Tuesday, April 24, 2012

டக்ளசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கையின் கடல் வளத்தை அழித்து வரும் தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது, இலங்கை கடற் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழையக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை கண்டித்தும் இதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டக்ளஸ் தேவானந்தா இரட்டை வேடம் போடுவதாகவும் இலங்கை, தமிழக மீனவர்கள் இடையே உள்ள நல்லுறவை குலைக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர் .

மேலும், அறிக்கையை டக்ளஸ் தேவானந்தா திரும்ப பெறாவிட்டால் 5 லட்சம் மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தப் போவதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ள

Source:http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1204/24/1120424057_1.htm

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator