Sunday, April 8, 2012

வடக்கில் நிலக்கண்ணி அகற்றும் பணி ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் அமைச்சர் கூறுகிறார்

வடபகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை நிறைவுபெற்று இரண்டு மாதங்களுக்குள் மீள் குடியேற்றப் பணிகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிக்குளம் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி நிவாரணக் கிராமங்களில் தொடர்ந்தும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்  கிராமங்களில் மொத்தமாக ஆயிரத்து 623 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 469 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடும் காற்று,மழை ஆகியவற்றினால் நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது பாதிக்கப்படுகின்ற நிலையில் மீள் குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுபெற்றதும் அந்த பகுதிகளில் வீடமைப்புத் திட்டங்கள் செயற்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Source:http://www.thinakkural.com/news/all-news/local/12430-2012-04-07-19-12-54.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator