முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்திலுள்ள 17 இற்கு மேற்பட்ட பாடசாலைகள்
போதிய வசதிகளின்றி இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இப் பிரதேசத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள 17 பாடசாலைகள்
பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, பௌதீக
வளப்பற்றாக்குறை போன்றவற்றுடன் நீண்டகாலமாக இயங்கி வருகிறது.