Tuesday, April 24, 2012

ரீ-சேர்ட் அணிந்த பயணி ஆடாக மாறிய அதிசயம்

ஹைஏஸ் வாகனம் ஒன்றின் முன் ஆசனத்தில் வழக்கத்தை விட அதிகளவான பயணிகள் இருந்ததை அவதானித்து பரிசோதித்த பொலிஸார் "ரீசேர்ட்' அணிந்த பயணி ஒருவர் ஆடாக மாறியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த "அதிசயச்' சம்பவம் நேற்று முன்தினம் மந்துவிலில் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மந்துவிலில் சென்று கொண்டிருந்த "ஹைஏஸ்' வாகனம் ஒன்றில் கொள்ளவை விடவும் அதிக பயணிகள் முன் ஆசனத்தில் இருப்பதைக் கண்ட பொலிஸார் அதை மறித்தனர்.
ஆனால், என்னே ஒரு ஆச்சரியம். முன் ஆசனத்தில் "ரீசேர்ட்' அணிந்திருந்த பயணி ஒருவர் உண்மையில் ஒரு மறியாடு என்பது பொலிஸாருக்கு அப்போது தான் தெரியவந்தது. தாம் ஆட்டை வாகனத்தில் கொண்டு செல்வதை மறைப்பதற்காகவே இவ்வாறு குறித்த ஆட்டுக்கு வாகனத்தில் இருந்தோர் ரீசேட் அணிவித்து கொண்டு சென்றுள்ளனர். 
எனினும் பொலிஸார் இதுகுறித்து விசாரித்த போது ஆட்டினை வளர்ப்பதற்காகவே  விலை கொடுத்து வாங்கிக் செல்வதாக அதில் இருந்தோர் தெரிவித்தனர். 
அத்துடன் குறித்த வாகனத்தின் சாரதிக்கு சாரதிய அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை.
மறியாட்டை கடத்தியமை, சாரதிய அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச் சாட்டுக்களுடன் கொடிகாமம் பொலிஸாரால் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் வாகனதில் இருந்த மூவருக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிவான் மூவரையும் மே இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த மூவரும் புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீளக் குடியேறியோர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=751111005424498161

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator