Monday, April 9, 2012

டிரான்சிஷன் பறக்கும் காரின் விலை அறிவிப்பு: இதுவரை 100 பேர் புக்கிங்

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் உலகின் முதல் பறக்கும் காரான டிரான்சிஷனுக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா வடிவமைத்துள்ளது. ஏற்கனவே பறக்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் முதல் பறக்கும் காராக டிரான்சிஷன் கருதப்படுகிறது.

கடத்தப்பட்ட குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிப்பு

கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இவரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறிலங்கா அரசுக்கு அவுஸ்ரேலியா கடும் அழுதங்களைக் கொடுத்திருந்தது.

கூடங்குளம் அணு உலை- பாதிப்பை தவிர்க்க இலங்கையில் 5 எச்சரிக்கை கோபுரங்கள்!



தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக அணு சக்தி அதிகார சபை கூறியது.
ஜப்பான், புகுசிமாவில் ஏற்பட்டது போன்று அணுகசிவு ஏற்பட்டால் அதனை முன் கூட்டி அறிவதற்காக இந்தியாவை நோக்கி ஐந்து முன்னெச்சரிக்கை கோபுரங்களை அமைக்க உள்ளதாக அணு சக்தி அதிகார சபை தலைவர் டாக்டர் ரஞ்சித் விஜேவர்தன கூறினார்.

புனரமைக்கப்பட்டது காந்தியின் உருவச்சிலை _

  மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37522

American singing tamil song Eeram

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த வியாபார வகானத்தின் சாரதி வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

சிறிலங்காவினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் புலி எனும் கிலி- அனலை நிதிஸ். ச. குமாரன்


ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை.

இலங்கைப் பொருளாதாரம்

ஒரு நோயாளியின் நாடித் துடிப்பை பிடித்து அறிவது போல ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தினை அறிவதற்கு, அந்த நாட்டில் நிலவும் பொருட்களின் விலை, வட்டி வீதங்கள், பங்குச் சந்தை, வெளி நாட்டு வர்த்தகம், வெளி நாட்டு நாணயம் மற்றும் இதர உள் நாட்டு, வெளி நாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தொகுத்து ஆராய வேண்டும்.  

Drug Storage At Cancer Hospital At Risk

By Nirmala Kannangara
The effectiveness of medicines, including chemotherapy drugs, stored in the cold room at the Cancer hospital in Maharagama have been drastically affected due to a breakdown in the cooling machines.
Cancer Institute sources told The Sunday Leader on condition of anonymity that although the cooling machines in the cold room have been malfunctioning over the past one and a half months nothing has been done to rectify the situation.

தாம் முன்வைத்த தீர்வு யோசனைகள் குறித்துப் பதிலளிக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெற முடியாதென இரா சம்பந்தன் கூறினார்.




அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லையென தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கூட்டமைப்பு கையளித்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைகளுக்கு அரசு இன்னமும் பதிலளிக்காத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியுமென அவர் எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.

லண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்?



லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை
ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரே இரவில் தீர்வை கொண்டுவர முடியாது - இறக்குமதியும் செய்ய முடியாது: மஹிந்த ராஜபக்க்ஷ

இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை கடந்த வருடம் பதிவு செய்துள்ளது என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற 2011 ஆம் வருடத்துக்கான மத்திய வங்கி அறிக்கை வெளியிடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

Kangoo it! with Kinga - The Roof is on Fire (Bucuresti Mall)

120,000 தமிழீழ ஏதிலிகள் இந்தியாவில்

யுத்த காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர்களில் 120,000 பேர் இன்னும் இந்திய முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

Lanka to complain to international watchdog about India's nuclear plants



The Kudankulam nuclear power plant.
Colombo: Sri Lanka has expressed concern over possible impact of radiation from India's nuclear power plants located in the southern region, as it prepares to raise the issue with global atomic watchdog, the International Atomic Energy Agency or IAEA.

The official raising of concern with the IAEA is to be made in September, Sri Lanka's Power and Energy Minister Champika Ranawaka said.

"We respect the right of India to have nuclear power stations. But our concerns are on the possible radiation affects they could have on Sri Lanka. We have already written a letter", Ranawaka said.

மனதிற்கு அமைதி தரும் வண்ண மீன்கள்

வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி வளர்ப்பதைப்போன்று பலவிதமான மீன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்றவை அதிக அளவில் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களின் முகப்பிலும் மிகப்பெரிய மீன்தொட்டிகள் வைத்து விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன. பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் மீன் வளர்ப்பாளர்கள் உங்களுக்காக கூறியுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.

இலஞ்சம் பெற்றதாக வன திணைக்கள அதிகாரி கைது

அனுமதிப்பத்திரத்தின் கால எல்லையை நீடிப்பதற்காக நபரொருவரிடமிருந்து 50,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவரை கந்தளாயில் வைத்து ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வன பாதுகாப்புத் திணைக்கள தம்பலகாமல் பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர் காட்டுப் பகுதியில் கிறவல் தோண்டுவதற்கான அனுமதிப்பத்திர ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்க முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Source: http://www.thinakkural.com

கேதீஸ்வரத்தில் வெண்கலப் புத்தர்

மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்த பௌத்த வழிபாட்டுத் தலம் நிர்மாணிக் கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பீதியும் காணப்படுகிறது.
இந்தப் பகுதியில் பௌத்த மக்கள் எவரும் வசிக்காத நிலையில், தனியார் காணியை அபகரித்து பௌத்த தலம் அமைக்கப்பட்டுள்ளமை திருக்கேதீச்சரம் தனித்து இந்து மத வழிபாட்டிடமாக இருப்பதை மாசுபடுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்று பிரதேச இந்து, கிறிஸ்தவ மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஏதும் கைக்கொள்ளப்படாமல் படையினர்
 

இந்தியாவுடன் உறவுகளை சிராக்கும் முயற்சி சறுக்கல் ; ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே முதலில் எதிர்பார்க்கிறது புதுடில்லி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர விரிசலை சரி செய்ய இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியாவிடம் இருந்து பச்சைக் கொடி காட்டப்படவில்லை.

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியம் என்கிறார் நெசர்பே பிரபு!


british mp in jaffna (4)

வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மரபு ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்ற போதிலும், படையினரை நிலைநிறுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிஹின் லங்காவில் திடீர் தீ-அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம்!


mihinanka

மலேசியா நோக்கிப் பயணித்த மிஹின் லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: http://www.saritham.com/?p=56608

Sunday, April 8, 2012

கடத்தப்பட்ட மகன் குணரட்னத்தை விடுதலை செய்யக்கோரி அவரது தயார் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்

கொந்தளிப்பான கடலில் மீன்பிடித்தல்: (தமிழாக்க கட்டுரை..)

(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார்.
(தமிழழாக்கம் - நக்கீரன்.)

இலங்கை - இந்திய உறவில் விரிசல் ஏற்படுகிறதா?


ஜெனீவா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது இலங்கை விடயமாக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து இலங்கை இந்திய உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தான் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தினால் சற்று மனக் கசப்படைந்து இருப்பதாகவே தெரிகிறது.

AIDS on the rise in Sri Lanka, one more death

An HIV/AIDS death was reported at the Negombo Hospital raising concerns over the increasing number of deaths from the ‘silent
epidemic.’
The victim in his early forties has been working in a European country
for many years. Hospital sources said that he was admitted to the
hospital vomiting blood and died the same evening due to severe
symptoms of AIDS.

72 வயதில் பட்டம் பெற்று மருதானை மூதாட்டி சாதனை

அறிவுப் பயணத்திற்கு வயது தடையாக அமையாது என்பதை மருதானையைச் சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் எடுத்துக்காட்டியுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவில் 72 வயதான குறித்த வயோதிபப் பெண் பட்டத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக தான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இலக்கினை எட்டியுள்ளதாகவும் இது தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி வெலிவிடகே பகுதியில் பிறந்த கருணா வெலிவிடகே ஆசிரியையாக தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இந்த விடயம் அனைவருக்கும் சிறந்ததொரு முன்னுதாரணம் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சாந்த அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கின்னஸ் சாதனைகள் தொடர்பான செயற்குழுவிற்கு தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Source: http://www.thinakkural.com/news/all-news/local/12483-72------.html

85 சதவீத பெண்களுக்கு 'பிரா' குறித்த விழிப்புணர்வு இல்லையாம்!

ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா!

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா.

கெலும் பண்டார)

இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க  இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இந்தியாவின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் இலங்கை-இந்தியக் கடற்பரப்பில்!

Add caption
இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் அந் நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையிலான பாக்கு நீரிணையின் கடற் பிராந்திய நடவடிக்கைகளைக் காண்காணிக்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பாக்கு நீரிணை, மன்னார் குடா மற்றும் பாக்கு நீரிணை குடா என்பனவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் ஆளில்லா உளவு விமான கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறந்த முறையில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Source: http://www.eeladhesam.com

வெளியுறவு அமைச்சராக மீண்டும் ரோகித போகொல்லாம?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றியடைந்ததன் காரணமாக சிறிலங்கா அமைச்சரவையில் பலவீனமடைந்துள்ள ஜீ. எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகல்லாகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்தவின்

பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் துக்கிட்டு தற்கொலை.

பாதுகாப்புக் கடமையில் நின்றுகொண்டு இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் அருகில் இருந்த மரம் ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இரவு கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சிப்பாயினது சடலம் இன்று காலை மரத்திலிலுள்ள கொப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் 7 பற்றாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சாந்த (வயது47) என்ற அம்பாறை மாவட்ட சிங்களப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்.

எனினும் மேற்படிச் சிப்பாயின் மரணம் தொடர்பாக இராணுவத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் தற்போது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=13280:2012-04-08-16-18-34&catid=1:aktuelle-nachrichten

Future Technology Watch your day in 2020

Sri Lanka concerned over Indian n-plants

Concerned over nuclear power plants located in south India, the Sri Lankan government plans to raise the issue before the International Atomic Energy Agency (IAEA). According to Sri Lankan minister for Power and Energy Champika Ranawaka, the issue would be raised at the next International
Atomic Energy Agency confabulation scheduled in September, Xinhua reported Sunday. Sri Lankan is concerned over the impact a nuclear disaster in one of the plants located in southern India could have on Sri Lanka, he said.

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய சாத்தியம்

இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப் படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித் தமைக்காக,

இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து,

இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர்.

எனவே எந்நேரமும் பொருளாதாரத் தடை பற்றிய அறிவித்தல் வெளியாகலாம் என்பதால் இலங்கை அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Source: http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=73758

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை

  போய்க்கொண்டே இருந்தோம். அந்த முகங்களைத் தேடி. அடர்ந்த காடு, உடைந்த றோட், விரிந்த புல், வயல் வெயிலில் காய்ந்த பயிர் போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம். அங்கே கண்ட காட்சிகள் எம்மை அதிர்ச்சி அடைய வைத்தன.

வடக்கில் நிலக்கண்ணி அகற்றும் பணி ஜூலை மாதத்திற்குள் முடிந்து விடும் அமைச்சர் கூறுகிறார்

வடபகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை நிறைவுபெற்று இரண்டு மாதங்களுக்குள் மீள் குடியேற்றப் பணிகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா செட்டிக்குளம் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி நிவாரணக் கிராமங்களில் தொடர்ந்தும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியத் துரோகம் மீண்டும் மீண்டும்

1987ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். செல்லாக் காசுக்குச் சமனான அந்த இந்திய இலங்கை ஒப்பந்தம், பின்னாளில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் செயலிழந்தது.

பாகிஸ்தானை கிழக்கு மேற்காகப் பிரித்து வங்க தேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தி, இலங்கையில் அதைச் செய்ய முன்வரவில்லை.

ஜெனிவாவில் இலங்கையை ஆதரித்த நாடுகளின் நிலையை இந்தியா விரைவில் மாற்றும்: ப.சிதம்பரம்

திருச்சிராப்பள்ளி: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளையும் அடுத்த கட்டத்தில் இந்தியா தமது ராஜதந்திரம் மூலமாக தம் பக்கம் மாற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு மற்றும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு என மூன்று விஷயங்களை உள்ளடக்கி முப்பெரும்விழாவை காங்கிரஸ் கட்சி நடத்தியது.

Saturday, April 7, 2012

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மடுக்காட்டில் வெடிபொருட்களை எடுத்த மூவருக்கு விளக்கமறியல்

மன்னார் நிருபர்

மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கப்பற்படை விமானம் குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது

அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது.
இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து ஏற்பட்டபோது இரண்டு பயிற்சி விமானிகள் பாதுகாப்பான முறையில் வெளியே குதித்து தப்பினர். இவ்விபத்தில் 7 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் மார்க் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க மீட்புப் படை, விமானத்தின் சிதறிய பகுதிகளையும் மற்றும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக விர்ஜினியா கடற்பகுதியின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் தலைவர் டிம் ரிலே தெரிவித்துள்ளார்.

உடலை ’சிக்’ என்று வைக்க …. சில வழிமுறைகள் !

உடலை ’சிக்’ என்று வைக்க …. சில வழிமுறைகள் !



உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது.

நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம். எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி-மனமும் நீங்களல்ல
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

Ammunition find in Mannar

A cache of explosives buried by the LTTE sometime during the fighting was recovered by the navy at a location in Vediththatheeva in the Mannar District yesterday, a senior official said today.
The finds included five 60mm mortars, an equal number of anti-personnel mines, two hand grenades and 1600 rounds of live 7.6x39mm ammunition, Navy Spokesperson Kosala Warnakulasuriya said.

எல்லை தாண்டி வந்தால் கைது! - இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை!

எல்லையைத் தாண்டி வந்தால் கைது செய்வோம் என்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ஆம் திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி

உடல் ஆரோக்கியத்திற்கும், பாலுணர்வுக்கும் தொடர்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நலத்தைப் பராமரித்தாலே பாலுணர்வுக்கான லிபிடோ சக்தி ஆரோக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆரோக்கியமான உடல்

ஏப்ரல் 14லிருந்து கொழும்பு – மதுரை விமான சேவை ஆரம்பம்

கொழும்பு – மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திலோ சென்னையைத் தவிர வேறு எதுவும் சர்வதேச விமான நிலையங்களாக இல்லை. இத்தனைக்கும் மதுரையும், கோவையும், முழுக்க தகுதி படைத்த நகரங்களாகவே உள்ளன. ஆனாலும், இங்கிருக்கும் விமான நிலையங்கள் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன.

கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம் _

கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களையும் வேலை ஒப்பந்தங்களையும் www.eps.go.kr என்ற இணைத்தளத்தை பார்வையிடலாம். இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் வேலை தேடுபவர் email கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் கொரிய மனிதவள மையத்தில் வேலை ஒப்பந்த விபரங்களைப் பெறமுடியும்.

விண்ணப்பகாரருக்கு பின் இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை

கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை

கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.

Friday, April 6, 2012

வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா விதிகள் பிரிட்டனில் நேற்று முதல் அமுல்

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டனில் கல்வி கற்பது தொடர்பான கடுமையான விசா விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் பிரிட்டனில் அமுலுக்கு வந்துள்ளன. இனிமேல் பிரிட்டனில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பினால் அரச அங்கீகாரம் பெற்ற தொழில்கொள்வோரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன் வருடாந்தம் ஆகக்குறைந்தது 20,000  ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறக்கூடிய தொழிலையும் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய சட்ட விதி அமுலுக்கு வந்துள்ளது.
அத்துடன், அதிகளவுக்கு தொழித்தேர்ச்சி பெற்ற வேலையாட்களின் வருடாந்த தொகையையும் இருவருடங்களுக்கு முடக்குவதாக அரசாங்கம்

Unlimited funds to buy stocks of paddy

The zonal officials of the Paddy Marketing Board and the co-operatives have been instructed to buy as much paddy from farmers this season, since unlimited funds are available, depending on the purchase rate Anuradhapura District Secretary Mahinda Senevirate said.

He said that in the Mannar district, around 105,000 hectares of land were cultivated with paddy and a harvest of 450,000 metric tons was expected.

It is learnt that inadequate storage facilities have hampered the government sector maha season paddy purchasing programme though districts such as Anuradhapura, Mannar, Vavuniya, Mulaithivu, and Kilinochchi come under the PMB's Anuradhapura zonal authority.

Reports indicate that sans sufficient and systematic warehouse accommodation in Mannar, Kilinochchi and Mulaithivu farmers were forced to sell their paddy harvest at lower prices than the government guaranteed price to private sector paddy purchasers.

யானையின் புத்திசாலித்தனம் - காணொளி

கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்


சாலையில் நடந்து  செல்லும்போது கூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.

“அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள்.

எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏற்பாடு


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்

Tuaregs claim 'independence' from Mali

Help us: Visit our ads

கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்தது வடமாகாணம்!


அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப்  பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தென் சீன கடல் பகுதி உலக சொத்து: சீனாவுக்கு கிருஷ்ணா பதிலடி

புதுடெல்லி: தென் சீன கடல் பகுதி உலகத்திற்கே சொந்தமானது என்று சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ்.எம். கிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார்.

சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஏசியான் உச்சி மாநாட்டின் போது  ஒப்பந்தம் ‌மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி )  நிறுவனம் அங்கு கச்சா எடுக்கும் பணிகளை‌ மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு சீனா கடும் ஆட்சேபமும்,  எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது.

இதனிடையே, த்ங்கள் நாட்டின் தெற்கு கடல் பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேறவிட்டால், இந்தியா மிகப்பெரிய  விலையை கொடுக்க வேண்டியது வரும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.  கிருஷ்ணாவிடம் இது குறித்து கேட்டபோது,"தென் சீன கடல் பகுதியை உலக சொத்தாகத்தான் இந்தியா கருதி வருகிறது  என்றார்.

மேலும் இந்த உண்மையை ஏசியான் நாடுகள் மட்டுமல்லாது, ஏசியான் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளூடனான  பேச்சுவார்த்தையின்போது சீனாவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Source: http://news.vikatan.com

புனித வெள்ளியன்று பெண்ணின் கை, கால்களில் ரத்தம் கொட்டியதால் சேலத்தில் பரபரப்பு

சேலம், ஏப்.6: புனித வெள்ளி தினத்தன்று சேலம் ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கை, கால்களில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளா மாநிலம் பாலக்காடு தொட்டிபாறையை சேர்ந்தவர் ஜோஸ்பின் விமலா(30). இவர் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார். ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆசிரமத்தில் தங்கி இருப்பார். இந்த ஆசிரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு நடத்துவார்கள்.அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொள்வார். தவக்காலமான 40 நாட்களும் அவர் இங்கேதான் தங்கி இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும் தவக்காலத்தில் பங்கு கொண்டு இன்று புனித வெள்ளி என்பதால் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அப்போது பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் கை, கால்களில் இருந்து ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான கிறிஸ்துவர்கள் கார்மல் ஆசிரமத்துக்கு வந்து ஜோஸ்பின் விமலா உடலில் இருந்து ரத்தம் வருவதைப் பார்வையிட்டனர்.இதுபோல தொடர்ந்து 11 ஆண்டுகளாக புனித வெள்ளி தினத்தன்று இவரது கை, கால்களில் ரத்தம் வழிந்து வருவதாக கூறப்படுகிறது.
Source: http://www.dinamani.com/

காந்தி தேசத்தந்தை என்பதற்கு எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை தகவல் ஆணையம் அறிவிப்பு

லக்னோ: மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை அந்தஸ்து எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்த மாணவிக்கு இது குறித்த தகவல் இல்லை என்ற பதிலே தகவல் ஆணையத்திடம் இருந்து கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா பரஷ்ஹார் (10 வயது). இவர் அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து 6 ஆம் வகுப்பு மாணவி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் மத்திய தகவல் அறியும் ஆணையருக்கு அனுப்பிய மனுவில் இந்தியாவின்

மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு

இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன. 
 மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாh'; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Source: http://www.virakesari.lk

Thursday, April 5, 2012

ஆசனப்பட்டி அணியாவிட்டால் 1,000 ரூபா அபராதம்

ஆசனப்பட்டி அணியாமல் வானம் செலுத்துவோருக்கு அதே இடத்தில் உடனடி தண்ட பணமாக 1,000 ரூபாவை விதிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது



voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator