
மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்
[18-04-2012]
மன்னார்
மாவட்டத்தில் நேற்று 17ம் திகதி (17.04.2012) ஆரம்பிக்கப்பட்டிருக்கும்
மீள் குடியேற்ற தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு
குடும்பத்திலிருந்தும் தகவல் தரக்கூடிய ஒரு நபரை குறித்த திகதிகளில்
குறித்த இடங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச
செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள்எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும்ஆதனால் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பானதரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடனும்எமது மாவட்டம் என்ற பற்றுடனும் உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அதேவேளை குறித்த தினங்களில் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மன்னாரில்
மீளக்குடியேற விரும்பாதவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதனையும்
வேதனையுடன் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Source: MannarWin.com
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete