நானாட்டான் இரட்டைக் குளம் முது“துகாரியம்மன் ஆலய அமைந்திருந்த இடத்தை பௌத்த வழிபாட்டுத் தலமாக மாற்றி புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் மக்களின் அடிப்டை உரிமைகள் சுதந்திரத்தையும் மீறும் செயலென அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ö தாடர்பாக மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முருங்கள் பகுதியில் மன்னார் மதவாச்சி வீதிக்கருகாமையில் அமைந்துள்ள இரட்டைக்குளம் கிராமத்தில் தனியாருக்கு அரச குத்ததையில் வழங்கப்பட்டிருந்த (அளøப் படம் னுனுரு 1433 இல் விபரிக்கப்படும்) காணியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தற்போதைய காணிக்குத்தகை உரிமையாளர்களும் அவர்களி மூதாடதையரும் 3. 12. 1946 முதல் ஆட்சிப்படுத்தியதாக அறிவிக்கப்படும் இக் காணி போர் சூழலில் படைகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன் கோயிலைப் பராமரித்த குடும்பம் இடம் பெயர்ந்து வெளியேறியது. 30. 10. 2009 இல் நானாட்டான் பிரதேசச் செயலாளர் இக் காணியை அக்குடும்பத்திற்கு கையளிக்குமாறு சிபாரிசு செய்து இருந்தும் அவர்களுக்குக் கையளிக்கப் படாமல் அதனை ஒரு பௌத்த வழிபாட்டுத் தளமாக மாற்றி ஸ்ரீமுத்துமாரியம்மனை உதாசீனம் செய்து புத்தர் சிலையையும் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இது ஒரு மதத் துவேஷச் செயல் மட்டுமல்ல இந்து மதத்தையும் தெய்வத்தையும் அவமதிக்கும் முயற்சி. இதனை அகில இலங்கை இந்து மாமன்றம் கடுமையாக கண்டிப்பதுடன் இந்து மத வழிபாட்டுத் தலங்களுக்கோ ஏனைய வழிபாட்டுத் தளங்களுக்கோ அரச அதிகாரிகளும் அரச படையினரும் இதைடயூறாகச் செயற்படுவது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் மீறும் துர்ப்பாக்கிய நிலை என்பதனையும் மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
இவ்விடயத்தில் அரசாங்கமும் சகல அரசியற்துறைத் தலைவர்களும் உடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.thinakkural.com/news/all-news/local/14295-2012-05-11-13-03-26.html
No comments:
Post a Comment