Sunday, April 22, 2012

வடக்கின் கல்வி நிலைமை பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கி வருகின்றது

வடக்கின் கல்வி நிலைமை பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வன்னிப் பிரதேச கல்வி தரம் n;தாடர்பில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும் மிகவும் குறைந்தளவான மாணவர்களே உயர்தரத்திற்காக தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 35.39 வீதமான மாணவ மாணவியரும், முல்லைத்தீவில் 4016 வீதமான மாணவ மாணவியரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 71.62 வீதமான மாணவ மாணவியர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதில் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் காரணமாக பிரதேச மாணவர்களின் கல்வி;த்தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக சாதாரண தரத்தில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய சில ஆண்டுகளில் யுத்தம் காரணமாக மாணவர்கள் உரிய கவனம் செலுத்தத் தவறியமையே சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதான ஏது என குறிப்பிட்டுள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடம்பெயர்வு, வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் மாணவர்கள் திறந்த திறமைகளை வெளிப்படுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 Source: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76477/language/ta-IN/article.aspx

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator