Tuesday, April 10, 2012

விஸா இன்றி வட-கிழக்கில் தங்கியுள்ள 500 இந்தியர் குறித்து பொலிஸ் விசாரணை

விஸா இன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பல்வேறு துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 500இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் தொடர்பில் அம்மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்தார்.


இவ்வாறான இந்திய பிரஜைகள் மூவர் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு விஸா அனுமதிப்பத்திரமின்றி இலங்கையில் தங்கியோரில் சிலர் வடக்கு கிழக்கில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, மேலும் சிலர் ஆடை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
Source: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39190--500-.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator