Tuesday, April 10, 2012

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்
கிரிபத்கொடவில் வைத்து ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு, நேற்றிரவு விடுவிக்கப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேம் குமார் குணரட்ணத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக நாடு கடத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட்ட யு.எல் -314 விமானம் மூலம் கோலாலம்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்று விமானத்தில் பயணத்தை தொடர்வார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பு வழித்துணையுடன், கடுமையான காவல்துறை பாதுகாப்புடன் குணரட்ணம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் ஏற்றி விடப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்லும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator