Tuesday, April 24, 2012

விரைவில் உயர்தரப் பரீட்சை மீள்திருத்த முடிவுகள்

ந.ஜெயகாந்தன்

கடந்த டிசம்பர் மாதம் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் விடைத்தாள் மீள் திருத்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாத முடிவிற்குள் மீள்திருத்த பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்க முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் 26 ஆம் திகதி வெளியாகின. இந்நிலையில் வெளியாகிய பெறுபேறுகளில் குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு அவ்வாறு குளறுபடிகளேதும் இடம்பெறவில்லை மாவட்ட தர நிலைகளை நிரல்படுத்தியதில் மாத்திரம் தவறுகள் இடம்பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதேவேளை வழமை போன்று பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியதும் விடைத்தாள்களை மீள்திருத்தத்திற்கு உட்படுத்த எண்ணும் பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் வழமைக்கு மாறாக அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் விடைத்தாள்களை மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் அதன் பெறுபேறுகளை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13499-2012-04-24-13-52-48.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator