Tuesday, April 10, 2012

முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க!

முத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதன் மூலம் தொண்டையின் புண்கள், உதட்டில் வெடிப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவ உலகினர் இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் இதை குணப்படுத்த இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இபிவி வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்கு பரவுகிறது.

இளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றுகிறதாம். முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளை பரப்புகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலுக்கு உடலில் உள்ள சக்தி குறைந்த உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும். எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் நமக்கு இபிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவும் என்பதால் உங்கள் துணையை முத்தமிடும்முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Source: http://tamil.indiansutras.com/2012/04/kissing-disease-mononucleosis-aid0174.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator