Tuesday, April 24, 2012

மத கடமைகளுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: றிசாத்

பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழும் தம்புள்ள பிரதேசத்தில், தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானதும், மத வழிபாட்டுத் தளம் சேதப்படுத்தப்பட்டுள்ளதானதும் மனித நேயம் கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த மிலேச்சத்தனமான செயலை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்;,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், தெரிவித்துள்ளார்.


இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு ஒரு வரலாற்று பதிவாகும். பெரும்பான்மை சில சிங்கள மன்னர்களை கூட அன்று அரக்கர்களிடமிருந்து பாதுகாத்து தமதுயிரை தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். அவ்வாறு பெரும்பான்மையினருடன் நெருக்கமாக வாழ்ந்த முஸ்லிம்களை, இந்த நாட்டில் சுதந்திரமாக மதக் கடமைகளை செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதானது, ஆரோக்கியமானதொரு நிலையினை ஏற்படுத்தாது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் இன்று இந்த நாடு பிளவுபட்டு விடக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துடன் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அதற்காக தியாகங்களை செய்துள்ளதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார். ___
Source:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37749

4

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator