Tuesday, April 24, 2012

யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் சட்ட அங்கீகாரம்

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியிருப்புப் பகுதி ஒன்று
மத்திய கிழக்கின் மேற்குக் கரையில் மூன்று யூதக் குடியேற்றப் பகுதிகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுமார் எண்ணூறு பேர் வரை தங்கியுள்ள இந்த குடியேற்றப் பகுதிகள் 1990களிலேயே அமையப்பெற்றிருந்தன என்றாலும், இவ்வளவு காலமும் அவை உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் இருந்துவந்தன. இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவை பாலஸ்தீனர்கள் கண்டித்துளனர் என்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் தடவையாக புதிதான யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது என்ற ஒரு விளைவை இம்முடிவு ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.
பாலஸ்தீன நிலப்பரப்பில் அமைந்திருக்கக்கூடிய அனைத்து யூதக் குடியிருப்புகளும் -அவற்றுக்கு இஸ்ரேலிய அரசின் ஒப்புதல் இருந்தாலும்கூட - சர்வதேச சமூகம் அவற்றை சட்டவிரோத குடியேற்றங்களாகவே காண்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் 2010 ஆண்டு முதல் முடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"தங்களுக்கு சமாதானம் வேண்டுமா அல்லது குடியேற்ற பகுதிகள் வேண்டுமா என்பதை இஸ்ரேல் தீர்மானித்துக்கொள்ளட்டும், ஆனால் இரண்டும் அவர்களுக்கு ஒரு சேரக் கிடைக்காது" என பாலஸ்தீனத் தரப்பு தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத் தெரிவித்துள்ளார்.
Source:http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2012/02/28/120228105913_settlement_304x171_bbc.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator