Sunday, April 22, 2012

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வவுனியாவில் ஜீப் தீக்கிரை.

வவுனியா உக்கிளாம் குளம் பகுதியில் அரசசார்பற்ற நிறுவன அதிகாரியொருவரின் ஜீப் வாகனம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும்  எவ்.எஸ்.டி. எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரியான பி.ரொஷான் கிருஷ்டி என்பவரின் வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டிற்கு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வெளியில் வருமாறு கூறியதாகவும் தான் வீட்டிலிருந்து வெளியே செல்லாத நிலையில், ஜீப் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தீக்கிரையாக்கியதாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://thaaitamil.com/

தமிழீழத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளது ஏன்? - தினமலர்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த, 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "தனி ஈழம்' என்பது, தன் நிறைவேறாத ஆசை என்றும், "தனி ஈழம்' வழங்க, தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறி, தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இலங்கையில், தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து, தனி நாடு உருவாக்குவதே தனி ஈழம்.
கடந்த, 1986ல், மதுரையில் நடந்த தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ) மாநாடு, கருணாநிதி, வீரமணி, நெடுமாறன் தலைமையில் நடந்தது. இம்மாநாடு, இலங்கை இனப் பிரச்னையை மையமாக வைத்து போராடிய அமைப்புகளான, விடுதலைப் புலிகள் இயக்கம், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, பிளாட் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

சோனியா காந்தியின் அனுமதியின்றி இலங்கை அரசியல்வாதிகளை சந்திப்பதற்குக் கட்டுப்பாடு:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியல் வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய உயர்மட்டத் தலைவர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கையில் நடைமுறைக்கு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்காக புதிய தொலைக்காட்சி சேனல் தொடக்கம்

நாய்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கும் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

நாய்களை வளர்ப்பது, அவற்றை பராமரிப்பது போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
நாய்கள் காணும் வகையில் ஒலி, இசை, வண்ணங்களில் நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். வர்த்தக நோக்கில் அல்லாமலும், ஏற்கனவே ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தொடர்ந்து புதுப்புது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை

மஹிந்தவை தனியே சுஷமா சந்திப்பு; தமிழகத்தில் சர்ச்சை news இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்சவை தனிமையில் சந்தித்துப் பேசியது தொடர்பில் தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் இவ்வாறு சந்தித்திருப்பதானது, குழுவில் உள்ள பிற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு மகிந்த மீண்டும் வாக்குறுதி; இலங்கைப் பயண முடிவில் சுஷ்மா தெரிவிப்பு

தமிழ் மக்களுடனான பிரச்சினைக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று (13 பிளஸ்) தீர்வு காணுவேன் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

 
நேற்றுக் காலை தன்னைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ், இதனைத் தெரிவித்தார். கடந்த ஜனவரியில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் ஜனாதிபதி இதே உறுதிமொழியை வழங்கினார் என்று செய்தியாளர்களிடம் கிருஷ்ணா தெரிவித்தார்.
 
ஆனால் பின்னர் தான் அப்படி எந்த உறுதி மொழியையும் வழங்க வில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ மறுத்திருந்தார். இது பற்றிச் சுஷ்மாவிடம் கேட்டபோது, "பதின் மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் சென்றே தீர்வு காணப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் தெரிவித்தார். அதை அவர் செய்வார் என்று நம்புகிறோம்'' என்றார்.
 
இலங்கைப் பயணம் குறித்து சுஷ்மா மேலும் தெரிவித்ததாவது:
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இப்போது அவசரமானதும் அவசியமானதுமாகும். நல்லிணக்கமும் அமைதியும் நீடித்திருப்பதற்கான பல வழிமுறைகளை இந்தப் பரிந்துரைகள் கொண்டுள்ளன. 
 
ஆகவே எமது இலங்கைப் பயணத்தின் மூலம் இந்தச் செய்தியையே இலங்கை நண்பர்களுக்குச் சொல்லி உள்ளோம். 2009 மே மாதம் ஆயுத முரண்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்ப்பதே எமது நோக்கம். அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசி இங்கு நடைபெறும்புனர்வாழ்வு, மீள்குடியமர்வு என்பன தொடர்பில் அறிவதற்காகவே இங்கு வந்தோம். 
 
அத்துடன் இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் நிலை குறித்து அறிவதற்கு எமது பயணத்தின் நோக்கமாகும்.
 
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை நாம் சந்தித்துப் பேசினோம். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. 
 
எங்களுடைய உடனடிக் கவனம் வடக்கு கிழக்கில் தான் இருந்தது. 30 வருட காலமாக ஆயுத முரண்பாட்டால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து அந்தப் பகுதிகள் எப்படி மீண்டு எழுகின்றன என்பதைப் பார்த்தோம். இடம் பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துவதில் முன்னேற்றம் காணப்படுகிறது என்பதை நாம் கண்டுகொண்டோம்.
 
இருந்தாலும் குறிப்பிட்டளவு மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பாதவரை மீள்குடியமர்வு முழுமையாக பூர்த்தியடையாது.
 
 அதேபோல புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளிலும் இன்னும் முடிக்க வேண்டியவை உள்ளன. அதற்கு உதவுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. பங்காளிகளாக என்றாலும் சரி உதவி என்றாலும் சரி நாம் தயாராக உள்ளோம். 
 
ஆயுத முரண்பாடு முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசில் தீர்வை, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவும் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளது. அத்துடன் காத்திரமான பரிந்துரைகளை அது தந்துள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கும் இலங்கையில் நல்லிணக்கமும் அமைதியும் நீடித்திருப்பதற்குமான பரிந்துரைகள் இதில் அடங்கி உள்ளன. அவற்றை அவசரமாக நடைமுறைப்படுத்துவது முக்கியமானது. 
 
இந்தப் பயணத்தில் எமது இலங்கை நண்பர்களுக்கு இதனையே செய்தியாக சொல்லி உள்ளோம். காணாமற்போனோர் , தடுப்பில் உள்ளோர், கடத்தப்பட்டடோர் பற்றி ஆணைக்குழு வழங்கி உள்ள பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிதன் அவசியத்தை இந்த நான்கு நாள் பயணம் தெளிவு படுத்தி உள்ளது. 
 
மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், உயர் பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், இராணுவத்திடம் இருக்கும் தனியார் நிலங்களை திருப்பி ஒப்படைத்தல், ஆயுதங்களை களைதல், மக்களின் நடவடிக்கைகளில் இராணுவ செல்வாக்கினை நிறுத்துதல், வடக்கில் பொது நிர்வாகத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பிலும் ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் எமக்கு உணர்த்தி உள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; 'வேறு இடத்தில் காணி வழங்கப்படும்'

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.

Saturday, April 21, 2012

1000 கோபுரங்களுடன் Hutch 3G ஆரம்பம் _

Hutchடெலிகொம் லங்கா நிறுவனம் இலங்கையில் தமது 3G சேவையை இன்று முதல் ஆரம்பிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Hutch 3G சேவையை மேல் மாகாணத்தில் ஆரம்ப கட்டமாக பெற்றுக்கொள்ள முடியும். அது தவிர நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான சேவையை 1000 கோபுரங்களுடன் எதிர்வரும் ஜுலையில் விஸ்தரிக்கவுள்ளதாக Hutch நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை ஜுலையில் கலைக்க அரசு திட்டம்? அதிர்ச்சியில் பிள்ளையான்!

கிழக்கு மாகாணம் உட்பட மூன்று மாகாணசபைகளைக் கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளையே கலைத்து விட்டு தேர்தலை நடத்தும் திட்டம் அரசுக்கு உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜுலை மாதமளவில் இந்த மாகாணசபைகளைக் கலைத்து விட்டு செப்ரெம்பரில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

ஈழமும் இந்தியாவும்-17: களத்தில் இறக்கப்பட்ட அத்துலத்முதலி

இந்தியாவில் பயிற்சி பெற்ற    போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருந்த போது ஜெயவர்த்தன அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற பெயரிலான அமைச்சு ஒன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது. லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியும், ஐ.தே.க.வில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தவருமான லலித் அத்துலத்முதலி முதலாவது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.


அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதேபோல, அவரது பரிதாபகரமான முடிவுக்கும் இதுவே காரணமாக இருந்தது.

தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம்?

அரசியல் காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம் என அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கும் டிரான் அலஸூக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் பலனாக பொன்சேக்கா விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் பிணை கோரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் - சஜித்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சேவைகளை பாராட்டுவதனைப் போன்றே, சரத் பொன்சேகாவின் சேவைகளும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்தில் சரத் பொன்சேகா ஆற்றிய சேவை அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ரணசிங்க பிரேமதாசவைப் போன்றே, சரத் பொன்சேகாவையும் எவராலும் சுலபமாக மறந்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவை சஜித் பிரேமதாச, கருஜயசூரிய மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். சரத் பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
source: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76451/language/ta-IN/article.aspx

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டைய்யா மகன்

மதுரை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் பொன்னுச்சாமி. மேலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். அவரது மகன் பாபு. கல்லூரியில் 3ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். மதுரை குலமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த ஞானசேகர் மகள் கஸ்தூரி (21). அவர் உசிலம்பட்டியில் உள்ள விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையில் வேலை செய்து வந்தார்.

கொழும்பு பொரல்லை தெமட்டக்கொடப் பகுதிகளில் தேடுதல் 33பேர் கைது – பிரதேசத்தில் பதட்டம்:-

பாதுகாப்பு தரப்பினர் கொழும்பு பொரல்லை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் ஒன்றில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 33 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
இன்று அதிகாலை 5.30 முதல், காலை8 மணி வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள்,  தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என 33 பேர் இதன் போது கைதுசெய்யப்பட்டனர். காவற்துறையினரும்,அதிரடிப்படையினரும் இணைந்து இந்த தேடுதல் வேட்;டையை நடத்தியதாக காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பகுதியில் பதற்றம் _

பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு தெமட்டகொட பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
___
Source: http://www.virakesari.lk/

பள்ளிவாசல் மீதான தாக்குதல் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் றிஷாத்

பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழும் தம்புள்ள பிரதேசத்தில் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானதும், மத வழிபாட்டுத் தலம் சேதப்படுத்தப்பட்டதானதும்  மனித நேயம் கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும், கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த  மிலேச்சத்தனமான செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள  ஜும்ஆ பள்ளிவாசலில் தமது ஜும்ஆ கடமையினை

உண்மைநிலை அறிய இலங்கை அரசு விடவில்லை! - இந்திய நாளிதழ்

இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் வீணாகி விட்டதாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் மாலை நாளிதழான மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது.
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது.
இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக்கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும்

இலங்கை - இஸ்ரேல் இடையிலான முதலாவது கலந்துரையாடல்

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுக்கும் டையிலான முதலாவது இருதரப்பு கலந்துரையாடல் இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றதாக அவ்வமைச்சு தெரிவித்தது.

இலங்கையின் தூதுக்குழுவுக்கு வெளிவிவகார செயலாளர் கருணாரட்ண அமுனுகமவும் இஸ்ரேலிய தூதுக்குழுவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய – பசுபிக் திணைக்களத்தின் தலைவரான ருத் கஹானொவும் தலைமை தாங்கினர்.

பொரளையில் பொலிஸார் - பொதுமக்கள் மோதல்; கண்ணீர்ப்புகை பிரயோகம்

தெமடகொட, வனாதமுல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பேஸ்லைன் வீதியில் பல மணிநேரங்கள் வரை பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு அதனூடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

International hackers • The FBI’s safety net will be shut down this summer.

International hackers » The FBI’s safety net will be shut down this summer.
By LOLITA C. BALDOR
The Associated Press
First Published Apr 20 2012 12:23 pm • Last Updated Apr 20 2012 11:04 pm
Washington • For computer users, a few mouse clicks could mean the difference between staying online and losing Internet connections this summer.
Unknown to most of them, their problem began when international hackers ran an online advertising scam to take control of infected computers around the world. In a highly unusual response, the FBI set up a safety net months ago using government computers to prevent Internet disruptions for those infected users. But that system is to be shut down.


பெண்களே romance இன் இயங்கு சக்தி - ஆண்கள் அல்ல.

[Women drive the formation of romantic relationships based on evidence from mobile phone calls and texts]

சுமார் 3 மில்லியன் மக்களின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல மில்லியன் ரெக்ஸ் தகவல்களை வைத்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து.. பெண்களே அதிகம் ஆண்களுடன் (கணவர்.. காதலன்) தொலைபேசியில் பேசுவதாகவும் அதுவும் அந்த ஆணுடனான அறிமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இது தொடர்வதாகவும் பின்னர் அது அவர்களின் பெண் பிள்ளையுடனான தொடர்புக்கு மாற்றமடைவதாகவும்..ஆண்களிடத்தில் இது வெறும் 7 ஆண்டுகளாகவும் பின்னர் ஆண்கள் வேறு நண்பர்கள் வட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்

சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத  இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும்   தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ  வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகள் தம்புள்ளையில் சுமார் ஐம்பது தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பள்ளிவாசல் மீது தாக்குதல்; தம்புள்ளையில் பிக்குகள் அராஜகம்; வேடிக்கை பார்த்தனர் பொலிஸார்

தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருடகால பழைமை வாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது 500இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் பொலிஸாரின் முன்னிலையில் நேற்றுத் தாக்குதல் நடத்திக் கடும் சேதத்தை ஏற்படுத்தினர். 

 
பள்ளியில் ஜும் ஆ தொழுகைக்காக அமர்ந்திருந்தவர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பள்ளியில் ஜும்ஆ தொழுகை ரத்தானதோடு தம்புள்ளையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன.
 
பள்ளிவாசலின் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாருக்கு மேலதிகமாக 200 இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டே நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

உடலைசைவில் ஒரு மொழி இருக்கு (உடல் மொழி)

Photo: http://communicationskillstips.com/
பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ் (body language)’ என்று பெயர்.

எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.

தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கு

உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரசவித்த தாய்மார்கள் அனைவருக்கும் தாய்பாலில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்திருப்பதில்லை. அது தெரியாத காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர் சிலர். தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்பவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆசிய நாடுகளை கலக்கும் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன்!

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன் அடுத்த மாதத்தில் ஆசிய நாடுகளில் அறிமுகமாக உள்ளது.
நோக்கியா நிறுவனத்தின் லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் நோக்கியாவின் படைப்பான லுமியா-610 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் ஆசிய நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.

நண்பனின் ஆணுறுப்பை அறுத்துவிட்டு தப்பியவருக்கு வலைவீச்சு

Photo:http://legacy.guardian.co.tt
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 38;முறுக்கு வியாபாரி. திருவொற்றியூரை சேர்ந்தவர் சங்கர், 28. நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் மாலை குடிமையத்திற்கு சென்றனர். அங்கு சரவணன் பணம் கொடுத்து மதுபாட்டிலை வாங்கி, சங்கருக்கு குறைவாக மதுவைக் கொடுத்தாராம்.
இதனால், நண்பர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின், சரவணன், சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரணவனின் ஆணுறுப்பை சங்கர் நறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சரணவன் அலறி துடித்தார். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடிதடி மோதல்! வேட்டியை இழந்த அதிமுக எம்எல்ஏ ஜட்டியோடு காரில் ஏறி தப்பி டிஎஸ்பியிடம் தஞ்சம்!

எம்.எல்.ஏ., கோபால்சாமி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் பகுதியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் எம்.எல்.ஏ., கோபால்சாமி கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

விழா முடிந்து திரும்பிய போது, ராஜபாளையம் அதிமுக பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பொன்னுத்தாயின் தந்தையான மேலப்பாட்டகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான் உள்ளிட்ட சிலர், எம்எல்ஏ கோபால்சாமியிடம் எங்கள் யூனியன் கவுன்சிலர்களை ஏன் அழைத்துக்கொண்டு சுற்றுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் நடத்திய ஊடக சந்திப்பும் கேளிவி பதில்களும்:-

இந்திய உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட மட்டு. மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் நாளை திறப்பு

தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் வந்தாறுமூலையில் இயங்கும் மட்டக்களப்பு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமானது அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய தொழிற்பயிற்சி வளாகமாக தரமுயர்த்தப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்திய-இலங்கை நட்புறவு செயற்றிட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் கட்டிடங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் பயிற்சி நெறிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.


வீட்டுப்பாடம் எழுதாததால் 6 வயது மகனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து கொலை

சீனாவில் வீட்டுப்பாடம்(Homework) எழுதாத 6 வயது மகனை அடித்து உதைத்து உயிருடன் மண்ணில் புதைத்து, அவரது தந்தை கொலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ. இவரது ஆறு வயது மகன் பள்ளியிலிருந்து வழக்கம் போல் வீடு திரும்பினான்.
பின்னர் வீட்டுப்பாடம் சரியாக எழுதவில்லை என்பதனை அறிந்த லீ மகனை அழைத்து கேட்டார். இதற்கு அவன் சரியாக பதி்ல் சொல்லாதததால் மகன் என்றும் பாராமல் நெஞ்சில் எட்டி உதைத்து, குண்டுகட்டாக தூக்கி சுவற்றில் அடித்து வீசி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகன், மயங்கி விழுந்தான்.

தீர்வுக்கான சாதக சமிக்ஞையை அரசே முதலில் வெளியிடட்டும் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்தார் சுஷ்மா


 புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சாதக  சமிக்ஞைகளைக் காட்டவேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. என வலியுறுத்தி உள்ளார் இந்திய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமைதாங்கி இலங்கை வந்த சுஷ்மா சுவராஜ்.

"அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவில் எட்டிவிடலாம்'' என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் அவர் நேரில் தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை சுஷ்மா, அவரது மகள், இந்தியத் தூதுவர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடபகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

தற்போது, ஏற்பட்டுள்ள கால நிலைமாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாயப்பு ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
 
இதன்படி, இன்று காலை வேளையில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும், மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிற்கும் ஆங்காங்கே மழையினை எதிர் பார்க்க முடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, சிலபகுதிகளில் மின்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

(MAERSK) மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை

டென்மார்க்கின் பிரபலமான தொழில் அதிபர் மாஸ்க் கெனி மக் மூலரின் இறுதிக்கிரியைகள் கொல்மன்ஸ் தேவாலயத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் மகாராணியார் இந்த வைபவத்தில் பங்கேற்க இருக்கிறார்.

மாமனிதன் மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை

1903 ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி பிறந்தார்.
1930 ல் கப்பல் மாலுமிக்கான பரீட்சையில் சித்தியடைந்தார்.
1932 ல் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலுமியாக பணியாற்றினார்.

தம்புள்ளை பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டது!

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீண்டும் திறக்கப்பட்டது.

அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் முஸ்லிம் மீடியா போரம் தலைவருமான என்.எம். அமீன் ஆகியோர் கொண்ட குழு இன்று காலை இப்பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசினர்.

Friday, April 20, 2012

“இலங்கை மண்ணில் தமிழர் சிந்திய இரத்தமும் கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது தனித் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும்’

சென்னை:  இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய இரத்தமும் கொடுத்த உயிர்ப் பலிகளும் நிச்சயம் வீண் போகாது. தனித் தமிழ் ஈழம் நிச்சயம் ஒருநாள் மலர்ந்தே தீரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர தி.மு.க. முயற்சி எடுக்காது’ என்று 1983 ஆம் ஆண்டில் தான் பேசியதையும் கருணாநிதி நினைவுகூர்ந்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;

வெளிநாட்டு வேலைவாய்ப்பென பலரிடம் 1 1/2 கோடி ரூபா மோசடி செய்தவர் கைது

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகவும் கல்வி கற்பதற்காக அங்கு அனுப்புவதாகவும் தெரிவித்து பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக பொலிஸாரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இவ்வாறு 200 இற்கும் அதிகமானோரிடம் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றத்தடுப்புபொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்ளுப்பிட்டி பகுதியில் இடமொன்றை சுற்றிவளைத்து இவரை கைது செய்துள்ளதோடு, இவரிடமிருந்து போலி ஆவணங்களையும் போலி கல்விச் சான்றிதழ்களையும் மற்றும் கணினியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மின்வசதி இல்லாத இடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய கருவி - கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!


மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார்.
Source: http://www.seithy.com/breifNews.php?newsID=58920&category=IndianNews&language=tamil

10 கிலோ ஆமை இறைச்சியை திருடிய பொலிஸார் மீது நடவடிக்கை

மன்னார் நிருபர்

நீதிமன்றத்துக்கு ஒப்படைக்க வேண்டிய 34 கிலோ ஆமை இறைச்சியில் 10 கிலோ இறைச்சியைத் திருடிய பொலிஸாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மன்னார் வங்காலையில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வங்காலையிலிருந்து மன்னார் நோக்கி வரும் பஸ்ஸில் ஆமை இறைச்சி இருப்பது தெரியவந்தது.

மிகச் சிறந்த கையெழுத்துக்கான விருதை வென்ற இரு கரங்களுமற்ற சிறுமி

வாஷிங்டன் :  பிறக்கும் போதே இரு கரங்களுமின்றிப் பிறந்த அன்னி கிளார்க் என்னும் 7 வயதுச் சிறுமி மிகச் சிறந்த கையெழுத்துகளுக்கான தேசிய விருதொன்றை வென்றுள்ளார்.

மிகச் சிறந்த கையெழுத்தினைத் தெரிவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் இப்போட்டிக்கான விருது ஒரு கேடயத்தையும் ஆயிரம் டொலர்கள் பணப்பரிசையும் கொண்டதாகும்.
விருதைப் பெற்றுக் கொண்ட சிறுமி தான் எவ்வாறு எழுதுகிறாள் என்பதை அங்குள்ளவர்களுக்கு விளக்கும் முகமாக தனது இரு முழங்கைகளுக் கிடையிலும் பென்சிலைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்து சிறப்பாக எழுதிக் காட்டியுள்ளார்.
அனைத்துத் துறையிலும் மிகச்சிறந்த திறமைசாலியாக அன்னி விளங்குவதாக ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
மேலும் இந்த குறைகளுக்கு மத்தியிலும் கத்தரிக்கோல் மற்றும் பசை என்பவற்றைப் பயன்படுத்தல், ஆடை அணிவது, உணவு உண்பது, நீந்துவது மற்றும் மோட்டார் வாகன சவாரி போன்ற செயல்களையும் அன்னி சிறப்பாக செய்து வருவதாக அவரது ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.




மாணவர்களின் கையெழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் அமெரிக்காவில் தேசிய ரீதியாக இப்போட்டி  நடத்தப்படுகிறது. சுமார் 25 இலட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


அன்னி பெற்றோரான ரொம் மற்றும் மேரி எலன் கிளார்க்குக்கு 3 சொந்தப் பிள்ளைகளும் அன்னி உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த ஆறு சுவீகாரக் குழந்தைகளும் உள்ளனர்.
அன்னி 2 வயதிலிருந்து ரொம் மற்றும் மேரி எலன் கிளார்க் தம்பதியினருடன் அமெரிக்காவின் மேற்கு பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Source: http://www.thinakkural.com/

Cop craving for turtle flesh remanded

A police constable attached to Mannar Police was remanded for stealing turtle flesh on Thursday.
Police Spokesman SP Ajith Rohana said the police constable was remanded for stealing 10 kilos of turtle flesh which was produced before court.
He said 31 kgs of turtle flesh was produced before the Mannar magistrate and it was later ordered to be sent to the veterinary surgeon for investigations.
The turtle flesh was returned to the magistrate after investigations. The magistrate ordered the flesh to be destroyed but inspected the production before it was sent to be destroyed.
She found 10 kgs of flesh missing and ordered the Police to investigate.
The Police Spokesman said the Mannar SP conducted investigations. Investigations revealed that a police constable had stolen the flesh when it was being taken to the veterinary surgeon. The magistrate ordered the police constable to be remanded until May 4.
The first suspect nabbed with the turtle flesh pleaded guilty and was fined. Mannar Police are investigating.
Source: http://www.dailynews.lk/2012/04/21/sec02.asp

கொளத்தூர் மணி உரை - திராவிடர் - தமிழர்

மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி

பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாய்ன் மெக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் அது போர்க் குற்றவாளிகளை சகித்துக்கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்கு பங்கமாகிவிடும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி எம்பியான மெக்டொனாக் வியாழனன்று கூறினார்.

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வீதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது

மட்டக்களப்பு விமானப்படையின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த ஆலையடிச்சோலை பொதுமயானத்துக்கு அருகில் செல்லும் வீதி விமானப் படையினரால் திறக்கப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் புத்தூர் விமானப்படைத்தள விரிவாக்கத்தின் போது ஆலையடிச்சோலை பொதுமயானம் உட்பட சில குடியிருப்புக்களும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்வாங்கப்பட்டன.

தம்புள்ள பள்ளிவாசல் படைத்துறைப் பாதுகாப்புடன் அடித்து நொருக்கப்பட்டது!

தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது.
தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. இதேவேளை பள்ளிவாசல் உடைப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அப்பகுதி மக்களால் முறையிடப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பு கண்டனம்:
சிறுபான்மை இன மக்கள் எவரும் இலங்கையில் வாழவே முடியாது இந்த நாடு பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்தச் சம்பவம் அமைந்திருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித நாகரிகம் உள்ள ஒரு இனம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை ஒரு போதும் மேற்கொள்ளாது. இந்தச் சம்பவங்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் துணை நின்றிருப்பது சிறுபான்மை இன மக்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உட்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களிலும் சிறுபான்மை இன மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் இணைந்து பேரினவாத அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவதை இனிமேலும் தடுக்க முடியாது. பள்ளிவாசல் உடைப்புச் சம்பவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது என்றும் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்:
தம்புள்ளையில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலொன்று தகர்க்கப்பட்டுள்ளதாக கூறிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
அரசாங்க ஆதரவுடனான ஆயுத குழுவொன்றினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் விவகார திணைக்களத்தில் மேற்படி பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எனவே அது சட்டவிரோதமானது என எவரும் கூற முடியாது எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அவர் தெரிவித்தார்.
இப்பள்ளிவாசல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கபீர் ஹாசிம் எம்.பி. கூறினார்.
இந்நாட்டு மக்கள் தமது சமய கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறினால், அவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மாற்று வழியை நாட நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
Source: http://thaaitamil.com/?p=16394

3 படத்திற்கு நஷ்டஈடு தருகிறோம்: தனுஷ், ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், சுருதிஹாசன் நடித்த 3 படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் முன்கூட்டியே இணைய தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமானதால் படத்துக்கு பெரிய எதிர்பாப்பு ஏற்பட்டது.

விநியோகஸ்தர்கள் பெருந்தொகை கொடுத்து படத்தை வாங்கி திரையிட்டனர். படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்து உள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் கூறியுள்ளார்.

இறப்பிலும் பிரியாத இரட்டையர்கள்

திருநெல்வேலி:  நெல்லை அருகே வான் மோதிய விபத்தில் இரட்டைச் சகோதரர்கள் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்,அய்யனார்குளம் தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன்கள் ராமர், லட்சுமணன். 18 வயதாகும் இவர்கள் இருவரும் இரட்டையர்கள். பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். கல்லிடை குறிச்சியில் அவர்களது தந்தை நடத்திவரும் பீடி கம்பெனியில் அவ்வப்போது சென்று  பணிகளை கவனித்து வருவார்கள். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கல்லிடைகுறிச்சியில்  இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பினர். ராமர் வண்டியை ஓட்ட லட்சுமணன் பின்னால் அமர்ந்திருந்தார்.

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

சென்னையை கலக்கிய கொள்ளைக்காரி

சென்னையில் திறந்திருக்கும் வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இளம்பெண் ஒருவர் இத்துணிகர செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பெண்ணை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். அப்பெண் அணிந்து வரும் உடையின் தோற்றத்தை வைத்து அவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோரது மேற்பார்வையில் அப்பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

5வது நாளாகவும் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம் மயக்கமான நிலையிலும் தொடர்கிறது.

செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது.
இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.

யெனீவாவில் புலம்பெயர் தமிழர் சார்பில் பரப்புரைச் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்வி. வாணி செல்வராசாவின் செவ்வி..

3 இந்துப் பெண்களும் தங்கள் கணவர்களுடன் செல்வதற்கு பாக். உயர் நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் முஸ்லிம்களைத் திருமணம் செய்து கொண்ட 3 இந்துப் பெண்களும் தங்கள் கணவருடன் செல்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையடுத்து  தலைமை நீதிபதி அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரிங்கிள் குமாரி, லதா குமாரி, ஆஷா குமாரி. இவர்கள் கடந்த மாதம் ஆளும் பாகிஸ்தானிய மக்கள் கட்சி பிரமுகரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் இந்தப் பெண்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த மூன்று பெண்களை  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் இந்து அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்

இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்...புகுத்தப்படும் வட இந்தியம்
இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்...புகுத்தப்படும் வட இந்தியம்

ஆதிவாசிகளை பார்ப்பது போல இலங்கைத் தமிழர்களை பார்வையிட்டுச் சென்ற இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா விமர்சிப்பு.

4-20 12:41:17]
வழமையாக இலங்கைத் தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவின் கபட நாடகம் ஒன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணம் செய்யும் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஆதிவாசிகளைப் பார்ப்பது போலவே இலங்கைத் தமிழர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது."
இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா.

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு –

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு – பிள்ளையான்.
 
இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது.

உறவில் உற்சாகம் உச்சமடைய கால்சியம் அவசியம்

கால்சியல் சத்து குறைபாட்டினால் தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கால்சியம் சத்திற்கு தேவையான பால், தயிர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றை ஈடு செய்ய முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் பாராதைராய்டு குறைந்தால் கால்சியத்தின் அளவு குறைகிறது. கால்சியல் சத்து குறைந்தால் எலும்புகள் வலிவிழந்து பின்னமடையும். ஆஸ்டியோ போரோஸிஸ் ஏற்படும். எலும்புகள் முறியும் வாய்ப்புகள் அதிகமாகும். தசை இறுக்கம், இழப்பு உண்டாகும். பற்கள் நிறமழிந்து, பற் ‘சொத்தைகள்’ ஏற்படும். அடிபட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும்.

பல் சுத்தம் இதயத்தை காக்கும்

வாய் சுத்தத்திற்கும் இதயத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பற்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பற்களுக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ரிச்சர்டு வாட் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். வாய் சுத்தத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசியர் வாட் கூறினார். தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!

மதுரை: தனது மகள்கள் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக தனது கெளரவத்தையும் பாராமல், மதுரை பஸ் ஸ்டாண்ட்டில் பிச்சை எடுத்த ஒரு தந்தையின் நிலையை அறிந்து மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லேப்டாப் கம்ப்யூட்டர் கொடுத்து உதவியுள்ளார. அதை அந்த பெரியவரின் மகளுக்குக் கொடுத்த மதுரை கலெக்டர் சகாயம் படிப்பு தொடர்பான அனைத்து உதவிகளுக்கும தன்னை அணுகலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 1986ம் ஆணடு ரயில் விபத்தில் சிக்கி காலை இழந்தார். ஒற்றைக் காலுடன் கஷ்டப்பட்டு பிழைத்து வந்தார். இவருக்கு 1991ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. மனைவி மற்றும் வள்ளிமயில், சுந்தரவல்லி என்று இரு மகள்களுடன் வசித்து வந்தார்.

சன் டி.வி செய்தியாளர்களின் ஒளிபரப்புக் கருவிகள் பறிப்பு _

இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன்.டி.வியின் செய்தியாளர் சிலர் இலங்கை வந்திருந்த நிலையில் இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் (இணைப்பு 2) _

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்து வருவது 'ஏ-6': ஒரே ஏவுகணை, பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்!




அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.


17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.


சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை! சிறீலங்கா அரசு

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என சிறீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, சிறீலங்காவில் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

Thursday, April 19, 2012

இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய

(தமிந்த சஞ்சீவ பாலசூரிய)

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார்.

'இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்' என டெய்லி மிரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறினார்.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் அன்பு மடல்

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு முதற்கண் வணக்கம். அவசரமாக இக்கடிதம் எழுதப்படுகின்றது. தமிழ்-முஸ்லிம் உறவு என்பது நீண்டகாலமாக நட்பு, அன்புடையதாக இருந்துள்ளது. எனினும் இடைப்பட்ட காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வுகள் துன்பமான தென்பது மறுக்கமுடியாததே. அதேநேரம் உங்களின் இடப்பெயர்வு நியாயப்படுத்தவும் முடியாதவை. எனினும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தமிழ் மக்கள் மெளனமாக அழுததும் உண்டு. ஆனாலும் முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை-இடப்பெயர்வை தமிழ் மக்க ளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட கல்வி நிலை

த.மனோகரன்
தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தவரின் முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை  யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய

கம்பீரமாக தெரிய அழகா உடை உடுத்துங்க!

மனிதர்களின் அழகையும், கம்பீரத்தையும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள். நாம் அணியும் ஆடைகள் தரமானதாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளைவிக்காது, நமக்கும் அழகை தரும். என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியாமலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள். வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியிலேயேயும், திருமணம் போன்ற பார்ட்டிகளுக்கு சாதரணமாகவும் உடுத்திச் செல்வார்கள். இது சரியானதல்ல என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

ஆடை அணிய சில டிப்ஸ்

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator