Wednesday, April 18, 2012

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 28 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் 28 கையடக்கத் தொலைபேசிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறுபட்ட நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இக் கைத்தொலைபேசிகளைக் கைப்பற்ற முடிந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொந்தமான பல தொலைபேசிகள் இருந்ததாகவும் இது எவ்வாறு இவர்களுக்குக் கிடைத்தது என்பது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவ்அதிகாரி ஏற்கனவே சுமார் மூன்று வாரத்திற்கு முன்னராக இது போன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 46 கைத்தொலைபேசிகளை கைப்பற்ற முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
http://www.neruppu.com/

சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித் திட்டம் இம் மாதம் முதல் அதிகரித்துள்ளது


Add caption
யாழ். மாவட்ட சமுர்த்தித் திட்ட பயனாளிகளுக்கு வழங்கவென இம்முறை 47 மில்லியன் ரூபா அரசினால் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் இ. சிவசிறி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எற்கனவே வழங்கப்பட்டு வருகின்ற முத்திரையின் பெறுமதியினை இம் மாதம் அமூலுக்கு வந்த புதிய திட்டத்தின் ஊடாக இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்போது யாழ். மாவட்டத்தில் தற்போது 52 ஆயிரத்து 819 சமுர்த்திப் பயனாளிகள் உள்ளனர்.
இதுவரை காலமும் இவர்களுக்கு 250, 350, 375, 415, 525, 615, 900,1500 ரூபாவாக இருந்த முத்திரையின் பெறுமதிகளாக இருந்தன ஆனால் தற்போது அதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தில் 7 பேர் பணி நீக்கம்

கொழும்பு அருங்காட்சியக திருட்டுச் சம்பவத்தை அடுத்து அங்கு கடமையாற்றி வந்த ஏழு பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


இதன்படி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுபவர்கள் மற்றும் காரியலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.



இங்கு 40 இலட்சம் பெறுமதியுடைய மிகவும் தொன்மையான கண்டி இராசதானிக்குரிய வாள், தங்கக் காசுகள் உள்ளிட்ட பல பெறுமதி மிக்க பொக்கிஷங்கள் களவாடப்பட்டிருந்தன.


இவற்றில் சில பொருட்கள் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது ஆனால் அது அதற்குரிய சாவியினைப் பயன்படுத்தி களவாடப்பட்டாதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.


அத்துடன் இச் சம்பவத்திற்கு ஒரு அரசியல்வாதியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.


பொருட்கள் களவாடப்பட்டதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும்தான்!

உண்ணும் உணவே தினசரி ஒரே மாதிரி இருந்தால் போரடித்து விடும். அதேபோலதான் தாம்பத்யத்திலும் புதிதாக புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நித்தம் நித்தம் புதுப்பிக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

மனதிற்கான உற்சாகம்

தாம்பத்ய உறவு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல மனதோடும் தொடர்புடையது. பெரும்பாலான தம்பதியர் உடல் தேவைக்காக மட்டுமே இணைவதே அவர்கள் செய்யும் தவறாகும். அதேபோல் செக்ஸ் என்பது மன ஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள்.

வவுனியா மனிக்பார்மில் இந்திய நாடாளுமன்றக் குழு

இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்று காலை வவுனியா மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
முன்னதாக இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இக்குழுவினரை வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் வரவேற்று அழைத்துச் சென்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பன குறித்து விளக்கமளித்தார்.
இறுதி யுத்தத்தையடுத்து, மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட 3 லட்சம் மக்களில் 6000 பேர் மாத்திரமே இன்னும் இங்கு மிஞ்சியுள்ளதாகவும், ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியக் குழுவினரிடம் கூறினார்.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள்

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள்

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் சித்ரவதைகளும் கொலைகளும் நடந்தமை குறித்து பிரித்தானிய அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்பதைக் கூறும் அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புதனன்று திறந்துவிடப்படும்.


பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எச்சரிக்கை! புதுவிதமான 'கடனட்டை' (Credit Card)மோசடி

"விசா காட்”, “மாஸ்ரர் காட்வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே! புதுவிதமான கடன் அட்டை மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஏமார்ந்து விடாது எச்சரி க்கையாக இருங் கள் என றோயல் வங்கி அறிவித்துள்ளது.
உங்களது கடன் அட்டைகளில் உள்ள விபரங்கள் அனைத்தையும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டுள்ள மோசடிக்காரார்கள் அதன் பின்புறத்திலுள்ள இலக்கங்களில் இறுதி 3 எண்களா ன பாதுகாப்பு இலக்கங்களையும் அறிந்து கொண்டால் தான் உங்கள் கடன் அட்டை மூலம் அவ ர்கள் பணமோசடி செய்ய முடியும். தொலை பேசி மூலம் உங் கள் பெயர் விபரங்களையும், உங்க ள் கடன் அட்டையின் பின்புறத்திலுள்ள இந்த இலக்கங் களையும் சந்தைப் படுத்தும் கொம்பனிகளிடம் வழங்குவதன் மூலம் அவர்கள் பொருட்க ளை கொள்வனவு செய்ய முடியும்.

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது.
இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன.
கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த புத்தகம் ரூ.8.61 லட்சத்துக்கு ஏலம் போனது. மொத்தமாக காந்தி சம்பந்தப்பட்ட பொருட்கள், ரூ.82 லட்சத்துக்கு ஏலம் போனதாக முல்லாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
http://www.seithy.co...&language=tamil

Diversity Visa results will be available after May 1, 2012

DV 2013 Program: Beginning on May 1, 2012, all entrants may check the status of their entry.
Entrant Status Check will be the ONLY means of informing you if your entry was selected or not. All entrants, including those NOT selected, may check the status of their entries through the Entrant Status Check on the E-DV website www.dvlottery.state.gov. Entrants will need to use the information from their confirmation pages saved at the time of entry.


IMPORTANT NOTICE: If you have lost your confirmation information, you will not be able to check your DV entry status. We will not be able to resend the confirmation page information to you.
Source: http://travel.state.gov/visa/immigrants/types/types_1322.html#status

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

இலங்கையில் பொருத்தப்பட்ட கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்கள் 10 இயங்கவில்லை கடந்த வார பூமி நடுக்கத்தில் தெரிந்தது

இந்தோனேஷியாவை அண்மித்த பகுதியில் கடந்த 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 10 கோபுரங்கள் செயற்படாதிருந்தமை  கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் அன்றைய தினம் கடல்கோள் எச்சரிக்கைக் கோபுரங்கள் செயற்படவில்லை என கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து குறித்த 10 கோபுரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இடர்  முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் கரையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள 74 கடல்கோள் எச்சரிக்கை கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் பணிகள் பூரண திருப்தி- சபாநாயகரின் விருந்தில் இந்திய குழு

சிறிலங்கா அரசின் பணிகளில் தாம் பூரண திருப்தி அடைவதாக இலங்கைக்கு சென்றிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழு இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராசபக்ச வழங்கிய விருந்தில் கலந்து கொண்டு தெரிவித்தனர். இன்று நண்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு சென்ற இக்குழுவினருக்கு சபாநாயகர் சமல் ராசபக்ச விருந்து வழங்கினார். தமக்கு வழங்கிய விருந்திற்கு நன்றி தெரிவித்த இக்குழுவின் தலைவி சுஸ்மா சிறிலங்கா அரசின் பணிகளில் தாம் பூரண திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இக்குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடினர். ‘இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும்.

தற்கொலைக் கூடங்களாகும் கல்விக்கூடங்கள்-வாரம் ஒரு தற்கொலை

சென்னை: தமிழகக் கல்விக் கூடங்கள் தற்கொலைக் கூடங்களாக மாறி வருகின்றன. இந்த ஆண்டில் வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை சரமாரியாக தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் மாணவர்களுக்கு எதார்த்தமான சூழ்நிலையை பழக்காததே. காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ எதையும் தாங்கிக்கொள்ள இயலாமல் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைதான்.

பணத்தை வாங்கிக் கொண்டு மார்க் வாங்குவது குறித்து கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடங்களில் தோல்வியை தைரியமாக எதிர்கொள்வது குறித்த வாழ்க்கையில் எதார்த்தத்தை கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சீனாவை அழிக்க கூடிய அக்னி ஏ ஏவுகணையை இந்தியா இன்று சோதித்துள்ளது!

5ஆயிரம் கிலோ மீற்றர் வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி ஏ ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையால் சீனா முழுவதையும் இந்த ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி ஏ ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே வைத்துள்ளன.
அக்னி ஏ ஏவுகணையின் மூலம் சீனா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட தாக்க முடியும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.thinakkathir.com/?p=34771

கற்பிட்டி கடற்பரப்பில் அச்சம்! அதிசயம்!! நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள்

இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக  இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில்  இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.
கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலை வாகனம் விற்பனைக்கு

gatorbike.jpg
முதலைகளின் மோசமானது அலிகேட்டர். இறந்துபோன அலிகேட்டர் ஒன்றின் தோல் மற்றும் உடல் பாகங்களை மண்ணில் புதைத்து ஒன்றுக்கும் உதவாமல் போகச்செய்வதை விட இரண்டு சக்கர வாகனத்தில் பொருத்தினால் என்ன? இப்படி யோசித்த ஜிம் ஜாப்லன் (45) கேட்டர் பைக் என்றழைக்கப்படும் இந்த இரண்டுசக்கர வாகனத்தை டிசைன் செய்தார்.
ப்ளோரிடாவில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வரும் இவர், விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு நன்கொடை வசூலித்துத் தரும் நோக்கத்தில் இந்த வித்தியாசமான வாகனத்தை
விற்பனைக்கு ம் விட்டிருக்கிறார். இந்த வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.36 லட்சம் தான் என்றாலும் நன்கொடை மூலம் ரூ.54 லட்சம் வரை திரட்ட திட்டம். அதற்காக இவர் இந்த வாகனத்தில் ஜம்மென்று ஏறிக்கொண்டு, தான் காப்பாற்றிய பர்மா மலைப்பாம்பையும் தோளில் சுற்றிக்கொண்டு வலம் வருகிறார். ரூ.5400 வீதம் 1000 சீட்டுகளை, பார்ப்பவரிடம் எல்லாம் வேகமாக விற்று வருகிறார் ஜாப்லன்.
gatorbike1.jpg
10 அடி நீளமுள்ள இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முதலையின் உடல் பாகங்களில் தலையைத்  தவிர மற்றவற்றை கழட்டி எடுக்கமுடியும். தலையின் பின்பக்கத்தில்  வேகம் காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் குலுக்கலில் யாரோ ஒருவருக்கு சொந்தமாகப் போகிறது இந்த வித்தியாசமான மோட்டார் பைக்.
Source: http://www.tamilvanan.com/content/category/american-news/

அதிகமா கூல்டிரிங்க் குடிக்காதீங்க! இதயத்துக்கு ஆபத்து !!

இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் சில்லென்று குடித்தால் போதுமே என்று தோன்றுவதால் தினசரி இனிப்பு கலந்த கூல்டிரிங்ஸ்களாக குடிக்கின்றனர். இப்படி தினசரி கூலாக குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,

செல்போனில் உலா வரும் ஆவி


தூத்துக்குடியில் செல்போனில் பதிவாகியுள்ள மர்ம உருவ படத்தினால் ஆவி உலா வருவதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவு பகுதியில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 14ம் தேதியன்று இரவு செல்போனில் அவரது நண்பர் படம் எடுத்தார். அதில் அவருக்கு படத்திற்கு பின்னால் மர்ம உருவம் ஒன்று அந்தரத்தில் நிற்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது சினிமாவில் வரும் ஆவி, பேய் உருவம் போல இருந்துள்ளது.

தமிழக மக்களின் புறக்கணிப்பால் கப்பல் சேவை நிறுத்தம்



கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம்
தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து
கடந்த நவம்பர் மாதம் 18-ந் திகதியுடன் நிறுத்தப்பட்டது.
.
இந்தநிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் வரும்
19-ந் திகதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்பு கழகம் அறிவித்தது.

சிறிலங்கா ஆட்சியாளர் மீதான எதிர்ப்பும் இந்த பயண புறக்கணிப்பிற்கு
முக்கிய காரணங்களில் ஒ ன்றாகும். சிறிய கப்பல் இயக்கப்படும் என்ற
அறிவிப்புக்கு பிறகு இலங்கை செல்ல இதுவரை யாருமே முன்பதிவு செய்யவில்லை.

சாமான்யர்களையும் சாதிக்க வைக்கும் காதல்!

காதல் என்பது என்ன என்று தெரியாமலேயே இன்றைக்கு பலரும் காதல் வயப்படுகிறார்கள். ஆண், பெண் இடையே நிகழும் ரசாயன மாற்றம்தான் காதல் என்கின்றனர் சிலர். காதலை புதிர் என்றும் அது ஒரு மாயம் என்பதும் ஒருசிலரின் கூற்று. காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது பலரது வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் சிலர் காதலை வர்ணிக்கின்றனர்.

ஆனால் “காதல் ஒருவரை தொடும்போது அவர் கவிஞராகிறார்” என்கிறார் தத்துவஞானி பிளாட்டோ. “இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது” என்கிறார் வால்டேர். நம்முடைய கவிஞர் வைரமுத்துவோ “காதல் வந்தால் கையெழுத்து அழகாகும்” என்கிறார். எது எப்படியோ காதல் வயப்பட்டவர்கள் தங்களின் காதலில் வெற்றி பெற நிபுணர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். காதலிப்பவர்கள் அதை படித்துப் பாருங்களேன்.

இந்தியாவைப் போல அதிகாரப்பகிர்வு அவசியம் – இந்தியக் குழுவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியது


[ புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012, 01:17 GMT ] [ தா.அருணாசலம் ]
 அதிகாரங்கள் இல்லாத அதிகாரப்பகிர்வினால் எந்தப் பயனும் இல்லை என்றும், இந்திய முறைமையில் மாநிலங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது போன்று மாகாணசபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று தாஜ் சமுத்ரா விடுதியில் சந்தித்தனர்.

மன்னார் வீதிப் போக்குவரத்து பொலிஸார் விசித்திரிரமான முறையில் இலஞ்சம் அறவீடு

மன்னாரில் கடமையாற்றுகின்ற வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் சிலர் தற்போது மக்களிடம் விசித்திரமான முறையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பணமாகவும், மதுபான வகைகளாகவும் இலஞ்சத்தை பெற்றுள்ளனர். ஆனால் தற்போது வித்தியசமான முறையில் தமது இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
துவிச்சகரகர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சிறு தவறுகள் இழைக்கும் பட்சத்தில் அவர்களை மறித்து, நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாகவும் அதற்கு கூடுதலாக தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும் கூறுகின்றனர்.

கொழும்பில் நடமாடும் கண்காணிப்புக் கெமரா முறை

  கொழும்பு நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி கொழும்பை பாதுகாப்புமிக்க நகராக்குவதற்கான வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

நடமாடும் பாதுகாப்பு கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்ட வேன் நேற்று மாலை பொலிஸ் தலைமையக வளாகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதன்போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு நகரில் பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 2010 டிசம்பர் 29 ஆம் திகதி பாதுகாப்புக் கெமராக்கள் 110 கொழும்பு நகரில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
_
source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37643

அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட "வேர்ஜின்' விமானம் _

  பிரித்தானிய கட்விக் விமான நிலையத்தில் திங்கட்கிழமை விமானமொன்று விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்து அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டதையடுத்து அந்த விமான நிலையத்திலான விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

மேற்கு சஸகஸ் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ஒர்லான்டோவை நோக்கிச் சென்ற 'ஏ 330' வேர்ஜின் விமான சேவையின் விமானமே அவசர நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்படி விமான அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டதையடுத்தே அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு


தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் பல ஏக்கர் கணக்காண காணிகளில் உள்ள பனை மரங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனை மர காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரத்தின் மூலம் அம்மக்கள் தமது வருமானத்தை தேடிக்கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணிகளுக்குள் செல்லுவோர் பொலிஸாரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டிச் செல்லுகின்றனர்.
திருடப்படும் பனை மரங்களை சீவி அதிகூடிய விலைக்கு விற்கின்றனர். இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு இலஞ்சப்பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தியக் குழுவின் கேள்விகளால் நிலைதடுமாறிய இலங்கை அரசு; நாடாளுமன்றில் நேற்று நடந்த சந்திப்பில் கூட்டமைப்பு, ஐ.தே.க. இணைந்து தாக்குதல்


 கொழும்பு வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினைத் தீர்வு, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நடைமுறைப்படுத்தல் விவகாரம் தொடர்பில் இலங்கைத் தரப்பிடம் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்ததால், உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி வாயடைத்து  சங்கடத்துக்குள்ளாகியது இலங்கைத் தரப்பு.
 
ஐ.தே.க., தமிழ்க் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை அடுக்கியதுடன் இலங்கை அரசின் காலத்தை இழுத்தடிக்கும் கபடத்தையும் அக்குவேறு ஆணி வேராகப் புட்டுப்புட்டு வைத்தன. இதனால் அரச தரப்பு பெரும் சங்கடத்துக்குள்ளானது.
 
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியது. இதன்போதே மேற்கண்ட சங்கடத்தை அரசு சந்திக்க நேரிட்டது.

ஜனாதிபதி மகிந்தவிற்கு அபசகுனத்துடன் ஆரம்பமான சித்திரைப் புத்தாண்டு

Posted Image
மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதியின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் ஜனாதிபதிக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த ஜனாதிபதி மகிந்த அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுகுறித்து கேட்டபோது தெரிவித்தார்.

நடு வீதியில் கடத்தப்பட்டு இலங்கை பெண் பாலியல் வல்லுறவு! – சைப்பிரஸில் அசம்பாவிதம்

இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார்.

Tuesday, April 17, 2012

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்


ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

 
திரைப்படம் என்பது அவர்தம் நினைவுப் பிரபஞ்சத்தின் பகுதியாக ஆகின எல்லாச் சமூகங்களிலும், அந்தந்தத் தலைமுறை யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் தமது ஆதர்ஷ திரைப்பட கதாநாயகியும் நாயகனும் இருக்கவே செய்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, தமிழ்நாடு என கறுப்பு வெள்ளைத் திரைப்பட யுகம் என்பது பசுமையான நினைவுகளை, ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த தலைமுறையின் நினைவு வெளியில் துயரங்களாகவும் சந்தோஷங்களாகவும் கண்ணீராகவும் மோகமாகவும் விட்டுச் சென்றிருக்கின்றன.  
ஸ்ரீவித்யா எழுபதுகளில் பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கு மோகத்தையும் தாபத்தையும் வழிபாட்டுணர்வையும் அளித்த பெயர். எனது வாசிப்பு மேசைக்கு மேல் இரண்டு பெண்களின் கண்களை மட்டும் போஸ்டர் வடிவில் ஒட்டி வைத்திருந்தேன். அந்தக் கண்களுக்கு உரிய ஒருவர் தமது பிரசவத்தின் போது அகால மரணமுற்ற இந்திய மாற்றுச் சினிமாவின் அபூர்வ நடிகையான ஸ்மிதா பாடீல். பிறிதொருவர் ஸ்ரீவித்யா.  
சமூக மாற்றம் தொடர்பான புரட்சிகர உணர்வென்பதும், தார்மீகக் கோபம் என்பதும் அந்த வயதில் மனோரதியமானதும் கனவு மயமானதும்தான். மோகமும் துயருமாக இந்த இரு பெண்களதும் கண்கள் எனக்குள் ஏற்படுத்திய கனவுமயமான, மங்கலான மனோரதிய உணர்வைத்தான், எனக்குக் கறுப்பு வெள்ளை வடிவத்தில் வந்த, பிடரிமயிர் சிலிர்த்தபடியிலான சே குவேராவின் தொப்பியில் ஜொலித்த நட்சத்திர பிம்பமும் உருவாக்கியது.

இலங்கையில் இணையத்தள குற்றங்கள் தொடர்பாக 800இற்கும் அதிகமான முறைப்பாடுகள் _

  பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலையமைப்புகள் மற்றும் இணையத்தளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரையிலான மூன்றரை மாதக் காலப்பகுதியில் 800இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கீழ் இயங்கும் கணினி அவசர பொறுப்புக் கூறலுக்கான தயார்நிலைக் குழு அறிவித்துள்ளது.

இணையத்தளங்களினூடான பாலியல் குற்றங்கள் மற்றும் பலாத்காரமாக பணம் பறித்தல் தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவற்றில் பேஸ்புக் தொடர்பான குற்றச் செயல்களே அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் அக்குழுவின் செயற்றிட்ட முகாமையாளர் லக்ஷான் சொய்சா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

"அதிகாரம் இல்லாத அதிகாரப் பரவலாக்கம் பயன் தராது"



இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் எவ்விதமான அச்சுறுத்தலுமின்றி, நீடித்திருக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வின் மூலம் கண்ணியமாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்து உரையாடிய போதே கூட்டமைப்பினர் இதை வலியிறுத்தியுள்ளனர்.

முறைப்பெண்ணுடன் கல்யாணம் நடந்தது போல் போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி: முறைப் பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் அந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது போல் போஸ்டர் அடித்து ஒட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தொட்டிக்காரன் விளையைச் சேர்ந்தவர் மந்திரம் மகன் குமார். அவர் மதுரையில் உள்ள தனியார் அழைப்பிதழ் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது உறவினர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதி உதயநேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் குடும்பத்துடன் மதுரையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.

இணைய போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவும் சீனாவும்

track_1.5வாஷிங்டன்:  மேற்குலக அரசாங்கங்கள் மற்றும் பாரிய வர்த்தகங்கங்கள் மீதான சீனாவின் திட்டமிட்ட இணையத் தாக்குதல்கள் குறித்த எதிர்ப்புகள் வாஷிங்டனில் வலுவடைந்திருக்கும் நிலையில் சீனாவும் அமெரிக்காவும் ஜாக்கிரதையான யுத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இராஜாங்கத் திணைக்கள மற்றும் பென்டகன் அதிகாரிகள் தமக்கு சமமான பதவிகளிலுள்ள சீன அதிகாரிகளுடன் கடந்தவருடம் இரண்டு யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இரு தரப்பினரிடையேயுமான இராணுவ ஆக்கிரமிப்புகள் உணரப்பட்டாலோ அல்லது இருதரப்பும் இலக்கு வைக்கப்பட்டாலோ எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது அல்லது தடுப்பது போன்ற முறைமைகளை இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் அடுத்த அமர்வானது மேயில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"13+' உறுதியளித்து 3 வருடங்கள்



பொருளாதார அபிவிருத்தி போன்றே வட மாகாண சபைத் தேர்தல் உட்பட அரசியல் ரீதியான மேம்பாடும் மிகவும் அவசியமானதென சுட்டிக்காட்டியுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் இலங்கை அரசு பெற்றெடுத்த குழந்தையான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கொழும்பு முழுமையாக அமுல்படுத்துமென எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 13+ வழங்கத் தயாரென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அது தொடர்பான முன்நகர்வு எதனையும் பார்க்க முடியவில்லையே என்று இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

10 மில்லியன் ரூபாவில் யாழ்.நூலகம் அபிவிருத்தி

யாழ். நூலகத்திற்கு ஆளுநரால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவினைக்கொண்டு யாழ்.நூலகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இன்றைய தினம் யாழ்.நூலகர் குழுவுக்கும் மாநகர சபை முதல்வர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலே இம் முடிவு எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் நூலகத்தினை மேலும் அழகுபடுத்தல், கணனிமயமாக்கல், பாதுகாப்பு கமராக்களை நூலகப் பகுதிக்குள் பொருத்துதல், மாநாட்டு மண்டபத்தை தெரிவு செய்தல், லிவ்ற் வசதி என்பவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காப்பகம், மற்றும் சுவடிக்கூடம் என்பவற்றை புதிய பிரிவுகளாக அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஜெனிவாவுக்கும் கூடங்குளத்துக்கும் தொடர்பில்லையாம் - இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு பதிலடியாகவே, கூடங்குளம் அணுஉலைக்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் அணுசக்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“மின்சார தேவைக்காக அணுஉலை அமைப்பதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஒபாமா தலைக்கு விலை அறிவித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்!

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார்.
Source: http://www.seithy.com/breifNews.php?newsID=58772&category=WorldNews&language=tamil

நோர்வேயில் 77 பேரைக் கொன்ற கொலையாளி குற்றச்சாட்டை மறுக்கிறார்!

நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் மற்றும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நோர்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோது, அதுகுறித்து பிரேய்விக் எவ்வித உணர்வையும் அங்கு வெளிப்படுத்த வில்லை.
இதேவேளை, தன்னை ஒரு புத்திசுயாதீனம் உள்ளவராகக் காட்டிக்கொள்ளவே பிரேய்விக் விரும்புவதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
http://www.seithy.co...&language=tamil

கட்டிப் பிடித்தால் கோக் குடிக்கலாம்

Coke
pic

யாழ்.பல்கலைக்கழக மாணவியின் சடலம் வவுனியாவில் மீட்பு!

வவுனியா- வேப்பங்குளம் பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து, யாழ். பல்கலை கழக 3ம் வருட மாணவியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பக்கமுள்ள கிணற்றிலிருந்தே குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர் 25 வயதுடைய மரியதாஸ் மரியஜெனற் பௌசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் வவுனியாவிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வேளை, நேற்று மாலை தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
இவரை தேடும் பணியில் ஈடுபட்ட உறவினர்கள்,  இன்று வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://www.saritham.com/?p=57329

சர்தாரியை மறுத்துப் பேசியதால் பதவியை இழக்கும் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா?

டெல்லி: பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் தனது பதவியை இழக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராஸா கிலானி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என்றார். புதிய குழு பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை.

இந்தியக்குழு அழுத்தம் தரவில்லை, 13வது திருத்தம் குறித்தும் பேசவில்லை – ஜி.எல்.பீரிஸ் தகவல்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்,

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம்.
இந்த நடைமுறைப்படுத்தலுடன் தொடர்புடைய அமைப்புகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அமெரிக்காவிடம் தனி ஈழ வாக்கெடுப்பு கோரிக்கை! முந்திக்கொண்டு கலைஞர் ஆதரவு

தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)



 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.
அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)

 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள்.

 அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.


இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முதியவரை மீட்டுவர சொன்னதன் பேரில் குப்பையில் கிடந்த அந்த முதியவர் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்த முதியவருக்கு முதலில் குடிக்க தண்ணீரும், உண்ண உணவும் கொடுக்கப்பட்டது. குளிக்க வைத்து திருத்துறைப்பூண்டி மருத்துவமணைக்கு அனுப் பிவைக்கப்பட்டார்.

 மருத்துவமணைக்கு செல்லும் முன்பு தனது பெயர் மூசா. தூன் இந்துவாக பக்கிரிசாமியாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவன்.

என்னை என் பிள்ளைகள் விரட்டிவிட்டார்கள்.  அதனால் தான் இப்படி குப்பையில் கிடந்தேன் என்றார் மூச்சு வாங்கியவாறு.

 இந்த மனித நேய சேவை செய்த சிறப்பு சப் இன்ஸ்அபக்டர்களை பொதுமக்கள் பாராட்டித்தான் சென்றார்கள்.
 Source:http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74231


பாகிஸ்தானிலிருந்து ஒசாமா குடும்பம் நாளை நாடு கடத்தப்படுகிறது

இஸ்லாமாபாத்: அல் குவைதா இயக்கத் தலைவராக இருந்த பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நாளை நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல் குவைதா இயக்கத் தலைவர் பின்லேடனை 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிரடிப்படை சுட்டுக் கொன்றது. அதன் பிறகு ஒசாமாவின் 3 மனைவிகளும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தான் அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக சீனா- பிலிப்பைன்ஸ் இடையே பதற்றம்

மணிலா: தென்சீனக் கடல் உரிமை தொடர்பாக கடல்சார் பிரச்சனைகளுக்கான சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிட பிலிப்பைன்ஸ் நாடு முடிவு செய்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்சீனக் கடலின் ஸ்கார்பரோ தீவுப் பகுதியில் சீனா உரிமை கோருவதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடப் போவதாகவும் சீனா தமது தரப்பு வாதத்தை தீர்ப்பாயத்திடம் எடுத்துச் சொல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா-பிலிப்பைன்ஸ் மோதல்

புள்ளயைப் பார்த்து கொன்னுடுவேன்னு சொல்லாதீங்க, ப்ளீஸ்!

எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகத்தான் பிறக்கின்றனர். சமுதாயத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெற்றோர்களுக்கு பங்குண்டு ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்வதே பெற்றோர்களைப் பார்த்துதான். எனவே குழந்தைகளுக்கு ரோல்மாடலாக திகழவேண்டிய பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

தேவையற்ற விமர்சனம்

நம்முடைய நண்பர்களுக்கு நாம் செல்லப்பெயர் வைத்திருக்கலாம். அந்தப்பெயரை குழந்தைகள் முன்னிலையில் சொல்லி விமர்சிப்பது தவறான பழக்கம். ‘முட்டைக்கண்ணன்’ என்று பெயர் வைத்திருந்தால் அதை கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும் குழந்தைகள், அடுத்தநாள் நண்பர் வரும்போது முட்டைக்கண்ணன் அங்கிள் வந்திட்டார் என்று கூற வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கை.

இலங்கையில் 30 வருடமாகவே தமிழர்கள் அகதிகளாகத்தான் உள்ளனர்-பசில்

கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அகதிகளாக இருப்பது 30 வருடமாக இருக்கும் ஒன்றுதான். இருப்பினும் இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறுகுடியமர்த்தி விட்டோம் என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை போயுள்ளது. அங்கு இன்று தங்களது முதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் பசில் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர். காபி, டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து இந்திய எம்.பிக்களை உபசரித்தார் பசில். பின்னர் அவர் இந்தியக் குழுவினரிடம் பேசுகையில்,

வடக்கு கிழக்கில் இதுவரை 49,507 வீடுகள் நிர்மாணம்; உலக வங்கியின் உதவியுடன்

news
 வடக்கு, கிழக்கு வீடமைப்பு மீள் நிர்மாணத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது 49 ஆயிரத்து 507 வீடுகளின் நிர்மாண வேலைகள் முடிவடைந்து அவை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று திட்டப் பதில் பணிப்பாளர் க.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
உலக வங்கி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக இந்தத்திட்டத்துக்கு நிதியை வழங்கியிருந் தது. தலா 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபா இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு அவர்களுடைய பங்களிப்பையும் இணைத்து இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு மாகாணங்களுக்குமான வீடமைப்பு ஒதுக்கீடு 50 ஆயிரத்து 91 ஆகும். எனினும் 572 பயனாளிகளுக்கான வீடமைப்பு உதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மீளக்குடியமராமை, இந்தியா வுக்குப்புலம் பெயர்ந்தமை, பகுதி வீட்டுடன் காணி விற்கப்பட்டமை, உள்ளூர் இடப்பெயர்வு, காணிப் பிணக்கு, பயனாளிகளின் இறப்பு, கட்டிய வீடுகள் போரினால் அழி வுற்றமை, மிகவும் நலிவடைந்தமை ஆகிய 8 காணரங்களுக்காகவே இவை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் இனத்தவருக்கே வழங்கவேண்டுமாம்;முஸ்லீம் காங்கிரஸ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்ய வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

Monday, April 16, 2012

நாட்டில் டெங்கு பரவும் அபாயம் -சுகாதார அமைச்சு எச்சரிக்கை

news
இலங்கையில், இவ்வருடம் ஆரம்பித்து,  மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு நோய் தாக்கத்திற்கு 9657 பேர் உள்ளாகியதுடன்,  43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இந்த நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களெனவும்,ஜனவரி மாதத்தில் நாட்டில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு . தெரிவித்துள்ளது.
 
தற்போது, நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது.எனவே சுற்றுப்புற சூழலை பாதுகாக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள்

இன்று சார்லி சாப்ளின்(ஏப்ரல் 16) பிறந்த நாள் அதை முன்னிட்டு....
ரு காட்சி…
பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.
அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.
இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..

அவசரமா 'சாப்பிட' இதென்ன 'பாஸ்ட் புட்டா'? ரசிச்சு அனுபவிங்க!

இல்லற வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே உறவின் போது இருவருமே ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம். உறவானது மன அழுத்தத்தை போக்கும் மருந்து எனவே உறவின் போது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக ‘கூகுள் ட்ரென்ட்ஸ்’ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்து, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார்க் கடலில் டைனமைட் வெடித்ததில் படகு மூழ்கியது மீனவர் தப்பினர்

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் ஞாயிறு மாலை நிகழ்ந்த வெடி விபத்தொன்றில் மீன்பிடிப்படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினம்  மாலை சுமார் 4 மணியளவில் மன்னார் நகரைச் சேர்ந்த 5 மீனவர்கள் சௌத்பார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துறவி இராச்சியமாகும் இலங்கை

துறவி இராச்சியமாகும் இலங்கை essay மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார்.
 மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது.
 

சுனாமி எச்சரிக்கை அன்ரனாவை திருடிய மீனவர்கள் கரைக்கு வந்த போது கைது

இந்து சமுத்திரத்தில் மிதக்கவிடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை அன்டனாவைத் திருடியது தொடர்பாக தேடப்பட்டு வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கடல் பகுதியிலேயே சுற்றித் திரிந்த இவர்கள் கடந்த 11 ஆம் திகதி சுமத்திரா தீவு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைடுத்து தென்பகுதி கரைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்கள் 5 பேரும் தெவிநுவர துறைமுகத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator