மன்னாரில் முதல் தடவையாக தென்னிந்திய இசைக்கு இணையாக "கனவுகள்" என்னும் இசைத்தொகுப்பு 13 - 05 - 2012 அன்று மிகவும் கோலாகலமாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் வெளியிடப்பட்டது.
இவிறுவெட்டு 04 பாடல்களை உள்ளடக்கியுள்ளது, இதற்கான பாடல் வரிகளை கவிஞர் மேரியஸ்.M.ராஜ்குமார் எழுதியுள்ளார் இதற்கு இசை அமைத்தவர் சிவலிங்கம் தனுஷாந்த். இளம் இசையமைப்பாளர் தனுஷாந்தின் முதல் இசைத்தொகுப்பு இதுவேயாகும்.
இதற்க்கான பாடல்களை பாடியவர்கள் J.சுரேன். G.F.சுதர்சன், S.அருள் சுதர்சன், சிவலிங்கம் தனுஷாந்த், சுஜி. இவ்விறுவெட்டை மன்னார் Sun Sonic Networks பணிப்பாளர்ளான சூசைதாசன் சுகிர்தன்( கண்ணா ), மற்றும் பாஸ்கரன் பார்த்தீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக அருட் தந்தை .அலெக்சாண்டர் பெனோ பங்குத்தந்தை செட்டிகுளம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட் சகோதரர்.ஜோசப் ஒகஸ்டின் அதிபர் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார், திரு.S.M.டிலான் சூரியன் FM நிறைவேற்று பணிப்பாளர், திரு.G.J.ரூபராஜ் கட்டிட ஒப்பந்தக்காரர் மன்னார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பாடல்களுக்கான கருத்துரையினை திரு. F.அமல்ராஜ் அவர்கள் வழங்கினார்
Sample: http://voiceofmannar.com/portfolio/mannar-videos/
[gallery link="file" columns="2"]
Source: Shaithanyan Thaneswaran
Source: http://mannar.com/
No comments:
Post a Comment