Tuesday, April 10, 2012

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த அரங்கேற்றப்பட்ட நாடகம் வெளிவிவகார அமைச்சு சர்வதேசத்துக்கு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே பிரேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரினாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போரினாலும் இந்தக் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக சர்வதேச சமூகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.இது தொடர்பான அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.
இந்த அறிக்கை வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா. அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இருவரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அவர்கள் கடத்தப்பட்டனரா என்பதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக நம்பகரமான ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லையெனவும் அதேவேளை, குணரட்ணத்தால் வெளியிடப்பட்டுள்ள கதையானது முற்றுமுழுதாக அவரின் சொந்தக் கருத்தாகவே இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாததொன்று என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உதாரணமாக ஏப்ரல் 7 அதிகாலை 4 மணியளவில் குணரட்ணம் கடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அது தொடர்பாக மாலை 4 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 12 மணி நேர இடைவெளி உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுது ஆட்டிகல விடயத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மறுநாள் பிற்பகல் 3.35 மணியளவில் இது தொடர்பாக பொலிஸில் முறையிடப்பட்டிருக்கிறது. ஆதலால் கிட்டத்தட்ட ஒருநாள் இடைவெளி காணப்படுகிறது. உண்மையான கடத்தலாயின் பொலிஸாரிடம் துரிதமாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கும் என்பது இங்கு அவதானிக்கப்படக்கூடியதாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12620-2012-04-10-13-52-02.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator