போலி விஸா பதியப்பட்ட கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேற எத்தனித்த சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த 5 பேருக்கு நீர்கொழும்பு பிரதம நீதிவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்தார். அபராதம் செலுத்திய பின்னர் நாடு கடத்தவும் உத்தரவிட்டார். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இவர்கள் ஐவரும் இலங்கையிலிருந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது இவர்களின் கடவுச்சீட்டு பரிசீலிக்கப்பட்ட போது அவற்றில் பதியப்பட்ட விஸாக்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அண்மையில் இவர்களின் வழக்குத் தவணையின் போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவே தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஐவருக்கும் 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதம் செலுத்திய பின்னர் அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டது.
Source: http://www.thinakkural.com