Tuesday, April 10, 2012

மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து

சிறிய மார்பு உள்ள பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களது திறமைகள் மழுங்கிவிடுகின்றன.கவர்ச்சியாக திகழ வேண்டும் என்பதற்காக பெரிய அடர்த்தியான மார்புகளை செயற்கையாக உருவாக்குகின்றனர்.மேலை நாடுகளில் சிலிக்கன் தட்டுக்கள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொள்வது இன்றைக்கு நாகரீகமாக காணப்படுகிறது. ஆனால் அவை பக்கவிளைவு கொண்டது. புற்றுநோயை தூண்டக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மார்பகத்தை பெரிதாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் புற்றுநோய் ஆபத்து இருமடங்கு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மார்பகத்தை அடர்த்தியாக்கும் சிகிச்சை செய்துகொண்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மார்பத்தை பெரிதாக்கிய 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.

அடர்த்தியான மார்பகங்களுக்ககாக செலுத்தப்பட்ட திசுக்கள்தான் இந்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றனவாம். அடர்த்தியான மார்பகங்களை பொருத்தியவர்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மார்பகத்தின் திசுக்கள் வெள்ளையாகவும், கருப்பாகவும் இருந்தது. இதில் வெள்ளை பகுதி அடர்த்தியாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட திசுக்கள். கருப்பு பகுதி கொழுப்பு திசுக்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் 50 வயது முதல் 74 வயதுடைய 1,177 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மார்பகத்தை அடர்த்தியாக்கியதன் மூலம் மெனோபாஸ் பருவம் முன்னதாகவே தொடங்கியது தெரியவந்தது.

ஆஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வந்துள்ளது. இதுவே மார்பகத்தின் கட்டி வளர்வதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மார்பகத்தை அடர்த்தியாக்குவதற்காக பொருத்தப்பட்ட திசுக்கள் மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை வியன்னாவில் நடைபெற்ற எட்டாவது ஐரோப்பிய மார்பகப்புற்றுநோய் மாநாட்டில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
Source: http://tamil.boldsky.com/health/wellness/2012/dense-breasts-can-increase-risk-cancer-aid0174.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator