Wednesday, April 25, 2012

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று காலை மேலும் சரிந்துள்ளது. 

நேற்று அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு 132.20 ரூபாவாக காணப்பட்டது. 

ஆனால் இன்று காலை சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து 133.20 ரூபா என்ற சாதனை அளவை எட்டியது.  

அதேவேளை. சிறிலங்கா மத்திய வங்கி அமெரிக்க டொலர் ஒன்றை நேற்று 133.16 ரூபா வீதம் வங்கிகளுக்கு விற்பனை செய்திருந்தது. 

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடந்த சில வாரங்களாகவே நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதால், முதலீட்டார்கள் அமெரிக்க டொலரில் முதலிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tuesday, April 24, 2012

நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம்

இனத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக உலகளவில் பல இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. அவற்றின் போராட்டங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்திருக்கின்றன. பல தலைமுறையினர் தொடர்ந்து போராடிய பிறகே இலட்சியங்களை வென்றெடுக்க முடிந்திருக்கிறது. தென்னிந்தியாவில் தோன்றிய இயக்கமான திராவிடர் இயக்கம், இந்திய அரசியல் வரலாற்றில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. அது தன்னுடைய தொடக்கத்திலிலிருந்தே படிப்படியாக இலட்சியங்களை நிறைவேற்றி, அரைநூற்றாண்டு காலத்தில் அரசியல்- ஆட்சிநிர்வாகத்தின் வாயிலாக சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, தற்போது நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதே திராவிடர் இயக்கத்தின் சிறப்பம்சம்.

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாண நிர்வாக அலகு அவசியம் - ஹசன் அலி

முஸ்லிம் மக்களுக்கு தனி மாகாண நிர்வாக அலகு அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தைப் போன்றதொரு நிர்வாக அலகு முஸ்லிம்களுக்கு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, வீடமைப்பு, பிறப்பு, விவாகம் மற்றும் இறப்பு பதிவுகள், சொத்து பறிமுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கைதென் கொரியா இடையே மூன்று உடன்பாடுகள் கைச்சாத்து

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் தென்கொரிய ஜனாதிபதி லீ மயூங் பங் ஆகியோர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர். தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் தென்கொரியாவின் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு விவகார அமைச்சுக்கும் இடையிலான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கும் தென்கொரிய குடியரசின் திட்டமிடல் மற்றும் நிதி அமைச்சுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் இருநாட்டு அரச தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தவிர நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் தென்கொரிய அறிவு விருத்தி மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கும் இடையில் மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் மன்னாரில் கைது

மன்னாரில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடற்படை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் கூட்டாக இணைந்து பிரதேசத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர், எழுதூர் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபரிடமிருந்து கேரள கஞ்சா ஒன்பது கிலோ கிராம் மற்றும் 890 கிராம் எடையுடைய விஷ போதைப் பொருள் வகையொன்றென சந்தேகிக்கப்படும் ஹெரோயின் வகைப் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எல்லைக் கோடுகள் தொடர்பான பிணக்குகள். இந்தியா-சீனா-பாக்கிஸ்தான்.


எண்பது வரையான எல்லைப் பிணக்குகள் உள்ளன. அவற்றில் மிக மோசமான எல்லை தொடர்பான முரண்பாடுகளை இந்தியா எதிர்கொள்வதாகவும் அறிந்தோம். இந்தியாவின் இமயமலை எல்லையை பிரிட்டிஷ் அரசு திபெத் அரசுடன் 1914ல் செய்த சிம்லா அக்கோட் (Simla Accord)என்ற உடன்படிக்கை மூலம் நிர்ணயம் செய்தது.
இந்தக் எல்லைக் கோடு மெக் மாகொன் லைன் (Mc Mahon Line) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவின் வெளியுறவுச் செயலர் சிம்லா உடன்படிக்கையை நிறைவேற்றினார். அவர் பெயரால் இந்தக் கோடு அழைக்கப்படுகிறது. இந்த எல்லைக் கோட்டை சட்டப+ர்வமானதாக இந்தியா ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் சீனா அதை ஏற்க மறுக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவுடன் பேச்சு நடத்தி எல்லை போடுவதற்கு திபெத்திற்கு இறைமை உரித்தும் தத்துவமும்

தலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்

         (கே. சஞ்சயன்)


பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது.   இந்தப் பயணத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது தொடங்கிய பிரச்சினை, முடிந்த பின்னரும் ஓயவில்லை.

தமிழ்நாட்டின பிரதான கட்சிகள் இந்தக் குழுவின் பயணத்தால் பயன் ஒன்றுமில்லை என்று தமது பிரதிநிதிகளை விலக்கிக் கொண்டன. இதனால் 16 பேர் வருவதாக இருந்த குழுவில் 12 பேர் மட்டும் வந்தனர்.

இந்தக் குழுவின் பயணத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.

அதுவும், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்தக் குழுவின் பயணத்தை வைத்து நெருக்கடிகளில் இருந்து மீளலாம் என்று அரசாங்கம் கருதியது.

ஆனால் இந்தக் குழுவின் பயணத்தின் தொடக்கம் அரசுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் அமைந்தாலும், முடிவு என்னவோ அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒன்றாகவே அமைந்து விட்டது.

இந்தியக்குழு கொழும்பு வந்த மறுநாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தது.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பீரிஸ், இந்தியக் குழு தமக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்று கூறியிருந்தார்.

அதேபோல,  இந்தியக்குழு வடக்கில் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவும், இந்தியக்குழு உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளதாக கூறினார்.

ஆனால் கடைசி நேரத்தில், இலங்கை அரசாங்கம் விரும்பாத பல விடயங்களை இந்தியக்குழு வலியுறுத்தியது.

•    13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றைக் காண வேண்டும்.
•    நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
•    போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
•    வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.
•    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துப் பேசிஇ அரசியல் தீர்வு காண வேண்டும்.

இப்படிப் பல விடயங்களை இந்தியக்குழு வலியுறுத்தியுள்ளது.

இவையெல்லாம் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் அல்ல என்றாலும், அதை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் அரசாங்கத்திடம் இல்லை.

13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு பற்றி ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

பின்னர் அப்படி வாக்குறுதி ஒன்றும் கொடுக்கப்படவில்லையே என்று அரசாங்கம் மறுத்தது. இப்போது மீண்டும் அதே வாக்குறுதி சுஸ்மா சுவராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாத நிலையில், அதற்கு அப்பால் சென்று தீர்வு ஒன்றை வழங்கத் தயாராக இருக்குமா என்பது முக்கிய சந்தேகம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்தும் விடயமும் அப்படித் தான். அதை நடைமுறைப்படுத்துவோம் என்கிறது அரசாங்கம். ஆனால் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு  யாராவது கூறினால் அதை வெறுப்போடு பார்க்கிறது.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் இன்னமும் தெளிவான நிலையில் இல்லை.

எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதில் மட்டும் தான் அரசு தெளிவாக இருக்கிறதேயன்றி, எவற்றை நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கவில்லை.

எனவே இப்போதைய சூழலில், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கூறும் ஆலோசனையை அல்லது அழுத்தத்தை இலங்கை அரசு வேண்டாத ஒரு விவகாரமாகவே பார்க்கிறது.

போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இந்தியக்குழுவின் அடுத்த கோரிக்கை. இதைத் தான் அமெரிக்கா தொடக்கம் பல்வேறு நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால் அரசாங்கம் அதற்கெல்லாம் செவி சாய்க்கின்ற நிலையில் இல்லை.

இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கூட அரசாங்கம் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போதைய நிலையில் மனிதஉரிமை மீறல்கள் பற்றி யார் பேச்சு எடுத்தாலும் அதை அரசாங்கம் விருப்புடன் பார்ப்பதில்லை.

அந்த வகையில் தான் இந்தியக் குழுவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணையைப் பற்றிப் பேசப் போய் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

அடுத்து,  இந்தியக் குழுவினர் முன்வைத்த மற்றொரு முக்கியமான விடயம், வடக்கில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும் என்பதாகும்.  இதனை உடனடியாகவே நிராகரித்துள்ளார் ஜனாதிபதி.

வடக்கில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தான் இராணுவம் இருக்கிறது. வடக்கில் இருந்து மட்டும் துருப்புகளை அகற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவும் இதனைப் பலமுறை வலியுறுத்தியது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் இது வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அரசாங்கமோ, வடக்கில் இருந்து படைகளை விலக்குவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. அதேவேளை, இந்தியக் குழுவோ படைவிலக்கத்தை முக்கியமான கோரிக்கையாக முன்வைத்துள்ளது.

தாம் விரும்பாத பல விடயங்களை கையில் எடுத்துக் கொண்டதால்இ இந்தியக் குழுவின் பயணத்தை அரசாங்கத்தினால் ரசிக்க முடியவில்லை.

இந்தியக் குழுவின் பயணம் திருப்திகரமானதொன்று என வடக்கிலோ கிழக்கிலோ உள்ள எவரும் ஏற்கத் தயாரில்லை. சரியாகத் திட்டமிடப்படாத பயணம்- சுதந்திரமானதாக அமையவில்லை என்று பல்வேறு, குறைபாடுகள் உள்ளன.

ஆனாலும் கூட, அவர்கள் பார்த்ததைக் கொண்டு வடக்கு இன்னமும் இராணுவ அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது என்று கூறியுள்ளனர். அங்கு நிலைமை இன்னமும் மோசம் என்றும் மக்கள் அச்சத்துடன் தான் வாழ்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்குத் தெரியவராத பல உண்மைகள் இன்னமும் உள்ளன.

இந்திய நாடாளுமன்றக் குழுவினர், இலங்கையில் தமிழர்கள் சுமுகமாக - சுதந்திரமாக வாழ முடியவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியக் குழுவின் பயணத்தினால்இ சீர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு புதியதொரு சிக்கல் வந்து நிற்கிறது.

இப்போதுஇ இந்திய நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்கு மதிப்பளித்து நடக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

ஏற்கனவே ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது கொழும்பை சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையுடன் நெருக்கத்தைப் பேண இந்திய அரசு, அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், புவிசார் அரசியல் சூழலின்படி, கொழும்புடன் நெருக்கத்தைப் பேண வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இந்தியாவுக்கு உள்ளது.

ஆனால், இந்தியக் குழுவின் பயணமும் அவர்கள் கொண்டுள்ள கருத்தும்இ கொழும்புடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் தடையாகவே இருக்கும். ஏனென்றால், இந்தியக் குழு வலியுறுத்தும் சில விடயங்களை இலங்கை அரசால் சாதகமாக அணுகப்படக் கூடியவை அல்ல.

இவை குறித்து இந்திய அழுத்தம் கொடுக்கும் போது, இருதரப்பு உறவுகளில் விரிசல் அதிகமாகும். இந்த விரிசலைக் கருத்தில் கொண்டு இந்தியா நழுவிக் கொள்ளவும் முடியாது.

ஏனென்றால் இது ஒரு அனைத்துக் கட்சிக்குழு. அதன் பரிந்துரைகளைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட முடியாது.

அதேவேளை,  நாங்கள் இதை இத்தோடு விட்டு விடமாட்டோம் என்று சுஸ்மா சுவராஜ் கூறியுள்ளார்.எனவே அடுத்து பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும், அது அரசுக்குத் தலைவலி அதிகமாகும்.

அதைவிட இந்தியக்குழு குறைபாடுகளை கூறியுள்ள நிலையில், அதைக் கவனிக்காமல் மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டால், ஏற்கனவே தமிழ்நாட்டுக் கட்சிகளால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடும்.

இப்போது வந்துள்ள சிக்கல் தனியே இலங்கை அரசுக்கு மட்டும் அல்ல. இந்திய அரசுக்கும் தான்
Source: http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/39819-2012-04-23-19-22-39.html

மதத்துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம்

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை தான்  கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மா மன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மா மன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் iகெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொனறிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம்

அமெரிக்காவினால் ஈரான்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையினால் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணையின் எண்ணெயின் அளவை குறைக்க வேண்டியுள்ளதாக  பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஈரானிலிருந்து இலங்கைக்கு வருடாந்தம் 13 கப்பல் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கையில் சுத்திகரிக்கப்படுகிறது.

எனினும் மேற்படி தடை காரணமாக எண்ணெய் கொள்வனவும் ஈரானுடன் டொலரில் வர்த்தகம் செய்வதும் கடினமாகியுள்ளது.

லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பெண் நெரிசலில் சிக்கி மரணம்

லண்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் திடீரென்று மயங்கி விழுந்த கிளாரா ஸ்கொயர்ஸ் என்ற 30 வயது பெண் மரணம் அடைந்தார்.
தற்போது இந்த பெண்ணிற்காக பலரும் நிதி திரட்டி வருகின்றனர், இதற்காக பலரும் நன்கொடை அளித்துள்ளனர். இந்த நிதித்தொகை 20,000 பவுண்டிற்கு மேல் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாராவின் தாயார் சில்லா கடந்த 24 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வந்தார். எனவே தற்போது திரட்டப்படும் நிதித் தொகை, அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு பொதுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய கேத்தரின் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டையைப் பயன்படுத்த அனைத்துலக நிறுவனங்கள் ஆர்வமில்லை – சிறிலங்கா அரசு ஏமாற்றம்

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுவியுள்ள துறைமும், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனைத்துலக கப்பல் மற்றும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாதது சிறிலங்கா அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியுள்ள நிலையில் அங்கு குறிப்பிட்ட சில கப்பல்களே வந்துள்ளன.

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

அறிவோம் ஆங்கிலம்

பிபிசி ஊடகவியல் கல்லூரி


பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன.

இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன.

யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் சட்ட அங்கீகாரம்

மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியிருப்புப் பகுதி ஒன்று
மத்திய கிழக்கின் மேற்குக் கரையில் மூன்று யூதக் குடியேற்றப் பகுதிகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுமார் எண்ணூறு பேர் வரை தங்கியுள்ள இந்த குடியேற்றப் பகுதிகள் 1990களிலேயே அமையப்பெற்றிருந்தன என்றாலும், இவ்வளவு காலமும் அவை உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லாமல் இருந்துவந்தன. இஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவை பாலஸ்தீனர்கள் கண்டித்துளனர் என்றனர்.

டக்ளசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கையின் கடல் வளத்தை அழித்து வரும் தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது, இலங்கை கடற் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழையக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை கண்டித்தும் இதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் ராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டக்ளஸ் தேவானந்தா இரட்டை வேடம் போடுவதாகவும் இலங்கை, தமிழக மீனவர்கள் இடையே உள்ள நல்லுறவை குலைக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர் .

மேலும், அறிக்கையை டக்ளஸ் தேவானந்தா திரும்ப பெறாவிட்டால் 5 லட்சம் மீனவர்கள் திரண்டு போராட்டம் நடத்தப் போவதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ள

Source:http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1204/24/1120424057_1.htm

உயிரைப் பணயம் வைத்தாவது புத்த தர்மத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயார்: பிரதமர் _

இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி.மு. ஜயரத்ன வலியுறுத்தினார்.

சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகரமாக மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின் போது சகல தரப்பினர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். நேற்று முன்தினம் கலகெதர, ஹதறலியத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைவபம் ஒன்றில் கலந்து கொண்டே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத கடமைகளுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: றிசாத்

பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழும் தம்புள்ள பிரதேசத்தில், தமது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானதும், மத வழிபாட்டுத் தளம் சேதப்படுத்தப்பட்டுள்ளதானதும் மனித நேயம் கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த மிலேச்சத்தனமான செயலை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்;,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், தெரிவித்துள்ளார்.

விரைவில் உயர்தரப் பரீட்சை மீள்திருத்த முடிவுகள்

ந.ஜெயகாந்தன்

கடந்த டிசம்பர் மாதம் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் விடைத்தாள் மீள் திருத்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்மாத முடிவிற்குள் மீள்திருத்த பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்க முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் 26 ஆம் திகதி வெளியாகின. இந்நிலையில் வெளியாகிய பெறுபேறுகளில் குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோடு அவ்வாறு குளறுபடிகளேதும் இடம்பெறவில்லை மாவட்ட தர நிலைகளை நிரல்படுத்தியதில் மாத்திரம் தவறுகள் இடம்பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

வவுனியாவில் பஸ் கவிழ்ந்தது நால்வர் படுகாயம்

வவுனியா நிருபர்

வவுனியா பறண்நட்டன்கல் பகுதியில் பஸ் குடைசாய்ந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸே வவுனியா பறண்நட்டகல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
அதிவேகமாக பயணித்த பஸ்ஸே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
vavuniya_bus_accident_2

vavuniya_bus_accident_3
source:http://www.thinakkural.com/news/all-news/local/13477-2012-04-24-13-09-19.html

ரீ-சேர்ட் அணிந்த பயணி ஆடாக மாறிய அதிசயம்

ஹைஏஸ் வாகனம் ஒன்றின் முன் ஆசனத்தில் வழக்கத்தை விட அதிகளவான பயணிகள் இருந்ததை அவதானித்து பரிசோதித்த பொலிஸார் "ரீசேர்ட்' அணிந்த பயணி ஒருவர் ஆடாக மாறியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த "அதிசயச்' சம்பவம் நேற்று முன்தினம் மந்துவிலில் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது மந்துவிலில் சென்று கொண்டிருந்த "ஹைஏஸ்' வாகனம் ஒன்றில் கொள்ளவை விடவும் அதிக பயணிகள் முன் ஆசனத்தில் இருப்பதைக் கண்ட பொலிஸார் அதை மறித்தனர்.

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்

மலர்கொடி வீடு






கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வாகையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது வாகையூருக்கு வருவார்கள்.

வாகையூரைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநத்தம் காவல்நிலையத்தில் தங்களிடம் ரூ.5 கோடி அளவுக்கு ஏமாற்றிவிட்டார் என்று மலர்கொடி மீது புகார் கொடுத்துள்ளனர்.


புகார் குறித்து விஜயராணி, பனிமலர், தனம், தேவகி, வளர்மதி ஆகியோர் நம்மிடம் கூறியதாவது,


கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலர்கொடி மகளிர் சுயஉதவிக்குழு ஆரம்பிக்கலாம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்களும் ஆசைப்பட்டு அதில் இணைந்தோம். எங்களிடம் நெருங்கி பழகிய மலர்கொடி, தேவையான உதவிகளை செய்து வந்தார்.





மலர்கொடியிடம் பணம் மற்றும் நகைகளை இழந்த பெண்கள்


மேலும் அருகில் உள்ள டவுனுக்கு சென்று வரும்போது மளிகை பொருட்களை குறைந்த அளவுக்கு வாங்கி வருவதாக கூறுவார். நாங்களும் அவரிடம் மளிகை பொருட்களை வாங்கினோம். பின்னர் ஆயிரம், இரண்டாயிம் என்று கடன் கேட்பார். உரிய நேரத்தில் கொடுத்துவிடுவார். இதேபோல் பலமுறை வாங்கியுள்ளார். உரிய நேரத்தில் சொன்னபடி கொடுத்தும் உள்ளார்.


ஆனால் ஒவ்வொருவரிடமும் பணம் வாங்கும்போது உங்களிடம் மட்டும் தான் பணம் வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆகையால் பணம் தேவைப்படுகிறது என லட்சங்களில் கேட்டார். இருப்பினும் நாங்கள் முன்பு வாங்கியிருந்ததை திருப்பி கொடுத்துவிட்டார் என்பதை நினைத்து கொடுத்தோம். மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன், உங்கள் செயினை கொடுங்கள் நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றும் வாங்கிச் சென்றார். திரும்பி வரவேயில்லை. திடீரென ஒரு நாள் அவரது வீடு பூட்டியிருந்தது. என்னவென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதுதான் எங்களைப்போல பலர் ஏமாந்திருப்பது தெரியவந்தது என்றவர்கள் ஏமாந்தவர்களின் பட்டியலை வாசித்தார்கள்.


விஜயராணி 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1,20,000
பனிமலர் 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 லட்சம்
தனம் 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம்
தேவகி ரூ.8 லட்சம்
வளர்மதி 8 பவுன் தங்க நகை
சங்கீதா ரூ.4 லட்சம்
தீபா ரூ.3 லட்சம்
பச்சையம்மாள் ரூ.12 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகை
லட்சுமி 4 பவுன் தங்க நகை
ராதா 3 பவுன் தங்க நகை
ராமலட்சுமி ரூ.3 லட்சம்
செல்வி ரூ.2 லட்சம்
செல்லம் ரூ.1 லட்சம்
சித்ரா ரூ.4 லட்சம்
சேகர் சித்ரா ரூ.2.80 லட்சம்
வசந்தா ரூ.1 லட்சம்
அம்சவள்ளி ரூ.2 லட்சம் மற்றும் 4 பவுன்
தைலம்மாள் ரூ.60 ஆயிரம்


இதேபோல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சுமார் ரூ.5 கோடி அளவுக்கு மலர்கொடி ஏமாற்றியுள்ளார் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.



இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்




இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கூறுகையில், மலர்கொடியிடம் லட்சக்கணக்கில் ஏமாந்ததாக வாகையூர் கிராமத்தில் உள்ள பெண்கள் பலர் மாவட்ட எஸ்.பி., பகலவனிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநத்தம் காவல்நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக வட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்துள்ளனர். ஏமாற்றியதாக கூறப்படும் மலர்கொடிக்கு வாகையூரில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ளது. அவரை தேடி வருகிறோம். மலர்கொடி எழுதப் படிக்க தெரியாதவர் என்று கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரையில் மலர்கொடியை கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியவைகளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74591

தமிழகத்தில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நெல்லை: தமிழகத்தில் முன்பை விட தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக எழுத்தாளர்களும், பதிப்பகத்தார்களும் தெரிவித்துள்ளனர்.

நூல்கள் படிப்பதை புலனறி வழக்கம் என்பர். வாசிக்கும் பழக்கம் மனதை இலகுவாக்கும். வாழ்வை வளமாக்கும். இந்த கணினி யுகத்தில் இணையத்தில் உலவும் இளைய சமூகம் இழந்த சொர்க்கம், வாசிக்கும் பழக்கம். மேலை நாடுகளில் கூட புத்தகம் படிப்பது குறைந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.

தண்ணீருக்காக மணிக் கணக்கில் காத்திருந்து தாகத்தால் இறந்த பெண்!

தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பழங்குடியினப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வசாய் எம்.எல்.ஏ. விவேக் பண்டிட் கூறுகையில்,

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மோகதா தாலுகாவில் உள்ள டோலரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் பார்வதி ராமு ஜாதவ்(37). அப்பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. வாரத்தில் 4 நாட்கள் மட்டமே தண்ணீர் லாரி கிராமத்திற்கு வரும். கடந்த சனிக்கிழமை லாரி வந்தபோது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தனர்.

கணக்கு தேர்வில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்தில் +2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: கணக்கு தேர்வில் எங்கே பெயலாகிவிடுவோமோ என்ற பயத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் திருவள்ளுவர் நகர், சோலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் வார்டனாக இருக்கிறார். அவரது மகள் வினோதினி(17). சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்த அவர் பொதுத் தேர்வுகள் முடிந்ததையடுத்து வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிலங்கா நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரும் மே மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் வழங்குவதில்லை என சிறிலங்கா மத்திய வங்கி முடிவு செய்துள்ளதால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை முதலீட்டாளர்கள் டொலரை வாங்குவதற்கு முண்டியடித்தனர்.

தம்புள்ள புனித பூமியில் முஸ்லீம் ஆக்கிரமிப்பு என்கிறார் ஓமல்பே சோபித தேரர்:-


தம்புள்ள புனித பூமியில் முஸ்லீம் ஆக்கிரமிப்பு என்கிறார் ஓமல்பே சோபித தேரர்:-

பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் உடனடியாக நிறுத்தம் என்கிறார் பிரதமர்

 
அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே சூழ்ச்சிகள் செயற்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முப்பது வருட போரின் பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதற்காக எந்த பேதமின்றி மகிழ்ச்சியடைந்தாலும் இலங்கையானது சர்வதேசத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Monday, April 23, 2012

அடுத்த தடவை ஜெனீவாவில் இலங்கை ஆதரவை மேம்படுத்த வழியென்ன?

கலாநிதி
ஜெகான் பெரேரா
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடந்து முடிந்ததன் பின்னர் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை காணப்படுவதாக தென்படுகிறது. அரசாங்கத்தின் முன்னணியின் தலைவர்கள் சிலர் ஜெனீவா சென்ற குழுவில் அங்கம் வகித்தவர்கள்.
இருந்த போதிலும், அவர்கள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள  உள்வாரியாக முரண்பாடு நிலவுவதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கில் நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு விடாதும் அதன் குறைந்த பட்சமாக்கி பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் தான் (வாக்கெடுப்பில்) வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ள விரும்பியது. ஆனால் அரசாங்கம் ஜெனீவாவில் நடைபெற்ற 13 ஆவது கூட்டத் தொடரில் 39 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தமையுடன் ஒப்பிடுகையில் இப்போது 19 ஆவது கூட்டத் தொடரில் 15 வாக்குகளையே பெற்று அதன் சர்வதேச ஆதரவால் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதன் காரணமாக அது தொடர்பில் அரசாங்கத்தினால் விவாதிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

தோல்வியை கண்டு அஞ்சுபவரா நீங்கள்? - இது உங்களுக்குத்தான்....

தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.

டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

குழந்தை பாக்கியம் இல்லாத கனடியர்கள் அமெரிக்காவில் இருந்து உறைந்த நிலையிலுள்ள கரு முட்டைகளை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு

மகப்பேரின்மையால் அவதிப்பட்டு வரும் கனடிய தம்பதியினர் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளை அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.  அமெரிக்க முட்டை வங்கிக்கு பணம் செலுத்தி விட்டால் உடனடியாக கருமுட்டை கனடிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் கனடாவிலேயே தம்பதிகள் வைத்தியத்தை  தொடர்ந்து கொள்ளலாம். இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இது போன்ற முன்னேற்றங்களை கனடாவில் வசிக்கும் பல தம்பதிகள் பாராட்டியுள்ளனர்.
மனித கருமுட்டைகளை தானமாக அளிப்பது கனடாவில் சட்டத்திற்கு புறம்பான் ஒரு செயலாக கருதப்பட்டு வருவதால் மகப்பேரின்மை சிகிச்சைகளை எடுத்து வரும் கனடிய தம்பதியினர் பல இடர்பாடுகளை அனுபவித்து வந்தனர்.

தம்புள்ள நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது

பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல்லா
 தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குரல் மூலம் கடவுச்சொல்​லை ஏற்படுத்தக்​கூடிய USB driveகள் அறிமுகம்

கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன.
எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை.
இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன.

மன்னாரில் குப்பைகள் அகற்றுவதில் சுத்திகரிப்பு பணியாளர்கள் அசமந்தம்

தலைமன்னார் நிருபர்
Photo:Mannar.com

மன்னாரில்  குப்பை கூளங்களை அகற்றும் பணியினை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்ற போதும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்வதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு, இதுபற்றி மன்னார் நகரசபையிடம் முறையிட்டுள்ளனர். சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் பலர் நிரந்தர பணியாளர்களாக காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த போதும் தற்போது இவர்கள் இலாப நோக்குடன் கடமையாற்றுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரின் பாலியல் சேட்டை - சிறீலங்கா காவல்துறையும் உடந்தை

மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் மீள் குடியேற்ற பகுதிகளில் இருந்து மாலை நேரங்களில் மன்னாருக்கு வரும் இளம் பெண்களை தமது முச்சக்கர வண்டியில் ஏற்றி பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் இதற்கு மன்னார் சிறீலங்கா காவல்துறையினரும் உடந்தையாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிவிக்கின்றார்.

மன்னார் பஸார் பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் ஒரு சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையினால் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டள்ளனர்.

கழிப்பறையைவிட மோசமானவை கணினி மௌஸ்கள்

கழிப்பறை இருக்கையில் உள்ளதைவிட கணினி மௌஸ்களில் மூன்று மடங்கு அதிகமான கிருமிகள் காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அலுவலக மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள் தமது கணினிகளை கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தம்புள்ள விவகாரத்தின் எதிரொலி்; அரபு நாடுகளின் ஆதரவை இழக்கிறது அரசு?!

தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு அரபு நாடுகள் பலத்த கண்டனத்தையும், கடும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.அத்துடன், குறித்த அரபு நாடுகள் இலங்கையிலுள்ள தமது நாட்டுத் தூதுவர்களிடம் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பிலான முழு விவரங்களையும் திரட்டி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளன.
இதன்படி இலங்கையிலுள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளன.

பிரதமரின் கருத்துக்கு அலவி மௌலானா எதிர்ப்பு!


தம்புள்ளை – ரங்கிரி பள்ளிவாசலை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பிரச்சினை தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நேற்று (22) கம்பளையில் இடம்பெற்ற கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என அலவி மௌலானா கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், கம்பளை கூட்டத்தில் அலவி மௌலானாவும் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியானது உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றும் சூழ்ச்சிகர நடவடிக்கை என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா இன்று (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
Source: http://www.saritham.com/?p=57838

வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்

Posted Image  நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.

இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.

குப்பை மெயில் அனுப்புவதில் இந்தியா முன்னணி Spam: India leads world in junk emails

India has become the top spam-spewing nation on the planet, suggests a report.
Compiled by security firm Sophos, the report ranks nations by the amount of junk mail routed through computers in each country.
India has leapt to the top of the spam chart in less than a year, rapidly overtaking the US, said Sophos.
About 10% of all junk mail sent across the web came from or passed through computers in India, said the firm.
India's rapid rise up the chart of spam producers has been helped by the rapid growth of the web in the country, said Graham Cluley, senior technology consultant at Sophos.
The inexperience of the many first-time net users in India had led many to fall victim to hi-tech criminals, he said.

குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல்

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.

முன்னதாக விழா ஒன்றில் 18 வயதுக்குட்பட்ட 42 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் பிரித்வீபுரா கிராமத்துக்கு விரைந்து சென்று திருமணம் செய்ய உள்ளவர்களின் வயது குறித்த சான்றிதழை கேட்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்தனர் என கடோலி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 400 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74537

ஈழத் தமிழர் பற்றிய ரங்கராஜன் பேச்சு வடி கட்டிய பொய்- சீமான் தாக்கு

சென்னை: இலங்கைக்கு சென்று வந்த மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், உண்மைக்குப் புறம்பான வடிகட்டிய பொய்யான தகவல்களைக் கூறுவதாக நாம் தமிழர் கட்சியின் த்லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சாத்வீகமும் ஆயுதமும்

தமிழ் ஈழத்துக்காக சாத்வீக வழியில் போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்விளைவாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப்போராக சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த அப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வடிகட்டிய பொய்

சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் மின்னலுல் தாக்கி 22 பேர் பலியாகியுள்ளனர்!


ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் இன்று காலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அரவது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை எஹலியகொடை பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவரொருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிறுவன் வைபவமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Source; http://www.seithy.com/

கல்முனையில் பிடிக்கப்பட்ட 15 அடி நீள முதலை!

கல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வன பரிபாலன சபை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது. கல்முனை, பாண்டிருப்பு தாளாவட்டான் சந்தியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்தே இம் முதலை பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் முதலையைக் கண்ட பொதுமக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் வனப்பரிபாலனை சபை அதிகாரிகள் முதலையை பிடித்து லொறியில் ஏற்றிச் சென்றனர். மேற்படி கிணறு உடைக்கப்பட்டு இம் முதலை பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spource:http://www.seithy.com/breifNews.php?newsID=59038&category=TamilNews&language=tamil

ஒலிம்பிக்கிற்கான தகுதியைப் பெற்ற முதலாவது இலங்கையர் இந்திரஜித் குரே

லண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அநுராத இந்திரஜித் குரெ பெற்றுக்கொண்டுள்ளார்.

லண்டனில் ஞாயிறன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற 32ஆவது வேர்ஜின் லண்டன் மரதன் போட்டியின்போது லண்டன் 2012 ஒலிம்பிக்கிற்கான குறித்த தராதர நேரப் பெறுதியான 2 மணித்தியாலங்கள் 18 செக்கன்களைவிட 10 செக்கன்கள் குறைவாக எடுத்துக்கொண்டதன் மூலம் அவர் இந்தத் தகுதியைப் பெற்றார்.

அமைச்சர் பீரிஸின் இரகசிய செயல்திட்டம்

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார்.
 நேற்று 22.04.2012 அன்று சண்டேரைம்ஸ் எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி


கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார்.

இரு ஆண்டுகளுக்குள் இரண்டாகும் இலங்கை ஐ.நா. படை இதை அரங்கேற்றும்; எதிரணிக் கட்சிகள் எச்சரிக்கை

ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும். ஐக்கிய நாடுகள் அமைதிப்படை வடக்கு, கிழக்கிற்குச் சென்று இதனை அரங்கேற்றும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
 
 
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நவசிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா இது தொடர்பாகத் தெரிவித்ததாவது
ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரியும், அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்கக் கோரியும் நாம் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம். 

கவலை, ஆத்திரம், அப்பப்போ ஆவேசம்...: ஹக்கீம் _

இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரித்தார்.

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை – ரங்கராஜன்

இலங்கைத் தமிழ் தலைவர்கள் தனி ஈழத்தை கோரவில்லை என இந்திய மாக்சிச கம்யூனிஸட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரீ.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்றே தமிழ்;த் தலைவர்கள் விரும்புகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் ஐக்கிய இலங்கை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் அறிகுறி!

முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளதால் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்தத் தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆதரவு, பௌத்த பிக்குகள் இதற்கெதிராக தூண்டப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது முஸ்லிம் சமுகம் தற்போது அதிருப்திகொண்டுள்ளது.

Sunday, April 22, 2012

அனைத்துலக மன்னிப்புச் சபையின் தோற்றமும் பணிகளும். – செண்பகத்தார்

மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட உலகளாவிய ஆதரவாளர்களைக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை 2011 டிசம்பர் 10ம் நாள் தனது ஜம்பது வருட வாழ்வை நிறைவு செய்துள்ளது. பீற்றர் பெனன்சன் (Peter Benenson) என்ற பிறிட்டிஷ் வழக்கறிஞர் தனி மனிதனாக இந்த அமைப்பபைத் தோற்று வித்தார்.
போத்துக்கல் நாட்டு இரு இளம் மாணவர்கள் அடக்கு முறைக்கு எதிராகக் கோசமிட்டதற்காக 1961ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்கள். இதை அறிந்த பீற்றர் பெனன்சன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒப்சேவர் பத்திரிகை வாயிலாக “மறக்கப்பட்ட கைதிகள்” (The Forgotten Prisoners) என்ற கட்டுரையைப் பிரசுரித்தார்.
அந்தக் கட்டுரையில் அவர் “மன்னிப்புக்கு மனு 1961” என்ற கோரிக்கையை (Appeal to amnesty 1961) விடுத்தார். அதற்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்தது. உலகப் பத்திரிகைகள் அவருடைய கட்டுரையை மறுபிரசுரம் செய்தன. பீற்றர் பெனன்சன் விடுத்த “நடவடிக்கைக்கு அழைப்பு” (Call to action) சிந்திக்கும் மனிதர்களின் மனச்சாட்சியைத் தொட்டது.
இது தான் அம்னெஸ்ரி இன்டர்நாஷனல் (Amnesty International) தோற்ற வரலாறு. அதனுடைய சர்வதேச மாநாடு யூலை 1961ல் நடைபெற்றது. பெல்ஜியம், ஜக்கிய இராச்சியம், யேர்மனி, அயர்லாந்து, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பேராளர்கள் வருகை தந்தனர்.

வடக்கின் கல்வி நிலைமை பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கி வருகின்றது

வடக்கின் கல்வி நிலைமை பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வன்னிப் பிரதேச கல்வி தரம் n;தாடர்பில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும் மிகவும் குறைந்தளவான மாணவர்களே உயர்தரத்திற்காக தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

மகிந்தவின் மானத்தை காத்ததற்கு கைமாறாக பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது- றம்ழான்!

ஜெனிவாவில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நின்ற வேளையில் மகிந்த ராசபக்சவினதும் இலங்கை அரசாங்கத்தினதும்  மானத்தையம் மரியாதையையும் காக்க துணிந்து நின்று செயற்பட்ட முஸ்லிம்களுக்கு கைமாறாக தம்புள்ள நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் பேரினவாதிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் உடனடியாக விழித்தெழுமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுள்ளார்.

தென்னை மரவாடி பிள்ளையார் ஆலய புனரமைப்புக்கு 5 இலட்சம் ரூபா ஒதுக்கீடு சம்பந்தன் எம்.பி. உறுதி

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான தென்னைமரவாடியில் வன் செயல்களுக்கு இலக்காகி சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்படும் பிள்ளையார் கோயிலின் புனரமைப்புக்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியை தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கித்தருவதாகத் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை தென்னைமரவாடிக் கிராமத்திற்குச் சென்ற சம்பந்தன் சேதமடைந்த நிலையில் காணப்படும் பிள்ளையார் ஆலயத்தைப் பார்வையிட்டார். 1984 வன் செயலின் போது, இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பொன்னகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த குடும்பங்களில் சுமார் 70 குடும்பங்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்தில் குடியமர்ந்துள்ளனர். அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சம்பந்தன் ஆலய புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த இரு நாட்களுக்கு கியூபெக், ஒன்றாரியோவை பெரும் பனிப்புயல் தாக்கலாம்- சுற்றுச் சூழல் கனடா எச்சரிக்கை

எதிர்வரும் மூன்று நாட்களிலும் கியூபெக்கில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என வானிலை அவதானிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 சென்றிமீட்டர்கள் அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கியூபெக் நகர வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் பாதிப்பு ஒன்றோரோரியோவின் அனைத்து பகுதிகளிலும் உணரக் கூடும் என்பதால் ஒன்றோரியோவைச் சேர்ந்தவர்களும்

மன்னார் நாயாத்து வழி வீதியில் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்கின்றது

கடந்த வன்னி யுத்தத்தின் பின் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாத்து வழி பாதையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச்சாவடியினால் பொது மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியூடாக விடத்தல் தீவு,சன்னார்,ஈச்சலவக்கை,பெரிய மடு,கோவில் குளம் ஆகிய கிராமங்களுக்கும் சங்குப்பிட்டி வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறுகின்றமை வழமை.

இந்த நிலையில் குறித்த நாயாத்து வழி பாதையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடியினால் பயணிகள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

பெண் நோயாளிக்கு முத்தம் கொடுத்ததாக டாக்டர்கள் மீது தாக்குதல்

டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் அரசு மருத்துவமனைக்கு 16 வயது பெண் நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டார். 6 டாக்டர்களை கொண்ட குழு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.

காய்ச்சல், உடல் வலியை போக்க ஊசி போட்டனர். சிறிது நேரத்தில் அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினர்.

இலங்கை அணி வீரர் முபாரக் கைது _

கொழும்பு - சிலாபம் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெஹான் முபாரக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெஹான் முபாரக் செலுத்தி வந்த டிபென்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. இதனையடுத்து சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒரே இடத்தில உட்காராதீங்க! ரத்த கட்டு பாதிப்பு வரும்!

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் உடல் பருமன் கொண்டவர்களுக்கும் ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் ( Deep Vein Thrombosis ) நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும்.

நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருப்பது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் படுக்கையில் படுத்திருப்பது. விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன.

இளைய தலைமுறை பாதிப்பு

அழகிரி - ஸ்டாலின் மோதல் விவகாரத்தில் பிரச்னை வெடித்தது: கருணாநிதி விரக்தி

அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், கட்சியில் புயலைக் கிளப்புவதற்கு முன், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குள் புயல் வீசி வருகிறது. ஸ்டாலின் மதுரைக்கு வந்த பிரச்னையில் தி.மு.க., தென் மண்டல செயலர் அழகிரியின் ஆதரவாளர்கள், 17 பேருக்கு, தி.மு.க., தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அடுத்து என்ன: இதையடுத்து, கடும் கோபமான அழகிரி, மதுரை வந்ததும், கட்சியில், யாருக்கும் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று, கட்சி சட்ட திட்டத்தில் இல்லை என்று பதிலளித்தார். அவரது ஆதரவாளர்கள், 17 பேரும், கட்சித் தலைமைக்கு, தனித்தனியே விளக்கம் அளித்து பதில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

இலங்கைப் பயணம்: சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

ஒரு பேப்பருக்காக – வேல் தர்மா
இந்த ஆண்டு இலங்கைப் பத்திரிகைகளில் இதுவரை வந்த நகைச்சுவைகளில் மிகச் சிறந்த நகைச்சுவை இந்திய இணை அமைச்சர் வி நராயாணசுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியதே. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று சுஸ்மா சுவராஜ் தலைமையில் போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக என்று சொல்லிக் கொண்டு இலங்கை சென்றது. அது பசில் ராஜபக்ச, மலையத் தொழிற்சங்கவாதிகள், மலையக அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடபடப் பலதரப்பினரைச் சந்தித்தனர். இக்குழுவின் பயணம் தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் வி நராயாணசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இக்குழுவினர் 15-ம் திகதியில் இருந்து 21-ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator