்சிக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தான், காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் இங்கு ஏற்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு சோனியா கூறினார்.
http://tamil.yahoo.c...dGVzdAM-;_ylv=3

No comments:
Post a Comment