Thursday, April 12, 2012

தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது - சிறிதரன்


தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது - சிறிதரன் :

தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவின் மதுவரையில் தெரிவித்துள்ளார்.
 
'இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில் புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, April 11, 2012

தந்தை சிகரெட்டால் சுட்டு தாக்கியதால் உயிருக்கு பேராடிய 3 மாத குழந்தை மரணம் ஆண் குழந்தை பெறாததால் மனைவிக்கு கொடுமை

பெங்களூர்: பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த

Amazing Landings and Takeoffs!

Amazing Landings and Takeoffs!

India tells Sri Lanka not to worry over Kudankulam nuclear plant

Wed, Apr 11, 2012, 11:17 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Apr 11, New Delhi: In a measure to allay Sri Lanka's fears on the Kudankulam nuclear plant in India's Southern coast, India said today that the plant has high safety standards and a legal mechanism to deal with the trans-boundary liability issues.
The Kudankulam plant in the state of Tamil Nadu, just 250 km from Sri Lanka's northwest coastal town of Mannar,

மன்னார் மாவட்டம் கல்வியில் முன்னிலை

O-L results :

Mannar shines in Northern Province

The Mannar Education Zone obtained first place in the number of candidates successful at the GCE (O-L) examination, an analysis of the examination results in the Northern Province has revealed.
One thousand two hundred and sixty six candidates sat the examination of which 970 had passed. Four students obtained nine As. Only six candidates failed all subjects.
The Jaffna education zone, where 3,688 students sat the examination, was placed second. A total of 2,325 candidates had passed the examination while 45 candidates had obtained nine As. Seventy four students had failed all subjects.
In the Vavuniya education zone, where 2,235 candidates sat the examination, was placed third. A total of 1,387 had passed the examination. Twenty one candidates obtained nine As while 47 candidates had failed all subjects.
The Jaffna Islands division has been pushed to the last and 11th place. Seven hundred and six sat the examination and only 278 students were successful. No one obtained nine As. Fifty two candidates had failed all subjects.
source: http://www.dailynews.lk/2012/04/12/news52.asp

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகளவு அணுஆயுதங்கள்!

[Wednesday, 2012-04-11 20:56:41]
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள 150 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

கொழும்பு செல்கிறார் தயான் ஜயதிலக! - மகிந்தவைச் சந்தித்து பேச முடிவு!!

பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜயதிலக அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ளார்.

பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் பதவியில் இருந்து தயான் ஜயதிலக நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவரின் கொழும்பு விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க

தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள்

ரணில் விக்கிரமசிங்க – எஸ்.எம்.கிருஷ்ணா டில்லியில் சந்திப்பு : பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு!

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அது தொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்


ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது.
 இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக எம்.பி. ரங்கராஜன் இலங்கை செல்கிறார்.

பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா - Nichiya Tamboolam - SANGEEDAM

Thamizhukum Amudendru Per

100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 8வது மிகப் பெரிய நிலநடுக்கம்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுனாமி: கூடங்குளத்தில் பெரும் பீதி- அணு மின் நிலைய இயக்குநர் தலைமையில் அவசர ஆலோசனை

கூடங்குளம்: இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து அணு மின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. அணு மி்ன் நிலைய வளாகத்திலும் கூட பய ரேகைகள் படர்ந்தது. அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.

இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

போர்னோகிராபி படங்களுக்கு அடிமையா? உறவில் விரிசல் விழும்

போர்னோகிராபி படங்களையோ, வீடியோ கிளிப்புகளையோ பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதால் தாம்பத்ய உறவில் அவர்களால் ஈடுபடமுடியாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்கள் அடங்கிய வலைப் பக்கங்கள் தான் இன்றைக்கு பல மில்லியன் பேர் இணையதளங்களில் பார்க்கும் பக்கமாக உள்ளது. இலவசமாகமாகவும், பலரும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும் போர்னோகிராபி படங்கள் வெளியாகின்றன. இந்த வலைப்பங்களை இளைஞர்களும், சிறுவர்களும்தான் அதிக அளவில் பார்வையிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

மாஜி காதலன் மீது கோவம்... ஆணுறுப்பை நசுக்கி கிழித்த அமெரிக்க காதலி

அமெரிக்காவானாலும், ஆண்டிப்பட்டியானாலும் மனிதர்களுக்கு உணர்வுகள் ஒரே மாதிரிதான். நம்ம ஊரில் அடிக்கடி ஆணுறுப்பை கட் செய்த பெண்களின் கதை குறித்த செய்திகளைப் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அதே பாணியில் அமெரிக்காவிலும் ஒரு பெண் தனது முன்னாள் காதலன் மீது கொண்ட ஆத்திரத்தால், காதலரின் ஆணுறுப்பை கைகளால் பிடித்து கடுமையாக நசுக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இதில் ஆணுறுப்பு கிழிந்து போய் விட்டதாம்.

இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் விழுந்தது ரஷ்ய செயற்கை கோள்.


ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்‌கை கோள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்கை கோளான மோல்னியா-1 வகை செயற்கைகோள் விண்ணில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவை கடலில் விழுந்துள்ளதாக ராணுவத்தரப்பினர் கூறினர்.
இது குறித்து ரஷ்ய வான்வெளிபாதுகாப்புத்துறை அமைசச்சகத்தின்‌ செய்தி தொடர்பாளர் அலெக்ஸிஜோலோடுக்கின் கூறுகையில் கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக ஆகஸ்ட் மாதம் 1.6 டன் எடை ‌க‌ொண்ட மெரிடியன் வகை செயற்கை‌கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மோல்னியா-1 வகை செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார். Source: http://www.pathivu.com/news/20547/57/.aspx

அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது

அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது

இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மிகப் பயங்கரமான பூமி அதிர்ச்சியை அடுத்து சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கை April 11, 2012. Photos by Daily Mirror

சாரதி மயங்கி விழுந்ததையடுத்து பாதுகாப்பாக பஸ்ஸை செலுத்திய 13 வயது சிறுவன் _

  மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி திடீரென உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்ததையடுத்து கட்டுப்பாட்டையிழந்து பயணித்த பஸ்ஸை 13 வயது மாணவன் ஒருவன் துரிதமாக செயற்பட்டு பஸ்ஸைப் பாதுகாப்பாக செலுத்தி பாதை ஓரத்தில் நிறுத்திய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பஸ் சாரதி மயங்கி விழுந்ததும் ஜெரேமி வுயிட்ஸ்சிக் என்ற மேற்படி 13 வயது சிறுவன் தனது ஆசனத்தை விட்டு எழுந்து ஓடிச் சென்று பஸ்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கா விட்டால் பாரிய விபத்து அனர்த்தம் ஒன்றை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜெரேமி விபரிக்கையில், பஸ் சாரதி மயங்கி விழுந்தபோது என்ன நேரிடுமோ என்று பயமாக இருந்தது. ஆனால் பஸ்ஸை செலுத்திச் சென்று பாதுகாப்பாக நிறுத்தியபோது எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது என்று கூறினார்.

பஸ் சாரதி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
__

Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37547

Video shows moments after quake



US boy, 5, takes heroin to school

The boy's stepfather, Santos Roman, has been arrested on drugs charges
A five-year-old boy took 50 packets of heroin to his school and showed them to his classmates, police say.
He found the drugs in his stepfather's jacket, which he had taken to school in Bridgeport, Connecticut.
Police told the Connecticut Post he took the heroin out for a show and tell session, but a school superintendent said he only waved it around in front of classmates.
The boy's stepfather has been arrested on drugs charges.

Tsunami alert partly lifted after Aceh quake

A tsunami watch declared after two major earthquakes off the coast of Indonesia's Aceh province has now been partly lifted, the Pacific Tsunami Warning Center (PWTC) says.
A quake with a magnitude of 8.6 triggered the initial warning, which was renewed after another quake a few hours later measuring 8.3.
Alerts remain in place for Indonesia, India and the islands.
There have been no immediate reports of damage or casualties.
The region is regularly hit by earthquakes. The Indian Ocean tsunami of 2004 killed 170,000 people in Aceh alone and some 250,000 around the region.
The US Geological Survey (USGS), which documents quakes worldwide, said the first Aceh quake was centred at a depth of 33km (20 miles), about 495km from Banda Aceh, the provincial capital.
The BBC's Karishma Vaswani in Jakarta says there were reports of the ground shaking for up to five minutes.

மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
 [ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 12:22.58 பி.ப GMT ] இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலைதீவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பல்கலை கழக கல்வி செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்.



news யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட கலைப்பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் ஐந்துபேர், கல்வி செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட தில்லைநாதன் தனராஜ் என்ற முதலாம் வருட கலைப்பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,இம்மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. 

உயர் கல்வி மாணவர்களுக்கு விசேட இலகு கடனுதவித் திட்டம்; உயர் கல்வி அமைச்சு

news
உயர் கல்வியினைத் தொடரும் மாணவர்களுக்கு விசேட இலகு கடனுதவித் திட்டமொன்றினை விரைவில் அறிமுகம் செய்வதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் உயர் கல்வியை கற்கும் மாணவர்கள் தாம் விரும்பிய பாடநெறியை தொடரக் கூடியவாறு மிகவும் குறுகிய வட்டியினைக் கொண்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் குழுவில் திருமா.வுக்கு ஏன் இடமில்லை?... பன்சாலின் பம்மாத்து விளக்கம்

டெல்லி: இலங்கை செல்லும் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு ஏன் இடம் தரவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலிடம் கேட்டால் அவர் வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில்தான் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பன்சால். ஆனால் கடந்த முறை மட்டும் எப்படி திருமாவளவனை சேர்க்க முடிந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மேலும், கடந்த முறை அதிமுகவை ஏன்

3 படத்தை தெலுங்கில் வெளியிட்டு பெரும் நஷ்டம் அடைந்தேன் - தயாரிப்பாளர் புகார்

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 படத்தை தெலுங்கில் பெரும் விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நட்டி குமார் புகார் தெரிவித்துள்ளார்.

தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழில் பிரமாதமான ஓபனிங் இருந்தாலும், கலவையான விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது வாரம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கம் குறித்து ‘அலர்ட்’ செய்யும் மொபைல்போன் அப்ளிக்கேஷன்

நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில் இருந்து எளிதாக பெற முடியும்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வீடு திரும்பியதால் சென்னை போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

சென்னை: சுனாமி எச்சரிக்கையை அடுத்து சென்னையில் அரசு அலுவலகங்களில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் அனைவரும் வெளியேறியதால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாட்டிலும் கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சென்னையில் அரசு, தனியார் அலுவலகங்களில் இருந்தும் பள்ளிகளில் இருந்து அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் நகர்முழுவதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மீணடும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 125.65 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு நேற்று 128 ரூபாவாக அதிகரித்தது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து, இன்று முற்பகல் ஒரு அமெரிக்க டொலர் 130 ரூபாவாக விற்கப்பட்டது.

இந்தோனேசியாவை இன்னொரு பூமியதிர்ச்சியும் தாக்கியது – சிறிலங்காவுக்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மிகப் பயங்கரமான பூமி அதிர்ச்சியை அடுத்து சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் கிழக்கு, தெற்கு மாகாணங்களை சேர்ந்த கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் (சிறிலங்கா நேரம் 2.10 மணி) றிச்டர் அளவுகோலில் 8.9 அளவுக்குப் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது.

இலங்கையில் யுத்தம் முடிந்தாலும் கடத்தல் முடியாது!- ஐ.நா.பேச்சாளர்


பிரேம்குமார் குணரத்ணம், திமுது ஆட்டிக்கல ஆகியோர் கடத்தப்பட்டமை மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டமை என்பன இலங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது.

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

சிறுநீரகக்கல் எனும் சிக்கல்

தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை - எல்எல்ஆர்சி அறிக்கையின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்

Posted Image
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று செவ்வாய் கிழமையன்று ரணில் விக்ரமசிங்க சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.

பாலித கொஹணவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்துமாறு ஆஸி.பொலிஸாரிடம் முறையீடு!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹணவிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தும்படி அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள கலாநிதி பாலித கொஹண, போர் குற்றம் புரிந்தமைக்கான ஆதாரங்களை அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒன்று கூட்டாட்சி பொலிஸாரிடம் சமர்பித்துள்ளதாக, அண்மையில் விடுதலைப் புலி சார்பு இணையம் ஒன்றை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்தி வெளியிட்டிருந்தது.

தென்சீனக்கடலில் சீன பிலிப்பைன் கடற்படைகள் முறுகல்நிலை

சீனா தன் கடற்பகுதி எனவும் பிலிபைன்ஸ் மீனவர்கள் நுழையக்குடாது எனவும் அச்சுறுத்துகிறது.

அமெரிக்கா பிலிபைன்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சர்வதேச 120 மைல் கடல்வலயச் சட்டத்திற்கமையவே பிலிபைன்ஸ் உரிமை கோறுகிறது.

இரண்டு கடற்படைகளும் முறுகல் நிலையில் உள்ளன.

Tuesday, April 10, 2012

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

போதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள்

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்திலுள்ள 17 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் போதிய வசதிகளின்றி இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள 17 பாடசாலைகள் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, பௌதீக  வளப்பற்றாக்குறை போன்றவற்றுடன் நீண்டகாலமாக இயங்கி வருகிறது.

நீங்கள் ஒல்லியா?

நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்
நீங்கள் ஒல்லியா?
பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.

வன்னிமண்ணின் பெருமை கூறும்கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியாமண்ணே புதிய பாடல்

கழிவுநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்: பெண் விஞ்ஞானி சாதனை

Sarah Haigh
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.
உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சக்கர நாற்காலிகளுக்கு பதிலாக புதிய சாதனம் கண்டுபிடிப்பு

மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து

சிறிய மார்பு உள்ள பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களது திறமைகள் மழுங்கிவிடுகின்றன.கவர்ச்சியாக திகழ வேண்டும் என்பதற்காக பெரிய அடர்த்தியான மார்புகளை செயற்கையாக உருவாக்குகின்றனர்.மேலை நாடுகளில் சிலிக்கன் தட்டுக்கள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொள்வது இன்றைக்கு நாகரீகமாக காணப்படுகிறது. ஆனால் அவை பக்கவிளைவு கொண்டது. புற்றுநோயை தூண்டக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க!

முத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதன் மூலம் தொண்டையின் புண்கள், உதட்டில் வெடிப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவ உலகினர் இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் இதை குணப்படுத்த இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இபிவி வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்கு பரவுகிறது.

இளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றுகிறதாம். முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளை பரப்புகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலுக்கு உடலில் உள்ள சக்தி குறைந்த உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும். எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் நமக்கு இபிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவும் என்பதால் உங்கள் துணையை முத்தமிடும்முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

Source: http://tamil.indiansutras.com/2012/04/kissing-disease-mononucleosis-aid0174.html

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த அரங்கேற்றப்பட்ட நாடகம் வெளிவிவகார அமைச்சு சர்வதேசத்துக்கு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே பிரேம்குமார் குணரட்ணம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரினாலும் அவர்களுக்கு ஆதரவளிப்போரினாலும் இந்தக் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக சர்வதேச சமூகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.இது தொடர்பான அறிக்கையொன்றை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.

டீசல் மானியம் வேண்டின் உடன் காப்புறுதி கட்டாயம்; வற்புறுத்தலால் மட்டு. மீனவர்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் உடனடிக் காப்புறுதியில் இணைந்தால் மட்டுமே எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று நீரியல் வளத்திணைக்களம் நிபந்தனை விதிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் காப்புறுதி செய்யாத மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படமாட்டாது என்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல் வள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விஸா இன்றி வட-கிழக்கில் தங்கியுள்ள 500 இந்தியர் குறித்து பொலிஸ் விசாரணை

விஸா இன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பல்வேறு துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 500இற்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் தொடர்பில் அம்மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எரிக் பெரேரா தெரிவித்தார்.

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்

பிரேம்குமார் குணரட்ணம் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டார்
கிரிபத்கொடவில் வைத்து ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு, நேற்றிரவு விடுவிக்கப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேம் குமார் குணரட்ணத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக நாடு கடத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட்ட யு.எல் -314 விமானம் மூலம் கோலாலம்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர், அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்று விமானத்தில் பயணத்தை தொடர்வார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பாதுகாப்பு வழித்துணையுடன், கடுமையான காவல்துறை பாதுகாப்புடன் குணரட்ணம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் ஏற்றி விடப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்லும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை வெளியிட முடியாது'


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேசநலன் கருதி வெளியிட முடியாது என்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு  ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம்: இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்


சென்னை: கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள  இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.  பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும் – மத்திய வங்கி எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012, 00:45 GMT ] [ நித்தியபாரதி ]
சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது.

இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே காரணம்


இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே  காரணம்
பஷில் ராஜபக்ஷ



ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடு கள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே பிரதான காரணமாகும் எனவும் அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது என்ற அசௌகரியமான தீர்மானத்தை இந்தியாவை எடுக்கவைத்தது அமெரிக்காவே எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

டில்லியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் கொழும்பு; கோத்தபாய அசோக்காந்தா முக்கிய பேச்சு



news
இலங்கை குறித்த புதுடில்லியின் அண்மைக்காலச் செயற்பாடுகளால் மஹிந்த அரசு கடும் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

புதுடில்லி மீதான கொழும்பின் அதிருப்தி இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பில் இந்தியாவின் போக்குக்குறித்து இந்தியத் தூதுவருடன் கடும் தொனியில் பேசியிருக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ.

Monday, April 9, 2012

டிரான்சிஷன் பறக்கும் காரின் விலை அறிவிப்பு: இதுவரை 100 பேர் புக்கிங்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் உலகின் முதல் பறக்கும் காரான டிரான்சிஷனுக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா வடிவமைத்துள்ளது. ஏற்கனவே பறக்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் முதல் பறக்கும் காராக டிரான்சிஷன் கருதப்படுகிறது.

கடத்தப்பட்ட குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிப்பு

கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறிலங்கா அரசுக்கு அவுஸ்ரேலியா கடும் அழுதங்களைக் கொடுத்திருந்தது.

கூடங்குளம் அணு உலை- பாதிப்பை தவிர்க்க இலங்கையில் 5 எச்சரிக்கை கோபுரங்கள்!



தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக அணு சக்தி அதிகார சபை கூறியது.
ஜப்பான், புகுசிமாவில் ஏற்பட்டது போன்று அணுகசிவு ஏற்பட்டால் அதனை முன் கூட்டி அறிவதற்காக இந்தியாவை நோக்கி ஐந்து முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்க உள்ளதாக அணு சக்தி அதிகார சபை தலைவர் டாக்டர் ரஞ்சித் விஜேவர்தன கூறினார்.

புனரமைக்கப்பட்டது காந்தியின் உருவச்சிலை _

  மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37522

American singing tamil song Eeram

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த வியாபார வகானத்தின் சாரதி வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சிறிலங்காவினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் புலி எனும் கிலி- அனலை நிதிஸ். ச. குமாரன்


ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை.

இலங்கைப் பொருளாதாரம்

ஒரு நோயாளியின் நாடித் துடிப்பை பிடித்து அறிவது போல ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தினை அறிவதற்கு, அந்த நாட்டில் நிலவும் பொருட்களின் விலை, வட்டி வீதங்கள், பங்குச் சந்தை, வெளி நாட்டு வர்த்தகம், வெளி நாட்டு நாணயம் மற்றும் இதர உள் நாட்டு, வெளி நாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தொகுத்து ஆராய வேண்டும்.  

Drug Storage At Cancer Hospital At Risk

By Nirmala Kannangara
The effectiveness of medicines, including chemotherapy drugs, stored in the cold room at the Cancer hospital in Maharagama have been drastically affected due to a breakdown in the cooling machines.
Cancer Institute sources told The Sunday Leader on condition of anonymity that although the cooling machines in the cold room have been malfunctioning over the past one and a half months nothing has been done to rectify the situation.

தாம் முன்வைத்த தீர்வு யோசனைகள் குறித்துப் பதிலளிக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெற முடியாதென இரா சம்பந்தன் கூறினார்.




அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லையென தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கூட்டமைப்பு கையளித்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைகளுக்கு அரசு இன்னமும் பதிலளிக்காத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியுமென அவர் எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

லண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்?



லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை
ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரே இரவில் தீர்வை கொண்டுவர முடியாது - இறக்குமதியும் செய்ய முடியாது: மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

Kangoo it! with Kinga - The Roof is on Fire (Bucuresti Mall)

120,000 தமிழீழ ஏதிலிகள் இந்தியாவில்

யுத்த காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர்களில் 120,000 பேர் இன்னும் இந்திய முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator