தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு
எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும், இதற்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.