Friday, April 20, 2012

தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது!

தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது.
தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதேவேளை பள்ளிவாசல் உடைப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பு கண்டனம்:
சிறுபான்மை இன மக்கள் எவரும் இலங்கையில் வாழவே முடியாது இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்தச் சம்பவம் அமைந்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித நாகரிகம் உள்ள ஒரு இனம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை ஒரு போதும் மேற்கொள்ளாது. இந்தச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் துணை நின்றிருப்பது சிறுபான்மை இன மக்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை இன மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் இணைந்து பேரினவாத அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவதை இனிமேலும் தடுக்க முடியாது. பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது என்றும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:
தம்புள்ளையில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலொன்று தகர்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
அரசாங்க ஆதரவுடனான ஆயுத குழுவொன்றினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் விவகார திணைக்களத்தில் மேற்படி பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எனவே அது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் எம்.பி. கூறினார்.
இந்நாட்டு மக்கள் தமது சமய கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறினால், அவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மாற்று வழியை நாட நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
Source: http://thaaitamil.com/?p=16394

3 படத்திற்கு நஷ்டஈடு தருகிறோம்: தனுஷ், ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், சுருதிஹாசன் நடித்த 3 படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் முன்கூட்டியே இணைய தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமானதால் படத்துக்கு பெரிய எதிர்பாப்பு ஏற்பட்டது.

விநியோகஸ்தர்கள் பெருந்தொகை கொடுத்து படத்தை வாங்கி திரையிட்டனர். படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்து உள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் கூறியுள்ளார்.

இறப்பிலும் பிரியாத இரட்டையர்கள்

திருநெல்வேலி:  நெல்லை அருகே வான் மோதிய விபத்தில் இரட்டைச் சகோதரர்கள் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்,அய்யனார்குளம் தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன்கள் ராமர், லட்சுமணன். 18 வயதாகும் இவர்கள் இருவரும் இரட்டையர்கள். பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். கல்லிடை குறிச்சியில் அவர்களது தந்தை நடத்திவரும் பீடி கம்பெனியில் அவ்வப்போது சென்று  பணிகளை கவனித்து வருவார்கள். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கல்லிடைகுறிச்சியில்  இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பினர். ராமர் வண்டியை ஓட்ட லட்சுமணன் பின்னால் அமர்ந்திருந்தார்.

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

சென்னையை கலக்கிய கொள்ளைக்காரி

சென்னையில் திறந்திருக்கும் வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இளம்பெண் ஒருவர் இத்துணிகர செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பெண்ணை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். அப்பெண் அணிந்து வரும் உடையின் தோற்றத்தை வைத்து அவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோரது மேற்பார்வையில் அப்பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

5வது நாளாகவும் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம் மயக்கமான நிலையிலும் தொடர்கிறது.

செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது.
இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.

யெனீவாவில் புலம்பெயர் தமிழர் சார்பில் பரப்புரைச் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்வி. வாணி செல்வராசாவின் செவ்வி..

3 இந்துப் பெண்களும் தங்கள் கணவர்களுடன் செல்வதற்கு பாக். உயர் நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் முஸ்லிம்களைத் திருமணம் செய்து கொண்ட 3 இந்துப் பெண்களும் தங்கள் கணவருடன் செல்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையடுத்து  தலைமை நீதிபதி அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரிங்கிள் குமாரி, லதா குமாரி, ஆஷா குமாரி. இவர்கள் கடந்த மாதம் ஆளும் பாகிஸ்தானிய மக்கள் கட்சி பிரமுகரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் இந்தப் பெண்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த மூன்று பெண்களை  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் இந்து அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்

இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்...புகுத்தப்படும் வட இந்தியம்
இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்...புகுத்தப்படும் வட இந்தியம்

ஆதிவாசிகளை பார்ப்பது போல இலங்கைத் தமிழர்களை பார்வையிட்டுச் சென்ற இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா விமர்சிப்பு.

4-20 12:41:17]
வழமையாக இலங்கைத் தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவின் கபட நாடகம் ஒன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணம் செய்யும் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஆதிவாசிகளைப் பார்ப்பது போலவே இலங்கைத் தமிழர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது."
இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா.

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு –

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு – பிள்ளையான்.
 
இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது.

உறவில் உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்

கால்சியல் சத்து குறைபாட்டினால் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்சியம் சத்திற்கு தேவையான பால், தயிர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றை ஈடு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் பாராதைராய்டு குறைந்தால் கால்சியத்தின் அளவு குறைகிறது. கால்சியல் சத்து குறைந்தால் எலும்புகள் வலிவிழந்து பின்னமடையும். ஆஸ்டியோ போரோஸிஸ் ஏற்படும். எலும்புகள் முறியும் வாய்ப்புகள் அதிகமாகும். தசை இறுக்கம், இழப்பு உண்டாகும். பற்கள் நிறமழிந்து, பற் ‘சொத்தைகள்’ ஏற்படும். அடிபட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும்.

பல் சுத்தம் இதயத்தை காக்கும்

வாய் சுத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பற்களுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ரிச்சர்டு வாட் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசியர் வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!

மதுரை: தனது மகள்கள் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக தனது கெளரவத்தையும் பாராமல், மதுரை பஸ் ஸ்டாண்ட்டில் பிச்சை எடுத்த ஒரு தந்தையின் நிலையை அறிந்து மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லேப்டாப் கம்ப்யூட்டர் கொடுத்து உதவியுள்ளார. அதை அந்த பெரியவரின் மகளுக்குக் கொடுத்த மதுரை கலெக்டர் சகாயம் படிப்பு தொடர்பான அனைத்து உதவிகளுக்கும தன்னை அணுகலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 1986ம் ஆணடு ரயில் விபத்தில் சிக்கி காலை இழந்தார். ஒற்றைக் காலுடன் கஷ்டப்பட்டு பிழைத்து வந்தார். இவருக்கு 1991ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. மனைவி மற்றும் வள்ளிமயில், சுந்தரவல்லி என்று இரு மகள்களுடன் வசித்து வந்தார்.

சன் டி.வி செய்தியாளர்களின் ஒளிபரப்புக் கருவிகள் பறிப்பு _

இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன்.டி.வியின் செய்தியாளர் சிலர் இலங்கை வந்திருந்த நிலையில் இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் (இணைப்பு 2) _

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்து வருவது 'ஏ-6': ஒரே ஏவுகணை, பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்!




அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.


17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.


சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை! சிறீலங்கா அரசு

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என சிறீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, சிறீலங்காவில் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

Thursday, April 19, 2012

இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய

(தமிந்த சஞ்சீவ பாலசூரிய)

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார்.

'இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்' என டெய்லி மிரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறினார்.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் அன்பு மடல்

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு முதற்கண் வணக்கம். அவசரமாக இக்கடிதம் எழுதப்படுகின்றது. தமிழ்-முஸ்லிம் உறவு என்பது நீண்டகாலமாக நட்பு, அன்புடையதாக இருந்துள்ளது. எனினும் இடைப்பட்ட காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வுகள் துன்பமான தென்பது மறுக்கமுடியாததே. அதேநேரம் உங்களின் இடப்பெயர்வு நியாயப்படுத்தவும் முடியாதவை. எனினும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தமிழ் மக்கள் மெளனமாக அழுததும் உண்டு. ஆனாலும் முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை-இடப்பெயர்வை தமிழ் மக்க ளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை

த.மனோகரன்
தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை  யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய

கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

ஆடை அணிய சில டிப்ஸ்

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் ஆறு கால்களுடன் குழந்தையொன்று பிறந்து உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை எந்த விதமான நலகுறைபாடுகளும் இன்றி ஆரோக்கியமாகவும் உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற பெயருடைய ஆண் குழந்தையே இவ்வாறு பிறந்துள்ளது. எனினும் அக்குழந்தையின் ஏனைய 4 கால்களையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கைகளுக்காக கராச்சியிலுள்ள சிறுவர் சுகாதார பாதுகாப்பு தேசிய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பால்வினை நோய்க்கு இளம் வயதினர்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந்து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிரவைக்கிறார்கள். அமெரிக்காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்தான். இவ்வாறு இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதினால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பருவத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இணையம், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இள வயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையாளுகின்றனர் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கிறது.

கல்வித்துறைக்காக தமிழக அரசின் புதிய டிவி சேனல்!

சென்னை: கல்வித்துறைக்காக தமிழக அரசு புதிய டிவி சேனலை தொடங்கவுள்ளது.

இத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

பள்ளி நேரம் முடிந்த பின்னரும் பாடங்களை மாணவர்களுக்கு அவர்களது வீட்டுக்கே கொண்டு செல்ல இந்த டிவி சேனல் உதவும். பயிற்சிகள், செமினார்கள், கலந்துரையாடல்கள் உள்பட கல்வித்திறனை அதிகரிக்க உதவும் அனைத்து அம்சங்களையும் இந்த சேனல் வழங்கும் என்றார்.

2 புதிய பொறியியல் கல்லூரிகள்-ஜெ அறிவிப்பு:

மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள் எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை


மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்
[18-04-2012]
மன்னார் மாவட்டத்தில் நேற்று 17ம் திகதி (17.04.2012) ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்ற தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தகவல் தரக்கூடிய ஒரு நபரை குறித்த திகதிகளில் குறித்த இடங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள்எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும்ஆதனால் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பானதரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடனும்எமது மாவட்டம் என்ற பற்றுடனும் உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல்மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அதேவேளை குறித்த தினங்களில் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மன்னாரில்
மீளக்குடியேற விரும்பாதவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதனையும்
வேதனையுடன் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Source: MannarWin.com

வீடொன்றை அமைக்க இந்தியா வழங்கியது 6 1/2 இலட்சம் ரூபா ஒப்பந்தக்காரர்கள் கட்டியது 1 1/2 இலட்சம் ரூபாவில் அமைச்சர் டக்ளஸ் , ஆளுநர் சந்திர சிறி குற்றச்சாட்டு

யாழ் நகர் நிருபர்

இந்திய அரசாங்கத்தினால் வீடுகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளே பொது மக்களுக்காக ஒப்பந்தக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்  எஞ்சிய பணம் வீடமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்களிடையே பங்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் சந்திர சிறியும் இணைந்து குற்றஞ் சாட்டியுள்ளனர். இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தினால் அன்றி இந்திய  அரசாங்கத்தினாலே தொடர்ச்சியாக தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் இருவரும் இணைந்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். முஸ்லீம்களுக்கும் இந்திய வீடுகள் தேவை: அஸ்வர் எம்.பி. வலியுறுத்தல்

இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர்  இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இந்தியக் குழுவினரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தினால் இந்தியக் குழுவினருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.


இன்று காலை யாழ்.ஞானம்ஸ் ஹோட்டலில் வைத்து இதனை சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம் இந்திய குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜிடம் இதனைக் கையளித்தார்.


இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எழுதப்பட்ட இக்கோரிக்கை கடித்தின் பிரதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரி - சென்னை

சீனாவில் உள்ள உலகில் பெரிய அணை உடையும் அபாயம்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்

உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.

சூடான் தென் சூடானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம்

சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார்.

தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.

இமயமலையின் ஒரு பகுதியில் இறுகி வரும் பனிக்கட்டிகள்

புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

சுஷ்மா அம்மையாரைப் புகழ்ந்து தள்ளுகிறது இலங்கை அரசு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவரான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியானவர் என பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராட்டுத் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு பாராட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
இங்கு வந்துள்ள அவர் அவருடைய நாட்டின் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. அவர்களுடைய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாதவிவாதங்கள் பற்றி வீணாக கதைக்கவில்லை.
வடக்கு கிழக்கு நிலைகளை அறியவும் இலங்கை தொடர்பான நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உறவினர்கள் UNHCR இடம் கோரிக்கை

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர்களின் உறவினர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல தமிழர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய பலர் பற்றிய எவ்வித தரவுகளும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலர் மோசமான சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதியின் கோரிக்கைக்கு சம்பிக்க ரணவக்க பதில்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.
 
தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை

இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர்.  என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.

லண்டன் சோமரத்ன தேரரால் வல்லுறவுக்கு ஆளான பெண் 35 வருடங்களின் பின் சாட்சியளித்துள்ளார்

லண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார்.

யாழ். பல்கலை உணவகத்தில் தரமற்ற வகையில் உணவுகள்; சீர்செய்ய ஒரு வார கால அவகாசம் விதித்தது சுகாதாரப் பிரிவு


யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள உணவகத்தில் சுகாதாரச் சீர்கேடான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாணவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

 
இந்த முறைப்பாட்டை அடுத்து அங்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அங்குள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சீர்செய்யுமாறு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
 

வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சிறிலங்கா விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு - தினமணி தலையங்கம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் கருத்தில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது,

சிறிலங்கா - இந்தியாவின் எதிர்கால அரசியல் உறவு எவ்வாறு அமையும்?

“இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர். இவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது. “

இவ்வாறு globalpost ஊடகத்தில் ஜே.எஸ்.திசநாயகம் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக தமிழாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
ஜெனீவாவில், கடந்த மார்ச் 22ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் அரசியல் அவதானிகள் ஆச்சரியமடையவில்லை.

ஆனால், தென்னாசியாவில் உள்ள இந்தியா தனது அயல்நாடான சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தடுமாற்றமில்லா தாம்பத்யம் வாழ்க்கைக்கு அவசியம்!

மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது அவசியமானது. அது மனிதர்களை முழுமையாக்குகிறது. காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதியர் சில வருடங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக காலம் கழிக்கின்றனர். அப்புறம் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அது மணமுறிவில் போய் நிற்கிறது. உலக அளவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தம்பதியர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே பிரிந்து விடுகின்றனர்.

தம்பதியர் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பணப்பிரச்சினை, பொறுப்பற்ற தன்மை, குடி, போதை, சூதாட்டம், தம்பாத்ய பிரச்சினை, சுயநலத்தன்மை, ஒரு சில மேனரிசங்கள் போன்றவை தம்பதியரிடையே பிடிக்காமல் போய் பிரிவு ஏற்படுகிறது. எனவே இவற்றினை தவிர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இல்லற வாழ்க்கையில் இனிமையும், கிளர்ச்சியும் ஏற்பட உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!

மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மின்னல் தாக்கி நால்வர் பலி _

  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் பலியான சம்பவங்கள் மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

மாத்தளை இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வத்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஒருவர் பரிதாபகரமாக நேற்று முன்தினம் பலியாகியுள்ள அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் மின்னல் தாக்கத்துக்கு பலியாகியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறுகையில், இறத்தோட்டைப் பகுதியில் குறித்த நபர் தனது வீட்டிற்குப் பின்னால் உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியதாகத் தெரியவந்துள்ளது. பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி, நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் இந்தியக் குழு அரசுக்கு நன்றி தெரிவிப்பு _

  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வடக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அவதானித்ததன் பின்னர் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும் அதே நேரம் இந்திய நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்குமான இந்தியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள குழு நேற்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு நன்றி தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி news
இலங்கைப் பொருளாதாரம் மிதமான நிலையில் ஆனால், இன்னும் உறுதியாகவே உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆசிய அபிருத்திக்கான கண்ணோட்டம் என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை கடந்த ஆண்டில், எட்டுப் புள்ளி மூன்று சதவீதம் என்ற உயர் பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது, இந்த ஆண்டில் ஏழு சதவீதம் என வீழ்ச்சி காணும். எனினும், வருகின்ற ஆண்டுகளில் எட்டு சதவீதம் என்ற அளவிற்கு முன்னேற வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலக பொருளாதாரம் ஒரு நல்ல நிலையினை அடைகின்ற போது, இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி உயர்வடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதியின் தீர்க்கதரிசனத்தால் நாடு துரித அபிவிருத்தி கண்டு வருகிறதாம்; றிசாத் பதியுதீன் புகழ்மாலை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டால் நாடு துரித அபிவிருத்தி கண்டுவருவதாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது ஆனால் இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத்தினால் 30 ஆண்டுகள் எங்களால் சுதந்திரத்தை  அனுபவிக்க முடியாது போனது எனினும் ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனையால் இன்று பயங்கரவாதம் முற்று முழுதாக இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ரூ.82.51 மில்லியன் நிக்கொட் ஒதுக்கீடு


 இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கென "நிக்கொட்'டினால் இந்த வருடம் 82.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மருத்துவ வசதிகள் கல்வி அபிவிருத்தி, வீதிப் புனரமைப்பு, ஆசிரியர் விடுதிகள், பொது நோக்கு மண்டபங்கள், பலநோக்கு கூட்டுறவு கட்டடங்கள் என்பனவற்றின் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் மீது கொண்ட அக்கறையினாலேயே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா யாழ்ப்பாணத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவிப்பு


இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கு அரசியல் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அக்கறையினாலுமே ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்று தெரிவித்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ்.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், முக்கிய ஆலயங்களது பாதிரிமார்கள், இந்துக் குருமார்கள் உட்பட சிவில் சமூகத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். 
 
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு மீறிக் காணப்படும் இராணுவப் பிரசன்னம், விகாரைகளின் ஆக்கிரமிப்புச் சட்டம் ஒழுங்கு நிலைமை என்பன குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தியக் குழுவினருக்கு விளக்கினர்.

Wednesday, April 18, 2012

ஆப்கான் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த தாலிபான்கள்: 150 மாணவிகள் உயிர் ஊசல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியை எதிர்க்கும் தாலிபான் தீவிரவாதிகள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த குடிநீரில் விஷம் கலந்தனர். அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணத்தில் ரஸ்டாக் நகரில் உள்ளது நஸ்வான் மார்காசி பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பெண் கல்விக்கு எதிராக உள்ள தாலிபான் தீவிரவாதிகள் அந்த பள்ளியில் உள்ள குடிநீரில் விஷத்தைக் கலந்தனர். இதையறியாது அந்த தண்ணீரைக் குடித்த 150 மாணவிகளுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க தமிழகஅரசு முடிவு

ராமநாதபுரம் ஏப்19 கடலில் மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள் குறித்து கரையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்பியில்லா தகவல்தொடர்பு சாதனங்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும், அதற்கு சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயபக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையும்படியும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்

பார்வைகளின் நான்கு பிரிவுகள்
பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.
ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால் போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் போக வேண்டியதுதான். நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக் காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள் வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும். நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.

செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி

சித்தூர் மாவட்டம் சதும் மண்டலத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி (32), விவசாயி. இவர் நேற்று பிற்பகல் தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்காக சார்ஜரை சுவிட்ச்போர் டில் பொருத்தினார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரது தலை சுவற்றில் மோதியது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சதும் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74278

குஞ்சை ஈன்ற கோழி – சிறிலங்காவில் அதிசயம்

 கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.

இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.

இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.

கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
Source: http://www.puthinappalakai.com/view.php?20120419106024

கர்ப்பிணிகள் போல் பாசாங்கு செய்து கொக்கெயின் கடத்திய தாய்லாந்து யுவதிகள் _

  கர்ப்பிணிகள் போன்று பாசாங்கு செய்து கொக்கெயின் போதைப் பொருளினை இலங்கைக்கு கடத்தி வந்த இரு தாய்லாந்து நாட்டு யுவதிகளை கைது செய்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த யுவதிகளிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களினை மீட்டுள்ளனர்.

குறித்த யுவதிகளிருவரும் 162 கொக்கெயின் போதைப்பொருள் வில்லைகளை விழுங்கியே கடத்தி வந்துள்ளனர். இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியர்களின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பாக அந்த போதைப்பொருள் வில்லைகளை வெளியில் எடுத்துள்ளனர்.

ஒரு யுவதியின் வயிற்றில் 88 கொக்கெயின் வில்லைகளும் மற்றைய பெண்ணிடம் 74 கொக்கெயின் வில்லைகளும் இருந்ததாக பொலிஸார் அறிவிக்கின்றனர்.
___

'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.

அழகு தரும் தேங்காய்

அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய், இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator