Monday, April 16, 2012

துறவி இராச்சியமாகும் இலங்கை

துறவி இராச்சியமாகும் இலங்கை essay மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார்.
 மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது.
 

சுனாமி எச்சரிக்கை அன்ரனாவை திருடிய மீனவர்கள் கரைக்கு வந்த போது கைது

இந்து சமுத்திரத்தில் மிதக்கவிடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை அன்டனாவைத் திருடியது தொடர்பாக தேடப்பட்டு வந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக கடல் பகுதியிலேயே சுற்றித் திரிந்த இவர்கள் கடந்த 11 ஆம் திகதி சுமத்திரா தீவு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைடுத்து தென்பகுதி கரைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்கள் 5 பேரும் தெவிநுவர துறைமுகத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா: உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவாலாகவே உள்ளது!

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

'பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்'

பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பலஸ்தீன் தனி நாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார்.

பலஸ்தீன ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் உள்ளிட்ட குழுவினரும் இலங்கை வந்திருந்தனர்.

Northern paddy lands produce record harvest

A record harvest has been reaped from paddy lands in the North during the Maha season, for the first time since the end to the war.
Around 110,000 acres had been cultivated in the North with a harvest of 80,000 metric tonnes of paddy expected.
“The farmers have commenced gathering their harvest and the government is planning to purchase 10,000 metric tonnes of paddy from the North.

ஆபீசில் பிஸியாக இருப்பது போல் காட்டி கொள்வது எப்படி?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.


2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல்
பாவ்லா காட்டவும்.

முஸ்லிம்களுக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்

......   சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.
இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

தொழில் வாய்ப்பு, சமூக வவூட்டல், நிலையான அபிவிருத்தி – பெரெண்டினாவினால் நடைமுறைபடுத்தப்படும் மாற்றங்கள் _

60,000 நுண் நிதி கடன் திட்டங்கள். 18,000 பேருக்கு தொழில்சார் பயிற்சிகள் 10,000 பேருக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு வசதிகள் 6,000 பேருக்கு தொழில் பயிற்சிகளுக்கான புலமை பரிசில்கள்.

முழுமையான சமூக அபிவிருத்திக்கு தேவையான நிதியுதவி திறமை அபிவிருத்தி தொடர்பு வலையமைப்பு, வாழ்வாதாரம் உயர்ச்சி, வாழ்க்கைச் சக்கர அபிவிருத்தி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியனவற்றின் ஒருங்கிணைவு பொதுவான நிலையான அபிவிருத்தியின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. இவை தனிநபரையும், சமூகங்களையும் வலுப்படுத்த உதவியாக உள்ளன. மேலும் கிராமிய சமூகங்களை பொருளாதார

போலி கௌரவப்பட்டங்களை வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை _

  ஜனாதிபதியால் கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டோரின் பெயர் விபரப் பட்டியலை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் போலியாக கௌரவப் பட்டங்களை வழங்குவதை தடுக்கவும் அவ்வாறு கௌரவப்பட்டங்களை பெற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனா போட்ட முத்துமாலையும் அமெரிக்கா போடும் பாதுகாப்பு வளையமும் - விவேகன்

சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது.

குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலா? உடனே கவனிங்க!

கடுமையான காய்ச்சல், மூச்சுவிட சிரமம் என குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவது நிமோனியா. நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நிமோனியா அறிகுறிகள்

நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும்.

இலங்கை விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் ஆட்டம் ஆடுகிறார் ஜெயலலிதா; தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றச்சாட்டு

news
 இலங்கை விவகாரத்தைக்களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வருகின்றது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் சிக்கிய போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி-கைவரிசை குறித்து 'ஷாக்' தகவல்கள்

சென்னை: சென்னையில் பிடிபட்டுள்ள போலி பெண் ஐ.பி.எஸ். பற்றி ஒவ்வொருநாளும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி வந்து கொண்டே இருக்கின்றன.

சென்னையில் சிக்கிய போலி பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயாபானு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே புழல் சிறையில் விஜயபானு காட்டிய ஆட்டம்தான் சுவாரசியமானது.

இலங்கை பற்றி மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதம்

கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நவம்பர் மாதம் இலங்கையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் நியமித்திருந்த மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sunday, April 15, 2012

கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தேங்காய் பால் ஊட்டச்சத்து

ஆனையிறவில் அடுத்த வருட இறுதிக்குள் உப்பு உற்பத்தி _

  ஆனையிறவு உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பிரதாய தொழிற்துறை மற்றும் சிறிய தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அஜித் ஏகநாயக தெரிவித்துள்ளார்.

இதனை மீண்டும் ஆரம்பிப்பதால் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் அஜித்ஏகநாயக மேலும் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட கால யுத்தம் காரணமாக ஆனையிறவில் உப்பு உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்பு இங்கு வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதனை ஆரம்பிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகுமென்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37612 

மொராக்கோ நாட்டு மனைவியின் தாக்குதலால் நினைவாற்றலை இழந்துள்ள இலங்கையர் ரியாத்தில் சம்பவம்

சவூதி அரேபியாவில் ரியாத்தில் வசித்து வரும் இலங்கை ஆண் ஒருவர் தனது மொராக்கோ நாட்டு மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகியதால் நினைவாற்றலை இழந்துள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. ரியாத்தில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் 54 வயதுடைய பியல் ரத்னபால என்ற இலங்கையர் 29 வயதுடைய சயிம் என்ற மொராக்கோ நாட்டு பெண்ணைத் திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக ரியாத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதிவேக வீதியில் ஒரு நாளில் 8 விபத்துக்கள்


southern_expressway_1சீரற்ற காலநிலையால் தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் தெற்கு அதிவேக வீதியில் 8 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பணி மூட்டம் காணப்படும் சந்தர்ப்பங்களில் அதிவேக வீதியைப் பயன்படுத்தும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடக்கில் பாதிப்புற்ற மக்களை எம்.எஸ்.எப். கைவிடவில்லை



news
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் சேவையை கைவிடவில்லை என எம்.எஸ்.எப். என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள நல ஆலோசனையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.எஸ்.எப் தொண்டு நிறுவனம், கடந்த 5 ஆம் திகதி வடக்குக்கான தனது சேவையை இடைநிறுத்திக் கொண்டது.

மரணத்தின் பின்னும் வாழலாம் - வாழ்கிறான் மாணவன் சஞ்சய்!

செத்தும் கொடுத்த சீதக்காதி கேள்விப் பட்டிருப்போம். அது மரணத்தின் பின்தான ஒரு வாழ்வைக் குறிக்கும்.

மரணத்தின் பின்னதான வாழ்வு குறித்து இந்தப் பதிவும் பேசுகிறது. ஒரு மாணவனின் மரணத்தின் பின்னும் அவனை வாழ வைத்திருக்கிறார்கள் அவனின் பெற்றோர்கள். விபரம் அறியத் தொடர்ந்து வாசியுங்கள்..

7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன் திருப்பூரில் நெஞ்சை உருக்கிய சம்பவம். மாணவன் சஞ்சயின் தாயார் நமது முகநூல் நண்பர் M Venkatesan MscMphil அவர்களது மாணவி ஆவார் .

வங்காலையில் வீடொன்றினுள் நிர்வாணக்கோலத்துடன் புகுந்த கடற்படையினன் மடக்கிப்பிடிப்பு.


மன்னார் வங்காலைப்பாடு மீனவ கிராமத்தினுள் உள்ள வீடு ஒன்றினுள் கடற்படையினன் ஒருவன் நிர்வாண கோலத்துடன் நுழைந்த சமயம் குறித்த கடற்படையினனை அப்பகுதி மக்களினால் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது என மன்னாரில் இருந்து சங்கதியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இந்திய திரை இசைக்கு நிகராக காதலர் தினத்தில் வெளியாகிய நம்மவர் சூப்பர் ஹிட் பாடல்:

காலியில் இன வன்முறை! தமிழ் குடும்பங்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

காலி – எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு,

எல்பிட்டி – திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ சிப்பாய் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார்.

சுத்தம் சுகாதாரம்... அவசியம்!

நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங்களை நட்பின் நெருக்கத்தை வெளிக்காட்டுவதற்காக சிலர் செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.

பாகிஸ்தானில் பயங்கரம்- சிறை மீது தாக்குதல் நடத்தி 400 கைதிகளை விடுவித்த தலிபான்கள்!

பன்னு: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண நகரான பன்னுவில் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட கைதிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தலிபான்களின் செய்தித் தொடர்பாளர், சிறையில் இருந்த எமது பல நூறு தளபதிகளை நாங்கள் இன்றைய தாக்குதல் மூலம் விடுவித்துவிட்டோம். பலரும் எங்களது மறைவிடங்களுக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது

நல்ல செக்ஸ் உறவுக்குப் பின் அடித்துப் போட்டது போல தூக்கம் வரும். இது ரொம்ப நல்லதுதான் என்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் அல்பிரைட் கல்லூரி ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அதில், செக்ஸ் உறவுக்குப் பின்னர் வரும் தூக்கம் குறித்தும், அதுதொடர்பாகவும் கருத்துக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் அவர்களுக்குத் தெரிய வந்தது என்னவென்றால் நல்ல உறவுக்குப் பின் வரும் தூக்கத்திற்கும், ஆண்களின் மன நிலைக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதே.

சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது



சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன.

தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது.

சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை.
http://www.bbc.co.uk...nfighting.shtml

சிறிலங்காவுக்குப் பறக்கும் சீனர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியது

Posted Image
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2009ம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் சிறிலங்காவுக்குச் சென்றுள்ளனர்.

அண்மைக்காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை சிறிலங்காவும் சீனாவும் அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் சிறிலங்காவை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20120415106000

திமுகவும் தமது பிரதிநிதியை சுஸ்மா குழுவிலிருந்து விலக்கிக்கொள்ள உத்தேசம்! ஈழ மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்கிறார் கருணாநிதி.

Posted Image
இலங்கைக்கு ஆறு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து திமுகவும் விலகலாம் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் "ரைம்ஸ் ஒவ் இந்தியா" செய்தி வெளியிட்டுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை வரும் 14 பேர் கொண்ட குழுவில், திமுக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் பயணத்தினால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது என்றும், போரினால் இடம்பெயர்ந்த மக்களின் உண்மையான நிலையை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவாது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமது கட்சியின் சார்பில் பாராளுமன்றக் குழுவுக்கு நியமித்த பிரதிநிதியான இளங்கோவனை பெரும்பாலும் விலக்கிக் கொள்ளும் மனநிலையில் திமுக தலைமை இருப்பதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இந்தக் குழுவுக்கு பெயர் குறிக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னாட்டை, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கை அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியும் இதே கருத்தையே தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடும் போது வெளிப்படுத்தியுள்ளார். புனர்வாழ்வுக்காக இதுவரை முகாம்களில் காத்திருக்கும் தமிழ்மக்களின் சார்பில் பேசுவதற்கு அனுமதிக்காத இந்தப் பயணத்தினால் என்ன பயன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் -ரைம்ஸ் ஒவ் இந்தியா- மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil

எயார் பிரான்ஸ் விமான சேவையில் தமிழ் மொழி?

Air France விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்க சேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Air France விமான சேவையானது, பிரான்சின் Charles De Gaulle பிரதான விமான நிலையத்தில் தனது சேவையினை விரிவாக்கம் செய்யவுள்ளது.

புறக்கோட்டை சித்திரவதைக்கூடத்தில் மனிதஉரிமைகள் ஆணைக்குழு திடீர் தேடுதல்

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமற்போன ஜேவிபி மாற்றுக் குழு உறுப்பினர்களான லலித்குமார், குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கருத்தப்பட்ட புறக்கோட்டை, சிறிலங்கா காவல்துறை புனர்வாழ்வுப் பிரிவு கட்டடத்தில் சிறிலங்கா மனிதஉரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் திடீர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

Saturday, April 14, 2012

காதலிப்பது எப்படி?

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

புத்தாண்டு கால விபத்துக்களால் 223 பேர் தேசிய வைத்தியசாலையில்

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 223 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.13 ஆம் திகதி அதிகாலை தொடக்கம் 24 மணி நேர காலப்பகுதிக்குள் 223 பேர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து 33 நோயாளர்கள் அவசர சிகிச்சை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இலங்கையைக் கண்காணிக்கும் உரிமை இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு பாராளுமன்றக் குழு நாளை வருகை தரும் நிலையில் அமைச்சர் சம்பிக்க கருத்து


கண்காணிப்புகளை மேற்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாக இந்தியா நினைப்பது தவறு என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்தியப் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழுவொன்று இலங்கை நிலைமைகளை நேரில் பார்வையிட நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள நிலைமையிலேயே அமைச்சர் ரணவக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கை விஜயம் பற்றி கருத்து வெளியிட்ட அவர்;

சிரிக்கலாமே…..

சிரிக்கலாமே…..
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???
**************
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…
**************

அதோ! குப்பி விளக்கில் படித்த சிறுமி மரணமாகிறாள் இதோ! கடவுளர்களுக்காக கலவைகள் தயாராகின்றன

சுன்னாகத்தில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் அந்த விளக்கு தட்டுப்பட்டதில், அதில் எரிந்து பலியாகிப் போன சம்பவம் எங்களால் வெறும் செய்தியாகவே வாசிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த செய்திக்குள் இரு க்கக் கூடிய சோகம், துன்பம் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லை. படிப்பதற்கு அவாக்கொண்ட ஒரு பிள்ளைக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. அந்தப் பிள்ளை படிப்பதற்கு மின்சார வசதி கிடைத்திருந்தால் அந்தப்பிள்ளை கல்வியில் சாதனை படைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, அதன் உயிரும் பாதுகாக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது! ஏழைகளின் வாழ்வியல் துன்பங்கள் வெளிவராதவையாகிப் போவது பெரும் சோகம்.

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்!

அபுஜா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார்.

நைஜீரிய நாட்டில் உள்ள ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்து வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பெண் சாமியாரை கொலை செய்து உடல் எரித்துவிட்டு தப்பியது மர்ம கும்பல்!

தென்காசி அருகே உள்ள அனந்தபுரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (58), விவசாயி. இவரது மனைவி பொன்னுதாய் (48). இவர் தினசரி சாமியாடி குறிசொல்வார். இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமானோர் பெண் சாமியார் பொன்னுதாயை வணங்கி குறி கேட்பார்கள். இவரும் பல்வேறு அம்மன் படங்களை வைத்து வேப்பிலை அடித்து சாமியாடியபடி குறி சொல்வார்.

'சரண்ட'ராகுங்க... சண்டையே வராது!


Apologize Like You Mean It

சொன்னதை செய்யலையா?

உயர்கல்வி சான்றிதழை சர்வதேச தரத்திற்கு மாற்ற நடவடிக்கை; சுனில் ஜயந்த

 news
உயர்கல்வி சான்றிதழ்களை சர்வதேச  தரத்திற்கு அங்கீகாரம் பெற்றவையாக மாற்ற நடவடிக்கை​கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என  அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களே வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் முதலிடம்


2011 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5100 கோடி பேரவை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீத அதிகரிப்பென்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள அறிக்கையைத் தொடர்ந்தே, இந்த விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எடுப்பது என்றும் அவை தீர்மானித்துள்ளன.

Friday, April 13, 2012

விஞ்ஞானியை விட அதிகளவு புத்திக் கூர்மையுள்ள நான்கு வயது சிறுமி

பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.

உங்கள் கிராமங்களில் இடம் பெறும் நிகழ்வுகளை அனுப்பி வைத்தால் உடன் பிரசுரிப்போம்

உங்கள் கிராமங்களில் இடம் பெறும் நிகழ்வுகளை அனுப்பி வைத்தால் உடன் பிரசுரிப்போம்

Email: News@Mannar.com

பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்கிறது: அதிர்ச்சித் தகவல்

பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.

உதயன் இணைய வானொலி

புலா்ந்திருக்கும் நந்தன புத்தாண்டோடு, உதயன் ஊடக பயணத்தில் புதிய மைல்கல்லாக உதயன் இணைய வானொலி சேவைகள் இன்று சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. www.uthayanradio.com என்ற முகவரியில் இந்த வானொலியை வாசகர்கள் செவிமடுக்க முடியும்.
உதயன் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் உதயன் இணைய வானொலி சேவைகளை சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தாயகச் செய்திகள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் 24 மணிநேர சேவையாக இந்த வானொலி இணையத்தில் வலம் வரவிருக்கின்றது.

கணவர் சில்மிஷம் செய்தா, கோச்சுக்காம அனுபவியுங்கள்!

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் சில நாட்களிலேயே தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்டால் பிரச்சினைகள் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். வணிகத்தில் இணையும் இரண்டு நிறுவனங்களிடேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. இரண்டு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதேபோல இல்லறத்திலும் தம்பதியரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

ரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்

திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம் வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல பெண்களும் வர இந்த அலைபாயுதே ஒரு காரணமாக அமைந்து விட்டது.

கூடங்குளத்தை தகர்க்க 3 வினாடிகள் போதும்! சீனாவால் ஆபத்து! – இலங்கை எம்பி தகவல்

தொடர் பிரச்சனைகளை சந்தித்து வரும் கூடங்குளம் அணு உலைக்கு தற்போது சீனாவால் பெரும் ஆபத்து ஒன்று இருப்பதாக இலங்கை எம்.பி ஒருவர் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் தென்னிந்திய அணு உலைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் இதுதொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் இலங்கை தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இலங்கையின் எம்.பி. ஒருவர் தற்போது திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்


 இடைப்பாடியில் மிக வசதிபடைத்த பண்ணையார் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.    அவரது பெயர் ஆனந்தன் (வயது 80) அந்தியூர் அருகே உள்ள வறட்டுபள்ளம், செல்லம்பாளையம் ராமகவுண்டன் தொட்டத்தில் சுமார் 7 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு கிணறுகளின் மூலம் தண்ணீர் பாய்ச்சி கரும்பு, மஞ்சள்,கடலை என பசுமையான விவசாயம் நடைபெறும் தோட்டத்தின் மையத்தில் வீடு அதன் அருகே மாட்டுக்கொட்டகை, வீட்டை சுற்றிலும் வாழை, தென்னை என்று செழிபான நிலத்திற்கு சொந்தகாரர்தான் இந்த ஆனந்தன்.

அமெரிக்காவுக்கு சென்றால் அடிமட்டத்தவனாக உணர முடிவும்: நடிகர் ஷாருகான்


நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவில் உள்ள யாழ் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த பல்கலைக்கழகத்தில் அம்பானியின் மகள் படித்து வருகிறார். எனவே பல்கலைக்கழக விழாவில் சிறப்புரையாற்ற ஷாருக்கானை அழைத்து இருந்தனர்.

ஷாருக்கானும் நீதா அம்பானியும் தனியார் விமானத்தில் நியூயார்க் விமான நிலையம் வந்து இறங்கினர். விமானத்தில் வந்த அனைவரையும் விமான நிலைய நடைமுறை சோதனைகளை அவசரமாக முடித்து அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.

ஆனால் ஷாருக்கானை வெளியே அனுப்பாமல் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அவரிடம் உங்கள் பெயர் என்ன எதற்காக வந்தீர்கள் என்றெல்லாம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய தகவல் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி அவரை விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் பல்கலைக்கழக விழாவுக்கு 2 மணி நேரம் தாமதமாக சென்று ஷாருக்கான் உரையாற்றினார்.

ஏற்கனவே 2009ல் இது போல் அமெரிக்கா விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டார். இது இரண்டாவது முறையாகும். இந்த சம்பவத்துக்காக அமெரிக்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

இந்த் சம்பவத்திற்கு அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறும் போது விசாரணை நடத்த வேண்டும் எனறு அமெரிக்காவிடம் ஒரு கொளகை உள்ளது. இது போல் சம்பவம் இனி நடைபெறாது. என்று அவர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.என்று கூறினார்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74027

செயற்கைக்கோள் சுற்றுப் பாதையில் நுழையவில்லை: ஏவுகணைத் தோல்வி பற்றி வடகொரியா

Voice of Mannar  பியாங்க்யாங்க், ஏப்.13: இன்று அதிகாலை வடகொரியா மிகுந்த எதிர்பார்ப்போடு ஏவிய ஏவுகணை ஒன்று தோல்வியில் முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற அந்த ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மஞ்சள் கடலில் துண்டுதுண்டாகச் சிதறி விழுந்தது. அந்த ஏவுகணை கவுண்ட் டவுன் முடிந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே, தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த ஏவுகணை தோல்வியில் முடிந்தது என்று செய்தியை வெளியிட்டன.

பெண்ணின் பெருமை: இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.  பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி தமிழறிஞர்களின் மனதைப் புண்படுத்தியவர் கருணாநிதி-ஜெ.

சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்ற வார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில் உடலைபோட்டு வருத்தக்கூடாது என்பதுதான் உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை. தொப்பை அதிகமாவிட்டதா? குண்டு உடலை குறைக்கவேண்டுமா? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க இலங்கையர் ஒன்றுபடுமாறு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்து


news
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு,பகுதிகளில் 90 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. -தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவிப்பு


 வடக்கு கிழக்கு, பிரதேசங்களில் 90 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரைவலை தொழில் செய்யும் பகுதிகளில் கட்டுவலை தொழிலை தடைசெய்யுமாறு வேண்டுகோள்

 (எஸ்.ஜெனி)

மன்னார் கடற்கரை பகுதியில் கரவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், கட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களினால் பெரிதும் பாதிக்கப்படுவதாக  கரைவலை  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல் விற்பனையில் சவாலை எதிர்நோக்கியுள்ள முல்லை.விவசாயிகள்




(ரொமேஸ் மதுசங்க)

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்வதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா


(கே. சஞ்சயன்)


ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும்
, அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக - அதன் பின்னரான விவகாரங்களை மையப்படுத்தியே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரசில் கடந்த 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த மார்ச் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படுவதாகவே இருந்தது.
ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இருந்ததால், இந்த அறிக்கை கையளிப்பு ஒருமாதம் தாமதமாகியது.

யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கி இருக்கிறார்களே தவிர 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக்கூட கலைத்துவிடவில்லை: ஜூனியர் விகடன் நிமல்கா பேட்டி.



[Friday, 2012-04-13 12:08:16]
என்னுடைய நண்பர் மகிந்த ராஜபக்ச இப்படித் தலைகீழாக மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால், காலை உடைப்பேன்� என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ.ஐ.நா. பேரவையில் உரையற்றி, அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய பின்னர் சென்னை வந்த இவரால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியவில்லை. அவரைச் சந்தித்தோம்.

புதிய சக்தியாக சீனா உருவெடுத்து வருவதைத் தடுக்க - அமெரிக்கா முயல்வதாகக் கூறப்படுவதை நான் மறுக்கிறேன்: ஹிலாரி கிளிண்டன்


[Thursday, 2012-04-12 20:12:59]
சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.மேரிலேண்ட் பிராந்தியத்தில் உள்ள அன்னபோலிஸ் கடற்படை தளத்தில் உரையாற்றுகையில் ஹிலாரி கூறியதாவது, அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களை சந்திக்க தயாராகி வருகிறது.

சீக்கியரை அவமதித்த அமெரிக்க நிறுவனத்துக்கு 75 ஆயிரம் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு!


[Friday, 2012-04-13 06:59:53]
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை.

Thursday, April 12, 2012

செல்போனில் ஆபாசப் படங்கள்: கெட்டுப்போகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்

நெல்லை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகளில் மாணவர்களின் செல்போன்களில் ஆபாசப் படங்கள் பதிவு செய்து கொடுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பூகம்பத்தின் எதிரொலி: இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய தகடு

இலங்கையை அண்மித்து புதிதாக தகடொன்று உருவாகி வருவதாக புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும் நிலநடுக்கம் தொடர்பில் எதிர்வு கூறமுடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் வட பகுதியின் மேற்குக் கரைக்கு அப்பால் நேற்று பிற்பகல் 8.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.08 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 அளவில் தளர்த்தப்பட்டது.

மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை கதிர்வீச்சின் அளவை அளவிடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் கதிர்வீச்சை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பகுதிகளில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய எம்.பிக்கள் குழுவிலிருந்து அ.தி.மு.க வெளியேற்றம்; பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்காமையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் முடிவு



news
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அறிந்து கொள்வதற் கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமை காரணமாக இலங்கை வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக தமிழக முதல்வர் ஜெய லலிதா நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இந்திய நாடாளுமன்றக் குழு வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டு வரும் படைமுகாம்கள்



news
வன்னிப்பெருநிலப்பரப்பில் பரந்தன் - முல்லைத்தீவு முதன்மை வீதியில் அமைந்திருந்த சிறிலங்காப் படையினரின் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வேறிடம் மாற்றப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்களைப் பார்த்து சொல்லுங்கள் ஐ லவ் யூ

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது” என்று காதலைப் பற்றி கவிஞர் வைரமுத்து அழகாய் கூறியிருக்கிறார். காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள் என்கின்றனர் காதல் நிபுணர்கள்.

என்னதான் இன்டர்நெட், இ மெயில் என தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து

நலந் தரும் பழங்கள்

சந்தைக்கு சென்றால் பழக்கடையை திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாராவது இருப்பார்களா?

அவை தமது அழகான வடிவங்களாலும், நிறங்களாலும், வாசனைகளாலும், சுவைகளாலும், கண், மூக்கு, நா மூன்றையும் கவர்ந்து போவோர் வருவோர் எல்லோரையும் வா வா என அழைக்கின்றன. எனவேதான் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உண்கின்றார்கள்.

செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!

அசே: இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக -அதாவது மேலிருந்து கீழாக - அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.

நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப்பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது.

மன்னாரில் க.பொ.த(சா.த)-2011 பரிட்சையில் 9ஏ பெற்ற 4 மாணவர்களும் கௌரவிப்பு

[12-04-2012]

கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர்.

-தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் இருவரும்,ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய இருவரும் இவ்வாறு அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வெண்று நேற்று [11-04-2012]புதன் கிழமை காலை மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன் வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம் எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இவ்விடையம் தொடர்பில் குறித்த மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,,,,


-தாங்கள் இவ்வாறு சித்தியடைந்தமைக்கு முக்கிய காரணமாக ஓய்வு பெற்ற முன்னால் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆபெல் ரெவல் அவர்களுக்கும் அடங்குவதாகவும் தமக்கு பல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்டு குறித்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவி புரிந்த அவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பு:-குறித்த நான்கு மாணவர்களுக்கும் மன்னார் வின் நிர்வாகம் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
Source: MannarWin.com

ஃபேஸ்புக்கில் மாணவர்களுக்கான பிரத்யேக பக்கம்

Facebook’s Back to its School Days, Launches a ‘Groups For Schools’ Feature
பள்ளி மாணவர்களுக்காக குரூப்ஸ் ஃபார் ஸ்கூல்ஸ் என்ற புதிய வசதியை வழங்க உள்ளது ஃபேஸ்புக். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் ஃபேஸ்புக் ஈர்த்து வருகிறது என்பதற்கு ஒரு பெரிய ஆதாரத்தினை வழங்க உள்ளது ஃபேஸ்புக்.

விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான்



.சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா, பிராந்திய வல்லரசா, உலகதர வல்லரசா? – க.வீமன்

இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது.
வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை.
இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. பாக்கிஸ்தானின் கிழக்கு அலகை வெட்டித் தள்ளி அந்த இடத்தில் வங்காள தேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கியது.
அதே ஆண்டு தொட்டு இந்தியா சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. பாக்கிஸ்தானும் சீனாவும் பிரிக்க முடியாத நட்பு நாடுகளாக மாறிவிட்டன.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator