Thursday, April 19, 2012

வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,


கடந்த முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கண்காணிக்க விஜயம் செய்திருந்த இந்திய அரசியல் பிரமுகர்களை ஒரு பிரபல மலையகம் சார்ந்த தொழிற்சங்கம் மலையகத்தின் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு கூட்டி வந்து மாலை அணிவித்து அனுப்பியது போல் அல்லாமல் இம்முறை அவர்கள் தோட்டப்புறங்களுக்கும் குறிப்பாக நுவரெலிய, மஸ்கெலியா, ஹட்டன் போன்ற தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து பெரியங்கங்காணியினரால் அலைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளியினர் இன்னும் லயன் முறையிலேயே வாழ்கின்றனர். இது தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் நேரடியாக சென்று பார்வையிட்டதால் தேயிலை தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் படும் அவஸ்தையினை புரிந்து கொள்ள முடியும். மாறாக எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல்வாதிகள் சொல்வதையோ கேட்டுக்கொள்வது உண்மைக்கு புறம்பானது என மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source: http://www.adaderana.lk/tamil/news.php?nid=24642

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator