Friday, May 4, 2012

திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனை; மாணவர்கள் கற்க முடியாதுள்ளதாக விசனம்

http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/b046cf66399dd500c6838a6f36fbf6eb.jpgமல்லாகம் பகுதியில் உள்ள திருக்கோயில்களில் நாளாந்தம் தொடரும் ஒலி பெருக்கிப் பாவனையால் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுவதாக பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்
இத்தகைய செல்பாட்டை மேற்க்கொள்வது பெரும் இடைஞ்சலாக அமைந்துள்ளது.

அதிகாலையில் ஒலி பெருக்கியின் சத்தம் காணப்படுவதுடன் மீண்டும் மாலை முதல் நள்ளிரவு வரை இந்த சத்தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக இத்தகைய ஒலி பெருக்கிப் பாவனையால் மாணவர்களுடைய கல்வி குழம்புவதுடன் வயோதிபர்கள் நோயாளர்களும் கூட இரவு நேரம் நிம்மதியாக உறங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காவற்றுறையினர், ஒலி பெருக்கிப்பாவனைக்கு அனுமதி வழங்கும் போது அதிக ஒலியுடன் நீண்ட தூரத்திற்கு ஒலிபெருக்கியைகட்டி பாவிப்பதை கட்டுப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பாவித்துவிட்டு மற்றயை நேரத்தில் அதனை பாவிக்காது ஆலய சுற்றாடலில் உள்ளவாகளுக்கு மட்டும் கேட்கும் வகையில பயன்படுத்தத்தக்கவாறு அனுமதி வழங்குவார்களேயானால் பாடசாலை மாணவர்களின் கல்வி குழம்பாததுடன் வயோதிபர்களும் நோயாளர்களும் நிம்மதியாக உறங்க முடியும் எனவும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=195171027205499327

 

Our Note: மன்னாரில் உள்ள மத நிறுவனங்கள் இதனை கருத்தில் எடுக்கும் என எதிர்பார்கின்றோம்

 

 

நேர்த்திக் கடன் செலுத்திய நாய்!

http://dinamani.com/Images/article/2012/5/4/praise.jpgதருமபுரி, மே 4: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மூன்றரை வயது நாய், தனது எஜமானுடன் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்திய சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த கீழ்தும்பலஹள்ளியைச் சேர்ந்தவர் தங்கவேல் (43). விவசாயியான இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். பசு மாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாலை தினமும் சுற்றுப் பகுதி குடியிருப்புதாரர்களுக்கும், டீ கடை, பால் வியாபாரிகளுக்கும் வழங்கி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் நாயை வளர்ப்பதற்காக வாங்கி வந்தார். அதற்கு "மணி' என்று பெயர் சூட்டினார். 6 மாதம் ஆன நிலையில் அந்த நாய், தங்கவேலுடன் நன்றாக பழகிவிட்டது. பால் விற்பனைக்குச் செல்லும் தங்கவேலுடன் ஓடியே வந்ததால், நாய்க்கு தனியாக வண்டி செய்தார் தங்கவேல். மாட்டு வண்டியைப் போல நாய்க்கு ஏற்ற அளவில் மோட்டார் சைக்கிள் சக்கரங்கள் இரண்டை இணைத்து இந்த வண்டியை தயார் செய்தார். இந்த வண்டியில் தங்கவேலையும், பால் கேன்களையும் வைத்து கடந்த 2 ஆண்டுகளாக வலம் வந்தது "மணி'.

6 மாதங்களுக்கு முன் பால் விற்பனைக்கு சென்ற இடத்தில் கார் மோதி மணியின் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

கால் விரைவில் குணமடைந்தால் காரிமங்கலம் ராமசுவாமி கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தார் தங்கவேல். பொட்டுமாரனஹள்ளியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் 40 நாள்களாக தொடர் சிகிச்சை பெற்ற மணி, இப்போது நலமுடன் உள்ளது. பெரிய பாரத்தை இழுத்துச் செல்ல முடியாது என்றாலும் தனது வண்டியை பாரம் இல்லாமல் இழுத்துச் செல்லும் திறனுடன் உள்ளது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நேர்த்திக் கடனையும் செலுத்தியது. தனது வண்டியிலேயே சுவாமிக்கு மாவிளக்கு, தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருள்களை சுமந்து காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ராமசுவாமி கோயிலுக்குச் சென்ற மணி, தனது எஜமானுடன் நேர்த்திக் கடனைச் செலுத்தியது. இதை அந்தப் பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

Source: http://dinamani.com/Images/article/2012/5/4/praise.jpg

மதுரைக்கு வந்த சோதனை!

மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சன்னிதானமாக, சுவாமி நித்யானந்த பரமஹம்சர் நியமிக்கப்பட்டிருப்பது அந்த ஆதீனத்தின் தனியுரிமையாக இருக்கலாம். இந்த நியமனத்துக்குத் தடை விதிக்க நீதிமன்றமும்கூட மறுத்துவிட்டது என்றாலும்கூட, மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் எடுத்த முடிவு ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தி இருக்கிறது என்றால், பொதுமக்களைத் திகைப்பிலும் நகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு பழம்பெரும் கோயில் கோபுரம் சரிந்து விழுந்தால், பக்தர்களின் மனங்கள் பதறுவதற்கு ஒப்பானது இந்தத் தவறான வாரிசு நியமன முடிவு என்பதுதான் உண்மை.

 

சைவத் திருமடங்கள் சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக நிறுவப்பட்டவை. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்டது மதுரை ஆதீனம் என்பது வரலாறு. இந்த ஆதீனத்தின் தலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைப்பது என்பது அறிவிப்பின் மூலம் நிகழ்த்தப்படுவதல்ல.

 

சைவப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர்தான் மடாதிபதியாக முடியும் என்பது மட்டுமல்லாமல், அப்படி மடாதிபதியாக நியமனம் பெறுவதற்குப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். திருநீறு அணிந்து ருத்திராட்சம் தரித்து பஞ்சாட்சர மந்திரம் முறையாகக் குருமகா சன்னிதானத்திடமிருந்து உபதேசிக்கப்பட்டு தீட்சை பெறுவது முதல் கட்டம். கட்டளைத் தம்பிரானாக மகா சன்னிதானத்தின் ஏவல்களைக் கவனித்து, விசேஷ தீட்சை பெற்றபிறகு பூசைத் தம்பிரானாக நித்திய பூஜைகளைச் செய்து, ஒடுக்கத் தம்பிரானாகத் தன்னை உணரும் தியானப் பயிற்சியிலும் தேர்ந்த பிறகுதான் இளைய பட்டத்திற்கான தகுதியைப் பெற முடியும்.

 

இப்போதைய மதுரை ஆதீனத்தின் 292-வது குரு மகா சன்னிதானம் தனது பூர்வாசிரமத்தில் அருணகிரியாக இருந்து தருமபுரம் ஆதீனத்தில் மூன்று ஆண்டுகள் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி பெற்றவர். 291-வது மகா சன்னிதானம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் அடுத்த வாரிசு பற்றிய சூசகம் பெற்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

நித்யானந்தர் சைவ வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே ஓர் ஆதீனத்தின் வாரிசாகப் பட்டம் சூட்டுவதற்குப் போதுமான தகுதி அல்ல. ஏனெனில், சுவாமி நித்யானந்த பரமஹம்சர் ஒரு யோக குரு. வேதம், தாந்தீரிகம், யோகம் பயின்றவர். அவருக்கு சைவ சித்தாந்தத்தில் போதுமான பயிற்சி கிடையாது.

 

பக்தி மார்க்கம் அவரது வழிமுறை அல்ல. அவரது சீடர்கள் பக்தி செய்தாலும், அவரது படத்துக்குத்தான் பூஜை செய்கிறார்களே தவிர, அவர்கள் சைவ சித்தாந்திகள் அல்லர். சுவாமி நித்யானந்தரின் பயிற்சிகள் ஹதயோகம் சார்ந்தவை; சித்தர் வழிமுறை. சித்தர்கள் மனவெளி மனிதர்கள். சாதாரண மனிதர்களின் மனஒழுங்குகள் சித்தர்களிடம் கிடையாது. அவர்களும் அவர்களது பயிற்சிகளும் சமயச் சடங்குகளுக்குக் கட்டுப்படாதவை.

 

ஆனால், மதுரை ஆதீனத்தின் அடிப்படையோ, சடங்குகள், மரபுகள் சார்ந்தது. சாதாரண எளிய மனிதர்களை உருவ வழிபாட்டின் மூலம் மனதைக் கனியச் செய்து, கடைத்தேற்றம் செய்யும் பக்தி மார்க்கம். மேலும், மடாதிபதிகள் என்பவர்கள் அவர்கள் சார்ந்த திருமடங்களில் திரண்ட சொத்துகளைப் பராமரிக்கும் நிர்வாகிகளும்கூட. சைவ சித்தாந்த வகுப்புகளில் தொடங்கி, அவர்களது திருமடத்துக்குச் சொந்தமான, சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சமயச் சடங்குகளை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் கொண்டவர்கள்.

 

மதுரை ஆதீனத்தின் திரண்ட சொத்துகளை அபகரிக்க நித்யானந்தர் முயற்சிக்கிறார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நித்யானந்த தியான பீடத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. அவற்றின் சொத்துகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆகவே, ஆதீனத்தின் சொத்துகளை அவர் அழித்துவிடுவார் என்ற அச்சம் அர்த்தமில்லாதது.

 

தனது சீடர்கள் உதவியுடன் உலகம் முழுவதிலும் 40 இடங்களில் மதுரை ஆதீனத்தின் கிளைகள் தொடங்கப்படும் என்று பட்டமேற்ற நாளில் சுவாமி நித்யானந்தர் கூறியிருக்கிறார். ஒரு மதம் எவ்வாறு வழிபாட்டுக்கூடங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்பட முடியாதோ, அதேபோன்று ஒரு மடம் அல்லது ஆதீனத்தின் சமயக் கொள்கையை அதன் கிளைகளின் எண்ணிக்கையால் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. மனிதர்கள் தேடி வந்தால் அது ஆன்மிகம். மனிதர்களைத் தேடிச் சென்றால் அது வணிகம்.

 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் குருமகா சன்னிதானமாக நித்யானந்தர் தரிசனத்துக்கு வருவதும் அவரது சீடர்கள் நித்யானந்தரைப் போற்றி கோஷம் எழுப்புவதும் மதுரை ஆதீனத்துக்கு இழைக்கப்படும் அவமானம் என்பதை அவர் ஏன் உணரவில்லை? உலகளாவிய அளவில் தனது ஆன்மிகப் பணியை எடுத்துச் செல்லும் வாய்ப்புள்ள நித்யானந்தர் தன்னை ஏன் மதுரை ஆதீனமாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும்?

 

ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் அடையாளம் உள்ளது. பெயர் உள்ளது. முகவரி உள்ளது. ஆதீனங்களும் அப்படித்தான். மதுரை ஆதீனத்துக்கு ஒரு வரலாறும், தனிஅடையாளமும் பாரம்பரியமும் உள்ளது. நித்யானந்தருக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. பக்தர்கள் இருக்கிறார்கள். நித்யானந்த தியான பீடத்துக்குள் மதுரை ஆதீனம் கரைந்துவிடுவதும் தவறு. மதுரை ஆதீனத்தில் நித்யானந்த தியான பீடம் கலந்துவிடுவதும் தவறு. இவையென்ன அரசியல் கட்சிகளா ஒன்றோடு ஒன்று இணைவதற்கும் பிரிவதற்கும்? இல்லை, இதென்ன வணிக நிறுவனங்களா ஒன்றை ஒன்று விழுங்குவதற்கு?

 

பக்தர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதிலும் மக்களோடு மக்களாய் மாற வேண்டிய அணுகுமுறைகளிலும் அக்கறை கொள்ள வேண்டிய மடாலயங்கள், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி, கேலிப் பொருளாவது வேதனையிலும் வேதனை. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் சலிப்பு, மக்களின் தெய்வ நம்பிக்கையை பலவீனப்படுத்தும். இதை மதுரை ஆதீனம், சுவாமி நித்யானந்தர் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இவர்களை சரித்திரம் ருத்திராட்சப் பூனைகள் என்று எள்ளி நகையாடும்!

source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=592455&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=


மூளை வளர்ச்சி குறைந்த வர்களுக்கு நல்ல செய்தி

http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpgசெக்ஸ் என்ற வார்த்தையே ஒரு சிலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். மூளை, உடல் ஆகியவற்றை உற்சாகப்படுத்தும். அந்த வார்த்தையை போல மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் செக்ஸ்சுக்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலுறவினால் ஏற்படும் நன்மைகள்/தீமைகள் பத்தி எத்தனையோ ஆய்வுகள், பல்வேறு மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. பதின்பருவத்தினர் செக்ஸ் வைத்துக்கொண்டால் மூளை சோர்வடையும் என்று கூட ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதேபோல சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
மன உளைச்சல்
துன்பகரமான, மன உளைச்சல் தரக்கூடிய செயல்கள் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோல் இன்பம், உற்சாகம் தரக்கூடிய செயல்களை செய்தால் மூளை வளர்ச்சியின் மீது ஏதாவது தாக்கம் ஏற்படுகிறதா என்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலிகளை வைத்து பரிசோதனை செய்தனர். வயது வந்த ஆண் எலிகளுடன் உடலுறவில் ஈடுபடத் தகுதியுள்ள பெண் எலிகளை ஒரே பெட்டிக்குள், ஒரு நாளில் இருமுறை அல்லது இரு வாரங்களில் ஒரு முறை என ஒன்றாக வைத்தார்கள்.
அப்படி வைத்த எலிகளின் ரத்தத்தில் இருக்கும் மன உளைச்சலுடன் தொடர்புடைய ஹார்மோனான குளுக்கோகார்டிகாய்ட்ஸின் (glucocorticoids) அளவையும் கணக்கிட்டார்கள். மூளை வளர்ச்சி மீதான துன்பமான நிகழ்வுகளின் தாக்கத்துக்கு இந்த ஹார்மோன் காரணமாயிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார்கள் ஆய்வாளர்கள்!
படபடப்பு குறைந்தது
சோதனையின் முடிவில், கன்னி கழியாத எலிகளுடன் ஒப்பிடுகையில், செக்ஸ்/உடலுறவில் ஈடுபட்ட எலிகளின் மூளை வளர்ச்சி அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. பெண் எலிகளுடன் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவுகொண்ட எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்களின் (stress hormones) அளவு அதிகரித்துவிட்டிருந்ததாம். ஆனால், தினமும் இரு முறை பெண் எலிகளுடன் உறவு கொண்ட ஆண் எலிகளின் உடலில் உளைச்சல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகரிக்கவே இல்லையாம்!.
உறவில் அதிகம் ஈடுபட்ட எலிகளிடம், எலிகளின் பொதுவான குணமான படபடப்பு, பயம் போன்றவை குறைவாக இருந்ததாம். அவை, புதிய சூழல்களில் விடப்பட்டபோது உணவை எந்த தயக்கமும், பயமும் இல்லாமல் உண்டனவாம்!
நினைவுச்செல்கள் அதிகரிப்பு
குறிப்பாக, மூளையின் நினைவுச் செயல்களுக்கு அடிப்படையாக கருதப்படும் ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதியிலுள்ள நரம்புகள், அணுக்களின் எண்ணிக்கை கூடியிருந்ததும் கண்டறியப்பட்டது. துன்பமான நிகழ்வுகளின்போது இந்தப் பகுதியின் அணுக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் தன்மையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
மூளை வளர்ச்சியை பாதிக்கும் தன்மை உடைய உளைச்சல் ஹார்மோன்களின் பாதிப்பை, செக்ஸ் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவங்களின்மூலம் மாற்றியமைக்க முடியும்” என்று தெரியவந்துள்ளதாக கூறினர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

source: http://tamil.indiansutras.com/img/2012/04/26-sex44-300.jpg

வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற மதுரை ஆதீனம்

http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/vaishnavi%20atheenam%202.jpgமதுரை ஆதினத்தின் தனி உதவியாளராக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி(திருமணமகாதவர்) நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதத்திற்கு மேலாக மதுரை ஆதினத்திற்கு உதவியாளராக இருந்த வைஷ்ணவி, கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆதின டத்தில் இருந்து காணவில்லை என்று ஆதினமும், நித்தியானந்தாவும் ரகசிய ஆலோசனை செய்து போலீசுக்கு போகாமல் தேடி வந்தார்கள்.

இந்த நிலையில் வைஷ்ணவி மாயமான செய்தி அம்பலமாகிவிட்டதால், பதட்டமானது மதுரை ஆதீன மடம். ஏற்கனவெ நித்தியானந்தாவை மதுரை அடுத்த ஆதீனமாக அறிவித்த சர்ச்சையே இன்னும் ஓயாமல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில் இந்த பிரச்சனையை வேறு வளரக்கூடாது என்று நினைத்த ஆதீனம், மடத்தை விட்டு சென்ற வைஷ்ண வியிடம் தூது மூலம் சமாதானம் பேசி மடத்துக்கே அழைத்து வந்துவிட்டதாக தகவல் வருகிறது.

சர்ச்சை - நெருக்கடிகளில் இருந்து தப்பித்து நிம்மதி காண, வைஷ்ணவியுடன் மதுரை ஆதீனம் வரும் மே 6ம் தேதி வெளிநாடு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்து வந்தார்.

ஆனால் நித்திக்கும் எதிராக போராட்டம் வலுத்து வருவதை கண்டு, வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டாராம் ஆதீனம்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை அறிவித்ததை வாபஸ் பெறும் வரை ஓயமாட்டோம் என்று உண்ண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற ஆதீனங்கள் ஒன்றினைந்து வரும் 12ம் தேதி நித்தி - மதுரை ஆதீனத்திற்கு எதிர்ப்பு தெரிவிது மாபெரும் கண்டன பேரணி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுக்கு தப்பிச்சென்றுவிட்டால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்று உணர்ந்த மதுரை ஆதீனம் அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல் வருகிறது.

-முகில்

Source: http://www.nakkheeeran.com/UltimateEditorInclude/UserFiles/vaishnavi%20atheenam%202.jpg

\

வேப்ப மரத்திலிருந்து பால் வடிகிறது

http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/komba_tree_.jpgஅநுராதபுரம் நிருபர்

மிஹிந்தலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிகுளம் பகுதியில் உள்ள பத்மசிறி என்பவரது வீட்டுத் தோட்டத்தில் வேப்ப மர மொன்றிலிருந்து திடீரென பால் வடிய ஆரம்பித்ததால் இம்மரத்தை பார்வையிடப் பெருமளவானவர்கள் வந்தவண்ணமுள்ளனர்.
அணில் உட்பட பல பிராணிகளும் வேப்பம் மரத்திலிருந்து வெளியேறும் பாலைக் குடித்ததால் வீட்டு உரிமையாளரும் பாலை எடுத்து குடித்துப் பார்த்தபோது கசப்புத்தன்மையுடன்கூடிய சுவையாக இருந்துள்ளது. வேப்ப மரம் மருந்து மூலிகை என்பதால் இப்பகுதிக்கு வரும் பலரும் இம்மரத்திலிருந்து வெளியேறும் பாலை சுவைத்துப் பார்க்கின்றனர்.

source: http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/komba_tree_.jpg

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து


http://www.seithy.com/siteadmin/upload/buddha-bahavan-jaffna150.jpgஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் (03-05-2012) வியாழக்கிழமை மன்னாருக்கு வந்த நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்ட திருக்கேதிஸ்வர பகுதிக்குச் சென்ற போது அங்கு சென்ற மன்னார் ஊடகவியலாளர்கலான எஸ்.ஆர்.லெம்பேட் மற்றும் ஜேசப் பெணான்டோ ஆகியோருடன் ஜனாதிபதியின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜி விஜய சிங்க முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் அதனை பார்வையிடச் சென்ற போது அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் இருவரையும் கண்டு விரக்தி அடைந்த ஜனாதிபதியின் ஆலோசகர் குறித்த இரண்டு பேரையும் அழைத்து கடுமையாக எச்சரித்ததோடு பௌத்த தர்மத்தில் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
பின் நீண்ட நேரம் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டதன் பின் குறித்த ஊடகவியலாளர்கள் விடப்பட்டனர். குறித்த சம்பவத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் காத்து நின்றார்.
-(மன்னார் நிருபர்)-

http://www.thinakkural.com/news/all-news/local/13963----10----.html

Sunday, April 29, 2012

சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி

சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி
போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம்

கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர்.

Papamottai GTMS School Citizen’s Rights awareness Programme

Mn Cit Com,
29-04-2012

Dear Mr.Sugumar/ Ms.Sarumathy.

Progress Report of Papamottai GTMS School Citizen’s Rights awareness Programme.
As scheduled we conducted the Sixth Awareness Programme at Manthai West AGA division at Papamottai GTMS School on 29/04/12 at 9 a.m to 4.p.m around 31 participants from seven villages attended. Among them WRDS, RDS, Religious institution members ,Released Cadres, Disabled people, Widows and resettled people from India .
The Three resource personal conducted the Fundamental Rights, Children & Women rights, IDP & Disabled Rights, How to obtain Important Documents such as Birth, Death and Marriage certificates, Register those person who returned from India etc.
There was group discussion, group work, Presentation from group leaders, Question time, and Evolution.

MANNAR SXBC SOUND PRODUCTION

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவனை கொல்ல முயற்சி: கள்ளக்காதலனுடன் மனைவி கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி ஆனந்தி (23). ஆனந்திக்கும், அதேபகுதியை சேர்ந்த சாமண்ணன் மகன் மாதையன்(25) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு தண்டனைக் குறைப்பு இல்லை – சிறைச்சாலைகள் ஆணையாளர்

Sarath_Fonseka
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டவர் என்பதால், சிறைக்கைதிகளுக்கு நன்னடத்தை அடிப்படையில் வழங்கப்படும் தண்டனைக்குறைப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
“தனது மருமகனின் நிறுவனத்துக்கு முறைகேடாக கேள்விப்பத்திர உத்தரவு வழங்கிய குற்றச்சாட்டில், சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்தது.
இந்த சிறைத்தண்டனை 2010 ஒக்ரோபரில் ஆரம்பமானது. ஆண்டு மார்ச் மாதமே இது முடிவடைகிறது.

காதல் அதிகரிக்க பேசாதீங்க..

loveஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம்.
காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலம் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.
இதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
madurai-aadheenam-muttமதுரை: மதுரை ஆதீனத்தின் மகா குரு சன்னிதானமாக நித்தியானந்தாவை அறிவித்ததற்கு இந்து அமைப்புகள் மதுரையில் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. மதுரை ஆதீனத்திற்குள் புகுந்த இந்து மக்கள் கட்சியினர், திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடினர். பதிலுக்கு நித்தியானந்தாவின் புகழை அவரது ஆதரவாளர்கள் பாடியதால் மோதல் சூழல் ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் பெண்களிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு

வரும் மே 18ம் நாள் அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.

இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள – சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர்.

வடக்கு கிழக்கை கண்காணிக்க டில்லியில் விசேட அலுவலகம்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

தேயிலை ஏற்றுமதியில் வில்லங்கம் புதிய திட்டத்தால் ஆபத்து என அச்சம் _

  வெளிநாடுகளிலிருந்து விலை குறைந்த தரமற்ற தேயிலையை இறக்குமதி செய்து இலங்கை தேயிலையுடன் கலந்து வெளிநாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றை இலங்கை தேயிலை கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வியட்நாம், இந்தோனேஷியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து விலை குறைந்த தேயிலையை இறக்குமதி செய்து இலங்கைத் தேயிலையுடன் கலந்து மீண்டும் ஏற்றுமதி செய்ய தேயிலை கவுன்சில் ஆராய்ந்தபோது இதை எதிர்த்து தேயிலை கவுன்சிலின் அப்போதைய தலைவர் மெரில் பெர்னாண்டோ தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

வன்னி மாவட்ட சுகாதாரத் துறை பணி நியமனத்தில் அரசியல் தலையீடு; கண்டித்து கூட்டமைப்பு போராட்டம் நடத்தவுள்ளது

வன்னி மாவட்ட சுகாதாரத் துறையில் பணி நியமனம் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீட்டைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வன்னி நிலம் தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளில் சுமார் 15 வருடங்களாக போருக்கு மத்தியிலும் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களை புறந்தள்ளிவிட்டு அரசியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வட மாகாண ஆளுநரிடம், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

Saturday, April 28, 2012

இலங்கையைத் தொழிலாளர்களுக்கு கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா


இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவாக கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீர தெரிவித்துள்ளார்.
தாதியர்கள், பொறியலாளர்கள், விடுதி, விமான நிலையம், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றவும் இலங்கையர்கள் இந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கு தேவையான பயற்சிகளை வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.

இறைச்சிக் கடைகளுக்கு மாடுகளை விற்ற பலர் பணத்திற்காக அலைச்சல் பல இலட்சம் ரூபா மோசடி

மன்னார் நிருபர்

மன்னார் நகரில் இறைச்சிக்கடைக்  காரர்களுக்கு மாடுகளை விற்ற பெரும் பாலானோருக்கு அந்த இறைச்சிக் கடைக்காரர்கள்  பல இலட்சம் ரூபா பாக்கியை வழங்காது ஏமாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகரிலும் ஏனைய புற நகரப் பகுதிகளிலும்  பத்திற்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் இயங்கிவரும் நிலையில்   இந்தக் கடைகளின் இறைச்சித் தேவைக்கான மாடுகள் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாந்தை மேற்கு,  மடு, கிளிநொச்சி, கரைச்சி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராமங்களில்  வதியும் கால்நடை வளர்ப்போர்களிடமும், விவசாயிகளிடமுமே  கொள்வனவு செய்யப்படுவது வழமை.

பாலியல் புகார்- பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை தலைவரான பேராசிரியர் செல்லமணி மீது பாலியல் புகார் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதுகலை முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு பேராசிரியர் செல்லமமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் செல்லமணி மீது பதிவாளர் மாணிக்கத்திடம் மாணவர்கள் புகார் செய்திருந்தனர். ஆனாலும் செல்லமணி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே செல்லமணி இத்தகைய பாலியல் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பறக்க ஆசைப்படும் மனமும் சாத்தியப்படுத்தாத சுமைகளும்








எனக்குள் ஒரு கனவு இருக்கிறது, அதை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறேன், அது ஒரு நாள் என் கைவசப்படும் சர்வ நிச்சயமாய்’ இப்படி ஒரு பெண் தன் மனதிற்குள் பதின்ம வயதில் உருவேற்றிக் கொண்டாள். ஆனால் அதற்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் களைந்தெறியவே அவளின் முழு நேரமும் பொழுதும் சரியாக இருந்தது.

மன்னாரில் கடந்த 3 வாரத்தில் 20 கிலோ கஞ்சா பிடிபட்டது

மன்னார் நிருபர்

மன்னாரில் கடந்த 3 வார காலங்களுக்குள் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் பேசாலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த மட்டும் 10 கிலோ நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவிலிருந்து படகு மூலம் மன்னாருக்கு ஹெரோயின் மற்றும் கஞ்சா ஆகியன அதிகளவில் எடுத்து வரப்படும் நிலையில் கடற்படையினர் இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்குள் கைப்பற்றப்பட்ட 20 கிலோ கஞஅசா தொடர்பில் மன்னார் பொலிஸார் பல்வேறு காணங்களில் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13724---3--20---.html

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்புநோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை கேட்பதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

மதுரைக்கு வந்த சோதனை : Nithyananda to Head World's Oldest Hindu Organization

தொன்மைவாய்ந்த சைவ மடாலயங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக அண்மையில் பாலியல் சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நித்தியானந்தா (34 வயது) நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரம் இந்தியா, இலங்கை உட்பட சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ் முஸ்லீம்கள் அரசுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் எதிராகப் போராட்டம்

இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.
பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.
மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

தம்புள்ள மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசல் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட தாக்கங்களும் மற்றும் கிளைவிட்ட பிரச்சினைகளும்

      சுரேந்திர அஜித் ரூபசிங்க இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) செயலாளர்
dambulla demo2012 ஏப்ரல் 20,வெள்ளியன்று, பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2,000 பேர் வரையிலான ஒரு கும்பல் மஸ்ஜிதுல் கஹயிரா பள்ளிவாசலை ஆக்கிரமித்து அதனை சூறையாடியதுடன், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தியது.
காவல்துறையினர், மற்றும் சிறப்பு பணிப் படையினர் ஆகியோர்களால்கூட அந்தக் குழப்பத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த பள்ளிவாசல் பௌத்த புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள ஓரிடத்தில் கட்டப்பட்டுள்ளது என்கிற காரணத்தை அடிப்படையாகக் கொண்டே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு முன்தினம் ஒரு பெற்றோல் வெடிகுண்டு அங்கு வெடிக்க வைக்கப்பட்டது ஆயினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலின்மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம் பெற்ற தாக்குதலாகும் ,கடந்த செப்ரம்பர் மாதம் பௌத்த பிக்குகள் தலைமையிலான கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியது, மற்றும் நாட்டின் பலபாகங்களிலுமுள்ள கிறீஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மத நிறுவனங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன - இவை அனைத்தும் தண்டனையிலிருந்து விதிவிலக்கு பெற்றுள்ளன.

போலி ஆவணத்துடன் வெளிநாடு செல்ல முயன்ற 21 வயது யுவதி கைது: உதவிய நபருக்கு சிறை

பிரிதொரு நபருடைய வெளிநாட்டு அனுமதிச் சீட்டை சமர்பித்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இளம் யுவதியும் அவருக்கு உதவி புரிந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று 23ம் திகதி அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலைய அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் இணைந்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மறக்கமுடியாத அந்த முதல் சந்திப்பின் போது….

காதலர்களின் முதல் சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பொழுது நடந்து கொள்ளும் முறையும், பேசும் பேச்சுக்களும்தான் காதலை தொடர்வதா? இல்லை ஒரே நாளோடு முடித்திக்கொள்வதா என்பதை தீர்மானிக்கும். எனவே முதல் சந்திப்பின் போது காதலர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தருகின்றனர் நிபுணர்கள்.

கேட்கக் கூடாதவை

கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாகிறது ரெசோ – வரும் 30ம் நாள் முதல் கூட்டம்

தமிழீழத்தை உருவாக்குவதற்காக, தமிழ்நாட்டில் ரெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர் இயக்கத்தை மீண்டும் வரும் திங்கட்கிழமை உருவாக்கப் போவதாக திமுக தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

வரும் 30ம் நாள் திங்கட்கிழமை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

ரெசோவுக்கு தலைமையேற்கவுள்ள, மு.கருணாநிதி தலைமையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம்!

'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.


'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ’ ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?

ஹிலாரி கிளின்டன் திடீர் இந்திய பயணம்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் 5ம் தேதி இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் ஜூன் 13ம் தேதி இந்திய - அமெரிக்க உறவு குறித்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அதில் ஹிலாரி பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மே 3-4ம் தேதி அமெரிக்கா - சீனா இடையே பொருளாதாரம் மற்றும் ராணுவம் தொடர்பான 4வது சுற்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க ஹிலாரி திட்டமிட்டிருந்தார். சீனா வந்தாலும், இந்திய சுற்றுப் பயணம் குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்நிலையில், திடீரென தனது பயண திட்டத்தை ஹிலாரி மாற்றி உள்ளார்.

மன்னார் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதில் சிக்கல்

தலைமன்னார் நிருபர்

மன்னார் பஸார் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் பெண்களை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் இரவு 7 மணிக்குப் பின்பே வீடு செல்ல அனுமதிப்பதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்  கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட   பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பல பெண்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் காலை 8 மணிக்கு வந்தால் இரவு 7 மணிக்கே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

Friday, April 27, 2012

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் -- யமுனா ராஜேந்திரன்


எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் யமுனா ராஜேந்திரன்
தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார்.

தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது.

பாகிஸ்தான் விமானத்தை கடத்துவதாக மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்

பாகிஸ்தானின் முன்னோடி விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்சின் விமானம் கராச்சி விமான நிலையத்திலிருந்து பகவல்பூர் வரை செல்வதற்காக புறப்பட்டது.
 
இதில் பயணித்த ஒருவர் விமானத்தை கடத்தப்போவதாக கூறியதை தொடர்ந்து விமானப் பணிப்பெண் பைலட்டிடம் தகவல் கூறினார். இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக கராச்சி விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

பிலிப்ஸின் இரு தசாப்தங்களுக்கு ஒளிரக்கூடிய மின்குமிழ் _

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?! சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள்

'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே

சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'

நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?

மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகத்தின் சிறந்த பெண் சேவை விருது 2012 முதல் முறையாக தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைத்துள்ளது

மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வழங்கும் மேற்கு சிட்னியின் சிறந்த பெண்களுக்கான விருது முதல் முறையாக தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைத்துள்ளது.
வழக்கறிஞர் டாக்டர் சந்திகா சுப்ரமண்யன் இந்த ஆண்டுக்கான சிறந்த சட்ட சேவைக்காக இவ் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவ் விருது சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பல துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு மேற்கு சிட்னியில் அவர்களின் சிறந்த சேவையைப் பாராட்டும் முகமாக மேற்கு சிட்னிப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படுகிறது.

போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?; சோனியா விசாரணை நடத்தியிருக்க வேண்டும்- சித்ரா

டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்.

தம்புள்ளை சம்பவம்! முஸ்லிம் அரசியல் தலைமைகள் நெருக்கடியில்!

தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும், இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கொழும்பில் முஸ்லிம்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

காகிதக் கப்பல் விடுவதற்காய் எமை அழைக்கும் கலைஞர் கருணாநிதி: கதிரோட்டம்

நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு அறிஞர் என்று உலகத் தமிழினமே நம்பியிருந்த கலைஞர் கருணாநிதி, உலகத் தமிழர்களுக்கே வஞ்சனை செய்த வடுக்களோடு கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது தான் தெரிந்தது அவர் பொருளோடு பேசும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல, நன்கு பொருள் சேர்க்கத் தெரிந்த ஒரு "வியாபாரி" என்பது. தமிழ் நாட்டு அரசியல் பதவி மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கு சேவை செய்வதை மறந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொத்துச் சேர்ப்பதில் செல்வாக்கை பலப்படுத்துவதிலும், துரிதமான செயற்பட்ட ஒரு "செயல் வீரன்" கருணாநிதி என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

கந்துவட்டி கொடுமை: ரூ. 2 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெண்!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டி கொடுமையால் அப்பாவி மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். கடன் தொல்லை தீர ரூ.2 லட்சத்திற்கு ஒரு பெண் தனது குழந்தையை விற்றுள்ள பரிதாபம் அங்கு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால் பலர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கார்த்தி சிதம்பரத்துக்கும் தொடர்பு - சிதம்பரம் பதவிக்கு ஆபத்து

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மகன் சில டெலிகம் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் இன்று லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன . இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது மத்திய நிதி துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். இந்நேரத்தில் இந்த பதவியை பயன்படுத்தி இவரது மகன் கார்த்தி சிதம்பரம் சில ஆதாயங்களை பெற்று கொடுத்ததாகவும், சில குறிப்பிட்ட நிறுவனங்களில் கார்த்தி பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், மேலும் அன்னிய முதலீட்டு தொகை கிளியரன்ஸ் கொடுக்க நிதி அமைச்சகம் உதவி செய்தது என்றும் கூறியிருந்தார்.

இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!

பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் மீள் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டுக்கான முதல் காலாண்டுப் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொழும்பிற்கும் - தூத்துக்குடிக்குமான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டமையும் புகலிடக் கோரிக்கையாளர் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 408 பேர் நாடு திரும்பியுள்ளதாகவும், கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதியில் 597 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

எச்சரிக்கை! இணையத்தளம், கணினியைத் தாக்கும் புதிய வைரஸ்!

இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை ஒரு வகை வைரஸ் மோசமாகத் தாக்கி வருவதாக இலங்கையின் கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கணினிப் பாவனையாளர்கள் கவனமாகச் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் கணினிக்குள் நுழையுமானால் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு ஒரு சில ஆபாச இணையத்தளங்களின் பக்கம் கொண்டு செல்வதாக கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்
http://www.dcwg.org/detect/ என்ற இந்த இணையத்தில் செல்வதன் மூலம் வைரஸ் தாக்கத்திலிருந்து கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது

Source:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37791

சிறிலங்காவில் வெளிநாட்டார் தலையீட்டை எப்படி தடுப்பது? - கொழும்பு ஊடகம்

இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டொலர்

ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயில் பண வீக்கத்தை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அப்போது அந்நாட்டின் டொலர் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக இருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது அந்த நாட்டின் பணவீக்கம் 231 மில்லியன் சதவீதமாக உள்ளது.
ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டொலர், இரண்டு அமெரிக்க டொலருக்கு சமமானது. பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அந்நாடு 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் டொலர்களை அறிமுகப்படுத்தியது.
ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டொலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன் டொலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதன் சர்வதேச மதிப்பு, ஒரு அமெரிக்க டொலர் தான்.

Thursday, April 26, 2012

வன்னிப்பிராந்தியத்தின் கல்விநிலை குறித்து கவலை தரும் ஓர் ஆய்வு

"இந்த மாணவர்கள் இடம்பெயர்ந்ததால் 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் அவர்கள் தமக்கான கல்வியைப் சரிவரப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது எங்களால் இதன் தொடர்பாதிப்பை உணரமுடிகின்றது. இடப்பெயர்வின் பின் விளைவானது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது"

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அச்செய்திக்கட்டுரையின் முழுவிபரமாவது,

அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன! - வடகொரிய ராணுவ அதிகாரி மிரட்டல்


போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய ராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சமீபத்தில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது. இதற்கிடையில், வடகொரியாவை நிறுவிய கிம் சங்கின் 100,வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை தரக்குறைவாக தென் கொரியா விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரிய ராணுவ அதிகாரிகள், தென் கொரியா மீது குண்டு வீசி 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அமெரிக்காவை தோற்கடிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்-றிசாத் பதியுதீன்!

தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள்.அவ்வாறான ஒர் சமூகத்தின் வணக்கஸ்தலத்தை இன்னுமொரு மதத்தின் பெயரால் தகர்க்க முற்படுவதானது பாராதூரமாக கண்டிக்கப்படக் கூடியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தள்ளார்.

ஐ. நா. விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய குழுவொன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரியாதையாக பாஸ் போட்டு விடு! ஆசிரியர்களை உள்ளே வைத்துப் பூட்டி மாணவர்கள் போராட்டம்!

மேற்குவங்கத்தில் உள்ள பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள கோபிவல்லபபுரம் என்ற ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பில் 90 மாண்வர்களை 'ஃபெயில்' செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பள்ளிக்குள் வைத்து பூட்டி வைத்தனர்.

நயபாசன் ஜனகல்யாண் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம்

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.

பளிச் முகத்திற்கு

சிறந்த பெறுபேறுபெற்ற முதல் 56 பாடசாலைகளுள் கொழும்பு இந்துமகளிர், வேம்படி, யாழ். இந்து, ஹாட்லி

ந.ஜெயகாந்தன்

2011 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படியில் கொழும்பு தேவி பாலிகா கல்லூரி, கம்பஹா ரத்னாவெலி மகளிர் கல்லூரி மற்றும் மாத்தளை விஞ்ஞான கல்லூரி ஆகிய மூன்றும் உயர் அடைவுமட்டங்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளன.இதேவேளை, கொழும்பு இந்து மகளிர் கல்லூரி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகியன உயர் அடைவு மட்டங்களை பெற்ற முதல் 56 பாடசாலைகளுக்குள் உள்ளடங்குகின்றன.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனக்கூறி 2.8 மில்லியன் ரூபா மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி 2.8 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரியவைச் சேர்ந்த மனோஜ் குமார என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி நால்வரிடம் தலா 7 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளார். இவர் தம்மை ஏமாற்ற முயல்வதை உணர்ந்து கொண்ட நால்வராலும் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Source: http://www.thinakkural.com/news/all-news/local/13646----28-----.html

வடக்கில் சுகாதார ஊழியர் நியமனத்தில் பாரிய முறைகேடுகள் செல்வம் எம்.பி.முறைப்பாடு

மன்னார் நிருபர்
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரி பணிமனை ஊழியர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத் தேர்வு எவையும் இடம்பெறாத நிலையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைகேடான நியமனம் வழங்கப்பட்டமை குறித்தும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசின் புதிய குடிவரவு சட்ட மாற்றங்கள் - கனடா வரும் அகதிகளின் கதி என்ன?

http://www.ekuruvi.com/newsimage/asyllum%20seekers%20L.jpgகனடிய குடிவரவு சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் கனடாவிற்குள் வரும் அகதிகள் பலர் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. அரசின் புதிய சி-31 சட்டமூலத்தின் படி இனி ஆட்கடத்தல் மூலம் கனடாவிற்குள் வந்தவர்களாக சந்தேகிக்கப்படும் அகதிகளின் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது. உடனடியாக அவர்களை கனடிய சிறைகளில் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனடிய குடிவரவு அமைச்சர் ஜோசன் கென்னி அறிவித்துள்ளார்.

மன்னார் நகர சபையின் சந்தை தெற்கு வர்த்தகர்களால் ஆக்கிரமிப்பு

தலைமன்னார் நிருபர்

மன்னார் தினச்சந்தை வியாபார நிலையத்தொகுதிக்கு முன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரது புகைப்படங்கள் கட்டவுட் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மன்னார் நகர சபையினைக் கைப்பற்றியது.
இந்த சந்தைத் தொகுதி மன்னார் நகர சபைக்குச் சொந்தமானது. இந்த சந்தைத் தொகுதியில் மன்னாரைச் சேர்ந்த 5 வியாபாரிகளுடைய கடைகள் மட்டுமே உள்ளது. ஏனைய கடைகள் அனைத்தும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களது வியாபார நிலையங்களே உள்ளன.

Wednesday, April 25, 2012

மன்னார் மாவட்டத்திலுள்ள மடு வனச் சரணாலயம் மணல் அகழ்ந்தெடுப்பது மற்றும் மரங்களை வெட்டி வீழ்த்துவது மூலம் முறையாக அழிக்கப்பட்டு வருகிறது.

மடு வனச் சரணாலயப் பிரதேசத்துக்குள் கனரக அகழ்வியந்திரங்கள் சினத்துடன் உறுமிக் கொண்டே நிலத்தை கிண்டி மரங்களை வேரோடு சாய்க்கின்றன, அதேவேளை காலை 11 மணியளவில், மேல்மட்ட விளிம்புவரை மண்  நிறைக்கப்பட்ட பாரஊர்திகள் இணைக்கப்பட்ட டிப்பர் லாரிகளை, பாதி மதுபான போதையில் திளைத்திருக்கும் சாரதிகள் சரணாலயத்தினூடே செல்லும் வீதியினூடாக ஓட்டப்போட்டி நடத்துவதுபோல அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கிறார்கள். குழிகள் நிறைந்த வீதியும் அதேபோல மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட களமும், சூழல் பாதுகாப்பு பிரதேசம் என 1968ல் அறிவிக்கப்பட்ட இந்த இயற்கை சுற்றாடலுக்கு இணைக்கப்பட்டுள்ள புதிய சேர்க்கைகள் ஆகும்.
வடபகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய முக்கியமான பிரதேசங்களைப் போலவே 21,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள மடு வனச் சரணாலயப் பிரதேசமும், அரசாங்க அனுசரணையுடன் நடத்தப்படும் திட்டமிடாத அபிவிருத்தி செயற்பாடுகளால் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்னால் மடு

ஆச்சரியப்பட வைக்கும் அதிசயச் சிறுவன்

சென்னை: கண் முன்னால் கிடக்கும் கலண்டரில் திகதி, நாள் பார்ப்பதில் கூட குழப்பம் ஏற்படும். சில விநாடி யோசனைக்கு பிறகுதான் சரியான முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், 2030 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தையும் திகதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி...’ என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலைப் பார்த்து எல்லோருமே அதிசயித்துப் போகிறார்கள்.
ஸ்ரீராம் பாலாஜி! இவன்தான் அந்த அதிசய சிறுவன். அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் படுசுட்டி என்று சொல்ல முடியாதவர். வகுப்பில் அமைதியானவன், கடுமையான உழைப்பாளி. இதுதான் அவனைப் பற்றி ஆசிரியை லதா கூறும் தகவல்.

மன்னாரில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை பொலிஸார் எச்சரிக்கை

photo:http://www.the-nri.com
மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் பெண்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதாக வெளியான தகவல்களினைத் தொடர்ந்து மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கும் மன்னார் பொலிஸாருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்தப் பகுதியில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர்களில் சிலர் யுவதிகளுடன் தவறான முறையில் நடந்துகொள்வதாகவும் பெண்களுடன் முச்சக்கர வண்டியில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்டதோடு ஊடகங்கள் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளிக்கொண்டு வரப்பட்டது.

மன்னாரில் பல பகுதியிலும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து முறைப்பாடுகள்

மன்னார், தலைமன்னார் நிருபர்கள்
Photo:http://3.bp.blogspot.com

மன்னார் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும் ஆற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்படுவதாக பொதுமக்களும் பொது அமைப்புகளும் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டம் தீவுப் பகுதியில் உள்ள கடற்கரையோரங்கள், பனைக்காடுகள், பொது இடங்கள் போன்வற்றிலு ம் பெருநிலப்பரப்பிலுள்ள அருவி ஆறு, பாலியாற்றுப் பகுதிகளிலும் அதிகளவான மண் அகழ்வு இடம்பெறுகின்றது.
இதன் மூலம் ஆற்று வெள்ளம், கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது அமைப்புகள் அரச அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளதோடு இதனைக் கட்டுப்படுத்தவும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

மதுரை - கொழும்பு விமான சேவை

மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இந்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. “ஸ்பைஸ் ஜெற்’ விமான நிறுவனத்தின் சர்வதேச விமானம் ஒன்று மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவையை தொடக்கவுள்ளது.
இது குறித்து இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான மாணிக் தாகூரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த  அமைச்சர் அஜித் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13604-2012-04-25-19-51-53.html

கிண்ணியாவில் மின்னலால் வீடொன்று சேதம்

கிண்ணியா நிருபர்

கிண்ணியா பைசல் நகரில் புதன்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதினால்  வீடொன்று சேதமடைந்துள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கடும் இடி மின்னலினால் வீட்டு மின்மானி நீர்த்தாங்கி  என்பவற்றோடு வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது.
எனினும் வீட்டிலிருந்தோர் எவருக்கும் பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. முதியோர்  இருவர் அதிர்ச்சியினால் மயங்கியதாகவும் பின்னர் இயல்பு  நிலைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13576-2012-04-25-18-57-49.html

இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையை ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் குறைத்தது

ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் (Standard & Poor's), இந்தியாவின் பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு நிலையைக் குறைத்து அறிவிப்பொன்றை விடுத்தது.

இதுவரை BBB என்ற நிலையில் இருந்த பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பு, BBB negative என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்திய அரசு, சந்தையில் கடனைப் பெறுவதற்கு செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. இந்திய ரூபாவின் பெறுமதி குறைந்தது. பங்குகளினது பெறுமதியும் குறைந்தது.

கடந்த நிதியாண்டில், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.6 சதவீதமாக மட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்தபோதிலும், அது 5.9 சதவீதமாக அதிகரித்தது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator