முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த
பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல்
ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன், இமானுவேல் சுமங்கள தேரர், மதுபான வர்த்தகர்
லக்ஸ்மன் பெரேரா எம்.பி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான
தகவல்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தற்போது முழுமையாக
கிடைத்துள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,
நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து
கலந்துரையாடுவதற்காக நேற்று (22) பகல் காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னகோனை
சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் மாத்தளை
மாவட்டத்தின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளராக பதவி வகித்த
போதிலும், பள்ளிவசால் மீதான தாக்குதலை அந்த மாவட்டத்தின் ஆளும் தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேராவை முன்னெடுத்திருந்தார்.
முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டமையினால் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பாரிய
நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மாத்திரமே இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஜெனீவா கூட்டத்தில்
தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும், முஸ்லிம் மதத் தலைவர்களும்
பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
Source: http://thaaitamil.com/
No comments:
Post a Comment