
திருமணம் நடந்த அன்றே முதல் இரவு வைத்துக்கொள்ள பாலாஜி மிகவும் வேகம் காட்டினாராம். ஆனால், உள்ளூர் ஜோதிடர் பாலாஜிக்கு கட்டம் சரியில்லை என்று முதல் இரவை தள்ளிப்போட சொன்னாராம். இரண்டு நாட்கள் வரை பொறுத்துப்பார்த்த பாலாஜி, மீண்டும் முதலிரவுக்கு தயாராகி இருக்கிறார். அப்போதும் கட்டம் சரியில்லை என்று காரணம் காட்டி முதல் இரவை ஜோதிடர் தள்ளி வைத்திருக்கிறார்.
கடைசியாக நேற்று (!24.05.2012) முதல் இரவுக்கு நாள் சரியாக இருக்கிறது என்று ஜோதிடர் தெரிவித்ததால், முதல் இரவுக்கு ஏற்பாடு நடந்தது. பாலாஜியும் தயாரானார். இந்த சூழ்நிலையில் மீண்டும் கட்டம் சரியில்லை என்று வேறொரு ஜோதிடம் மூலம் சித்ராவின் தாயாருக்கு தகவல் போனது. இதனால் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். இந்த முறையும் முதல் இரவு தள்ளிப்போகிவிடுமோ என்று மனம் நொந்தார். அலங்கரிக்கப்பட்டிருந்த முதல் இரவு அறைக்குள் நுழைந்தார். தான் அணிந்திருந்த பட்டுவேட்டியை தூக்குக்கயிறாக மாற்றி வீட்டில் உத்திரத்தில் தொங்கினார்.
பாலாஜி தூங்குகிறார் என்று காத்திருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். ஜாதகம், கட்டம் என்ற வட்டங்களில் சிக்கி ஒரு அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரை விட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [Source: http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=76357]
No comments:
Post a Comment